Wednesday, April 16, 2008

மதுக்கடைகளை அகற்றக்கோரி பாஜக கையெழுத்து இயக்கம்

சென்னை, ஏப். 15: சென்னை கே.கே. நகரில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக் கடைகளை அகற்றக்கோரி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

கே.கே. நகர் காமராஜர் சாலையில் இரண்டு பள்ளிகளுக்கு நடுவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனை அகற்றக்கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கையெழுத்து இயக் கத்தை தொடங்கி வைத்து பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் பேசியது:

தமிழகத்தில் 1980-க்கு முன்பு மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் இன்று அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.மதுக்கடைகளை நடத்துவதோடு பார் வசதியையும் அரசே ஏற்படுத்தி தந்துள் ளது. இதனால் குடிப்பவர்க ளின் எண்ணிக்கை அதிக மாகி வருகிறது.

குடிப்பதை தடுக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவதால் பெண்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுக்கடை வருமானத்தை நம்பிதான் தமிழக அரசு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அரசு அகற்ற வேண் டும்.தமிழகத்தில் பூரண மதுவி லக்கை கொண்டு வரவேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என்றார் இல.கணேசன்.

பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் தமிழிசை சௌந்திரராஜன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் வாதம்

சென்னை, ஏப். 15: தமிழக சட் டப் பேரவையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது. மார்ச் 11 - ம் தேதி பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன், "எம்.எல்.ஏ.க்களுக்கு 2 கிரவுண்டு வீட்டுமனை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமியும், இதே கோரிக்கையை வலியு றுத்திப் பேசினார். அப்போது, குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஞானசேக ரன், "எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு கேட்கும்போது கம்யூ னிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ஊதிய உயர்வு அளித்தால் ஏற்றுக் கொள்கிறார் கள்' என்றார்.

இந்தப் பிரச்னையை சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் தலைவர் கோவிந்தசாமி எழுப்பினார். மார்ச் 11-ம் தேதி ஞானசேகரன் கூறிய சில வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப் போது நடைபெற்ற விவாதம்:

ஞானசேகரன் (காங்கிரஸ்):

நான் சொல்லாத தகவலை சொன் னதாக சொல்வது அழகல்ல. ஹைதராபாத், பெங்களூரில் உள்ளது போல சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தனியாக காலனி அமைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுத்தேன்.

ஆர்.எம். பழனிச்சாமி (காங்கிரஸ்):

எம்.எல்.ஏக்களுக்கு 2 கிர வுண்டு வீட்டுமனையை நாங்கள் இலவசமாக கேட்கவில்லை. சலுகை விலையில் வழங்குமாறு தான் கோரிக்கை வைத்தோம். நாங்கள் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு தவறாக பேசக்கூடாது.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

எம்.எல்.ஏக்களுக்கு 2 கிரவுண்டு வீட்டுமனை கொடுக்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரிக்கை வைத்தார். அது அவரது உரிமை. ஆனால் அவர் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக என்று சொன்னதால் எங்கள் கட்சியின் கொள்கையை எடுத்துக் கூறினோம் என்றார்.

"ஞானசேகரன் கூறிய வார்த்தையை பேரவை அவைக் குறிப் பில் இருந்து நீக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி தொடர்ந்து வலியுறுத்தார். பேரவை அவைக் குறிப்பைப் பார்த்து விட்டு நீக்குவதாக பேரவைத் தலைவர் கூறியதும், இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.பின்னர், பேரவை அவைக் குறிப்பில் இருந்து குறிப்பிட்ட வார்த்தையை நீக்குவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இந்த ஆண்டு 25,495 வீடுகள் கட்டப்படும்

சென்னை, ஏப். 15: இந்த நிதி ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 25,495 வீடுகள் கட்டப்படும் என்று குடிசை மாற்று வாரியத்துறை அமைச் சர் சுப. தங்கவேலன் தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை குடிசை மாற்றுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

இதுவரை குடிசை மாற்று வாரியத் தின் மூலம் 1.20 லட்சம் வீடுகள் கட்டப் பட்டுள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளில் 12,877 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பு நிதி யாண்டில் 25,495 வீடுகள் கட்டப்படும்.

சுனாமி வீடுகள்:

ராஜீவ் காந்தி சுனாமி புனரமைப்புத் திட்டத்தின் மூலம் கட லோர மாவட்டங்களில் 200 மீட்டர் தொலைவிற்குள் சுனாமியால் பாதிக்கப் படக்கூடிய இடங்களில வசிக் கும் மக்களுக்கு வீடுகள் கட்டித் தர முடிவு செய் யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத் தின் கீழ் 221 வீடுக ளுக்கான கட்டு மானப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் 512 வீடுகளுக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள் ளன.

இதுதவிர தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ரூ. 198.03 கோடி செலவில் கூடு தலாக 5,658 வீடுகள் கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 6,391 வீடுகள் ரூ.223.69 கோடி செலவில் கட்டப்படும்.

2013-க்குள் 35,270 வீடுகள்:

ஜவா ஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 2013-க்குள் ரூ. 1,208.55 கோடி செலவில் 35,270 வீடு கள் கட்டி முடிக்கப்படும்.பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் பற்றி ஆராய வல்லுநர் குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 6,544 அடுக் குமாடி குடியிருப்புகளை இடித்து மீண் டும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.சுனாமி மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் சென்னை நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள பகுதிகளில் 2,862 குடியிருப்புகளும், வேறு திட்டத் தின் கீழ் வியாசர்பாடியில் உள்ள 270 குடி யிருப்புகளும், குப்பைமேடு பகுதியில் 16 குடியிருப்புகளும் இடிக்கப்பட்டு மீண் டும் கட்டப்படும்.

சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மொத்தம் 9,692 பழுதடைந்த வீடு கள் இடிக்கப்பட்டு ரூ. 263.77 கோடி செலவில் மீண்டும் கட்ட, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது என்றார் தங்கவேலன்.

நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

சென்னை, ஏப். 15: தொலை பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை பேரவை கூடியதும் இந்தப் பிரச்னையை அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எழுப் பின. அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு பிரச்னை பற்றி பேசியிருக்கிறார். நான் அதற்கு விளக்கம் சொல்வதற்குள் கூச்சல் போட்டுக் கொண்டு வெளியேறினால் அந்த விளக்கம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று அர்த்தமல்ல.அந்த விளக்கம் கிடைத்தால் உண்மைகள் வெளியாகும் என்ற காரணத்தால்தான் அவர்கள் கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே றியதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே...:

இதே போன்ற செய்தி இதே பத்திரிகையில் ஏற்கெனவே வந்துள்ளது. அதுபற்றி ஜி.கே. மணி பேரவையில் பிரச்னையை எழுப்பினார்.தலைமைச் செயலாளர், மற்றொரு அதிகாரியுடன் ஒரு வழக்கு குறித்து பேசியது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு என்று நாம் பார்க்க வேண்டும்.

தேசிய நலனுக்கு விரோதமாகவோ, எதிர்க்கட்சிகளின் உரிமைகளை நசுக்க திட்டமிட்டு வழக்கு போடுவது சம்பந்தமாகவோ, சட்டத்துக்கு விரோதமாகவோ, நாம் போற்றிப் பாதுகாக்கின்ற நெறிமுறைகளுக்கு விரோதமாகவோ இருவரும் பேசிக் கொள்ள வில்லை. அப்படி எதுவும் அந்த உரையாடலில் இல்லை.

யார் வேண்டுமானாலும் டேப் செய்ய முடியும்:

ஆனால் தலைமைச் செயலாளரின் தொலை பேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று ஒரு செய்தியை வெளியிட அந்தப் பத்திரிகைக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேகமான விஞ்ஞான வளர்ச்சி யில் யார் வேண்டுமானாலும், எந்த போனில் வேண்டுமானா லும் "டேப்' செய்ய முடியும். செல்போனில் கூட டேப் செய்கிற முறை வந்திருக்கிறது.தலைமைச் செயலாளருக்கும், இன்னொரு அதிகாரிக்கும் இடையே நடந்ததாக வந்துள்ள தொலைபேசி உரையாடல் எப்படி பத்திரிகையில் வந்தது? யார் தந்தது? என்பதை உங்ளைப் போலவே நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

தலைமைச் செயலாளரும், அந்த அதிகாரியும் பேசியது இவைதான் என்றால் அதில் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. இருந்தாலும் இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். இந்தப் பிரச்னையில் மிகுந்த எச் சரிக்கை உணர்வோடு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி. சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஜி.கே.மணி, கோவிந்தசாமி, சிவபுண்ணி யம் ஆகியோர் கூறியிருக்கிறார் கள்.ஏதோ அரசாங்கமே தூண்டி விட்டு ஒட்டுக் கேட்டிருப்பதைப் போல ஞானசேகரன் பேசியிருக்கிறார். அது அவரது பாணி. அதற்காக நான் கவலைப்படவில்லை.

விஞ்ஞானம் இன்று மலிவானதாக மட்டுமல்ல எளிமையானதாகவும் இருக்கிறது. என் வீட்டில் என்னால் கையாள முடியாத, சரி செய்ய முடியாத டி.வி.யை 10 வய துக்கும் குறைவான எனது பேரன் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடுகிறான். அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. இதையெல்லாம் படித்து, தேர்ச்சி பெற்றுதான் ஒட்டுக் கேட்க வேண்டும் என்பதில்லை.

ஒரு பைத்தியக்காரன்கூட இதை செய்ய முடியும். பேசக்கூடாததை தலைமைச் செயலர் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் பேசி அது வெளிவந்தி ருந்தால் அது தவறு. அதற்காக நாம் தலைகுனிய வேண்டும். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நடந்தது நிர்வாகப் பணி பற்றி உரையாடல்தான் என்றார் முதல்வர்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் அரசுக்கு விடப்பட்ட சவால்: காங்கிரஸ்

சென்னை, ஏப். 15: தலைமைச் செயலாளரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது அரசு நிர்வாகத்துக்கு விடப்பட்ட சவால் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். பேரவையில் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம்:

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

தலைமைச் செயலாளர் பேசியதை ஒட்டுக்கேட்டது யார்? அரசாங்கத்தைவிட சக்தி படைத்தவர்கள் எங்கே இருக் கிறார்கள்? இது அரசு நிர்வாகத்துக்கு விடப்பட்ட சவால். இதனை முளையிலேயே வெட்டி எறிய வேண்டும்.

ஜி.கே. மணி (பாமக):

பேரவையில் ஏற்கெனவே இதுபோன்ற பிரச்னையை எழுப்பியபோது பத்திரிகையில் வந்த செய்தியை வைத்து பேசக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி மறுப்பு தெரிவித்தார். முதல்வர் சொன்னதில் நியாயம் இருக்கும் என்று நாங்கள் அமைதி காத்தோம். ஆனால் அதே பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, தலைமைச் செயலாளரின் தொலைபேசியை ஒட்டுக்கேட் பது என்பதும் வேதனையைத் தருகிறது. அந்தப் பத்திரிகை தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறியுள் ளது.

டி. சுதர்சனம் (காங்கிரஸ்):

மக்களை திசை திருப்பு வதற்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாதி களை அரசு கண்காணிக்க வேண்டியுள்ளது. நாட் டில் ஏதாவது நடந்துவிட்டால் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறோம். தலைமைச் செயலாளரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டிருந்தால் அது தவறு. எந்த அரசும் இது போன்ற காரியத்தை செய்யாது.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்ததன் மூலம் மிகப்பெரிய ஜனநாயகக் கடமையை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி யுள்ளார்.

கண்ணப்பன் (மதிமுக):

பத்திரிகையில் மட்டுமல்ல தொலைக்காட்சியிலும் கூட தலைமைச் செய லாளரின் உரையாடல் வெளியாகி உள்ளது. இந்த உரையாடல் எப்படி அவர்களுக்கு கிடைத்தது. இதனைக் கண்டித்து மதிமுக வெளிநடப்பு செய்கிறது.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

ஒட்டுக் கேட்டது உண்மை என்றால் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசியல் ஆக்க கூடாது.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

உளவுத்துறையே தலைமைச் செயலாளரின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்யலாமா?

பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு: இருவர் சஸ்பெண்ட்

சென்னை, ஏப். 15: தமிழக சட்டப் பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர். அக்கட்சியைச் சேர்ந்த கோ.அரி, வி.பி. கலைராஜன் ஆகி யோர் நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவாறு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவை கூடியதும் உளவுத் துறையினரால் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி ஒட் டுக் கேட்கப்படுவதாக வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஓ. பன் னீர்செல்வம் பிரச்னையைக் கிளப் பினார்.அதற்கு ஞாயிற்றுக்கிழமையே அரசு விளக்கம் அளித்து விட்டது என்று கூறி பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார்.

அப்போது குறுக் கிட்ட முதல்வர் கருணாநிதி, "அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி களை ஒட்டுக் கேட்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை தவறு அல்லது சரி என்று வாதிட்டால் அதற்கு பதில ளிக்க தயாராக இருக்கிறேன்' என்றார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி கொடுத்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

பதிலளிக்க அரசு தயார்:

அப் போது முதல்வர் கருணாநிதி எழுந்து, "எதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ அதனைச் சொன்னால் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளது' என்றார். முதல்வர் பேச ஆரம்பித்த பிறகும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் "ராஜிநாமா செய், ராஜி நாமா செய்' என்று கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி பேரவைத் தலைவர் எச்சரித்தார். ஆனாலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறு இருந்தனர். உடனே அவை முன்னரும், நிதி அமைச்சருமான க. அன்பழகன் எழுந்து, "முதல்வர் பேசும்போது இப்படி நடந்து கொள்வதைவிட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்வது நல்லது' என்றார்.

அதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். காவலர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக்குள் நுழைந்ததும் அதிமுகவினர் தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரவையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இருவர் சஸ்பெண்ட்:

பேரவையில் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன், வரு வாய்த்துறை அமைச்சர் ஐ. பெரி யசாமி இருவரும் தங்களது துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை முடித்ததும், அவை முன்னவரும், நிதி அமைச்சருமான க. அன்பழகன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசியதாவது:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் எழுப்பிய பிரச்னை குறித்து முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏவான வி.பி.கலைராஜன் தனது இருக்கையில் எழுந்து, முதல்வரின் எதிரில் நின்றுகொண்டு அவரது பேச்சை தடுக்க முற்பட்டார். அதுபோல மற்றொரு அதிமுக எம்.எல்.ஏவான கோ. அரி, முதல்வர் பேச முடியாதபடி கூச்சலிட்டார். எனவே அவர்கள் இருவரையும் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களில் கலந்து கொள்ள முடியாதபடி தாற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

பிறகு இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து வி.பி. கலைராஜன், கோ. அரி இருவரும் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

சிறைத் துறை பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

பேரவையில் செவ்வாய்க்கிழமை வருவாய், வீட்டுவசதி, சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து ஐ. பெரியசாமி பேசியதாவது:

சிறைத் துறை பணியாளர்களுக்கு ரூ. 16.36 லட்சம் செலவில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும். ரூ. 6.80 லட்சம் செலவில் மதுரை மத்திய சிறைக்குப் புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்படும். நாகர்கோவில், திண்டுக்கல் மாவட்ட சிறைகளுக்கு ரூ. 9.48 லட்சம் செலவில் இரண்டு ஜீப்புகள் வழங்கப்படும்.

சிறைவாசிகள் பயனுள்ள முறையில் நேரத்தை செலவிட. சுயமாக சம்பாதிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பனியன் கழிவுகளிலிருந்து நூலைப் பிரித்தெடுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

மாணவர்களுக்கு இலவச பண்பாட்டு பயிற்சி முகாம்

சென்னை, ஏப். 14: காஞ்சி காமகோடி பீடம் சென்னபுரி பக்தஜன சமாஜம் ஆதர வோடு ஜனக்கல்யாண் அமைப்பு 11 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச பண்பாட்டு பயிற்சி முகாமை நடத்துகிறது. ஏப்ரல் 27 முதல் மே 4-ம் தேதி வரை நடக்கும் முகாமில் உபநயமான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை இலவசம்.

இந்த முகாமில் சேர விருப் பம் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களுடன் சுய விலாசமிட்ட ரூ. 5 தபால் உறையுடன் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தலைவர், ஜனக்கல்யாண் சென்னை மாவட் டம், 7, மாநகராட்சி பள்ளி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34.

கொடநாடு எஸ்டேட்டில் அம்பேத்கர் படத்துக்கு ஜெயலலிதா மரியாதை

சென்னை, ஏப். 14: அதிமுக சார்பில் அம்பேத்கரின் 118-வது பிறந்த நாள் விழா நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலா ளர் கொடநாடு எஸ்டேட்டில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில்:

சென்னை ஆர்க்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சென்னை, ஏப். 14: சென்னை யில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 118-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மு.க. ஸ்டாலின்:

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பரிதி இளம் வழுதி, உ. மதிவாணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக சென்னை துறைமுக வளாகத்திலுள்ள அம்பேத் கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணன் கொண்டுவந்த 118 கிலோ கேக்கை எம். கிருஷ்ணசாமி வெட்டினார்.

பாமக:

சென்னை துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டி ருந்த அம்பேத்கர் படத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி. உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு:

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா, ஆலந்தூர் நகராட்சித் தலைவர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்னை பல்லாவரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மார்க்சிஸ்ட்:

சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரத ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் தே. லட்சுமணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் க. பீமாராவ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட்:

சென்னை துறைமுக வளாகத் தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூ னிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

பாஜக:

பாஜக சார்பில் அக் கட்சியின் தேசியச் செயலாளர் சு. திருநாவுக்கரசர், மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மதிமுக:

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கண்ணப்பன், பட அதிபர் தாணு, துணைப் பொதுச்செய லாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

தேமுதிக:

சென்னை துறை முக வாயிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலையச் செயலாளர் ப. பார்த்தசாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி:

கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராய ணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள்:

கோயம்பேட்டில் உள்ள அம் பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாலை அணி வித்தனர்.

திராவிடர் கழகம்:

சென்னை நேரு உள் விளையாட்டரங்க முகப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பொரு ளாளர் கோ. சாமிதுரை, பொதுச்செயலாளர் கலி. பூங் குன்றன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

எஸ். ஜெகத்ரட்சகன்:

சென்னை அடையாறு கிரீனவேஸ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகன், பொதுச்செயலாளர் விருகை ஜி.ஜெயராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

டாக்டர் சேதுராமன்:

சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் ந. சேதுராமன், பொதுச்செயலாளர் ச. இசக்கி முத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

வை. பாலசுந்தரம்:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம் பேத்கரின் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வை. பாலசுந்தரம், கட் சியின் சட்டத்துறை செயலாளர் வை. ராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

ராகுல் பிரதமரானால் மகிழ்ச்சி: கருணாநிதி

சென்னை, ஏப். 14: ராகுல் காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். "மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் சிங்கும், பிரபுல் பட்டேலும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் ராகுல் காந்தி என்று கூறியிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பிரச்னையில் "கிரீமி லேயர்' குறித்து மறு பரிசீலனை செய்ய பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்க உள்ள திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் இட ஒதுக்கீடு பிரச்னை பற்றி விரிவாகப் பேச இருக்கிறோம் என்றார் முதல் வர் கருணாநிதி.