Monday, May 12, 2008

ரூ. 3.20 லட்சம் உதவித் தொகை: கருணாநிதி வழங்கினார்

சென்னை, மே 11: அறக்கட்டளை மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக 32 பேருக்கு ரூ. 3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்த ரூ. 5 கோடி வைப்பு நிதி யாக போடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியில், கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த வட்டியில் இருந்து 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவித் தொகையாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2005-ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.83.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: