Friday, April 4, 2008
சென்னைக்கு கூடுதலாக1.5 கோடி லிட்டர் குடிநீர்
கடல் நீரை குடிநீராக்கும்நிலையம், சென்னைக்கு அருகில் மீஞ்சூரில் அமைய உள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.ஜூன் மாதத்தில் இருந்து தினமும் ஒன்றரை கோடி லிட்டர்குடிநீரும், செப்டம்பர் மாதத்திலிருந்து 10 கோடி லிட்டர் குடிநீரும் கிடைக்கும்.சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலியில்கடல் நீரிலிருந்து 10 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கும் நிலையம், மேலும் ஒன்று அமைய உள்ளது. ரூ.994கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் உதவியுடன்இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 300 கோடிபெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காகவிரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்தியஅரசு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் ஒப்புதலும், நிதி உதவியும் பெற நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்' என்ற பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ. 300 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
அதிவேக வட்டச் சாலை:
சென்னையில் உள்ள கூவம்,அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், மாம்பலம் கால்வாய்ஆகியவற்றின் கரைகளில்உள்ள உபரி இடங்களில் அதிவேக வட்டச் சாலை அமைக்கப்படும்.120 கி.மீ. நீளமுள்ள இந்தச்சுற்றுச்சாலை, நான்கு முதல்ஆறு வழிப் பாதைகளைக்கொண்டதாக அமையும்.இதில் தேசிய நெடுஞ்சாலைஆணையத்தால் அமைக்கப்பட உள்ள 60 கி.மீ.தவிர, மீதமுள்ள 60 கி.மீ சாலை மாநில அரசால்அமைக்கப்படும்.ரூ. 2,300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளஇந்தத் திட்டத்தால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
கடலுக்கு அடியில் மீன் அருங்காட்சியகம்:
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காட்டில் கடலுக்கு அடியில் உலகத்தரம் வாய்ந்த மீன் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
தாட்கோ கடன் ரூ. 5.5 கோடி தள்ளுபடி
ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 5.5 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிட மாணவர்களுக்காக வரும் நிதி ஆண்டில் 25 புதியமாணவர் இல்லங்கள் திறக்கப்படும். தனியார் கட்டடங்களில்செயல்பட்டு வரும் 25 மாணவர் இல்லங்களுக்கு ரூ. 12.5 கோடிசெலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
எட்டு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளிகளும், மூன்று பழங்குடியினர் உறைவிட நடுநிலைப் பள்ளிகளும் ரூ. 3.68 கோடி செலவில்உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
புத்தக பதிப்பாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள், நரிக்குறவர்கள் ஆகியோருக்கு தனி நலவாரியம்
புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அந்தத்துறையில் பணிபுரிபவர்களின்நலனுக்காக தனி நலவாரியம்அமைக்கப்படும்.தமிழ்நாட்டில் உள்ள மூன்றுலட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில்,கைத்தறி நெசவாளர்களுக்கு உள்ளது போல தனி நலவாரியம்அமைக்கப்படும்.நரிக்குறவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்என்று ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்தில் பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள்கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார்கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி நரிக்குறவர்களுக்குகல்வி, மாற்றுத் தொழில் புரிவதற்கான உதவி அளிப்பதற்காகதனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கேபிள் டிவி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் கேபிள்டிவி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்காக தனிநலவாரியம் அமைக்கப்படும்
பயிர்க் கடன் வட்டி குறைப்பு
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடனுக்கான வட்டி2006-2007-ம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும்,2007-2008-ம் ஆண்டில் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.விவசாய பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஏற்று பயிர்க்கடன் வரும் நிதி ஆண்டில் 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.2008-2009-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க ஆவன செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளுக்குரூ. 1,150 கோடி இழப்பீடு:
சுமார் ரூ. 7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த இரண்டுஆண்டுகளில் ரூ. 3,304 கோடிவழங்கப்பட்டது. வரும் நிதிஆண்டில் மேலும் ரூ. 1,150கோடி இழப்பீடு வழங்கப்படும்.
உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு:
தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக விவசாய உற்பத்தி 2006-2007-ம் ஆண்டில் 82.63 லட்சம்டன்னாக அதிகரித்தது. 2007-2008-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி ஒரு கோடி டன்னுக்கும் அதிகமாக இருக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதல்விலைகோதுமைக்கு இணையாக நெல்லுக்கும் உரிய விலைகிடைக்கச் செய்யும் நோக்கில்குவிண்டாலுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சன்ன ரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்குரூ. 825 ஆக உயர்ந்துள்ளது. நெல்லுக்கான கொள்முதல்விலையை ரூ. 1,000 ஆக உயர்த்தமத்திய அரசை மாநில அரசுதொடர்ந்து வலியுறுத்தும்.கடந்த ஆண்டில் வெள்ளத்தினால் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டநெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமைடந்தன. இந்த இழப்பை ஈடுகட்ட 3,60,954 விவசாயிகளுக்குரூ. 56.5 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர் காப்பீடுசெய்து கொள்ள உதவும் வகையில், காப்பீட்டுத் தொகையில் 50சதவீதத்தை அரசே வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்பயிர்க் காப்பீடு செய்து கொள்ள25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 40கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.18.75 லட்சம் ஏக்கரில்செம்மை நெல் சாகுபடி:குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறசெம்மை நெல் சாகுபடி முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை 10 லட்சம் ஏக்கரில்நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.விவசாயப் பணிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு,தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியம் வழங்கப்படும்.பயிறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆகியவை மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிறு வகைகளைகொள்முதல் செய்யும்.
விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுவங்கிகள் மூலம் கடன் பெறும் ஒரு லட்சம் விவசாயிகளை உறுப்பினர்களாகக்கொண்டு 10,000 சுய உதவிக் குழுக்கள்அமைக்கப்படும்.இந்தக் குழுக்களுக்கு அரசின் சார்பில்ரூ. 10 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.இதன் மூலம் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக உடனடியாகசுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெறலாம்.
இலவச மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டமின்வாரியத்துக்கு அரசின் மானியமாக, வரும் நிதி ஆண்டில் ரூ.268 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 கறவை மாடுகள்:மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 உயர் கலப்பின கறவைமாடுகள் வழங்கப்படும்.பால் உற்பத்தி செய்யத் தகுந்த 200 கிராமங்களில் தமிழ்நாடுபால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ. 22 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.இதனால் 5,500 பெண்கள் பயன் அடைவர்.
பிரகாஷ் காரத்துக்கு கருணாநிதி வாழ்த்து
தோழர் பிரகாஷ் காரத் மார்க்சிய சித்தாந்தங் களை முழுமையாகக் கற்று, தேர்ச்சி பெற்றவர். உழைக் கும் வர்க்கத்தின் உயர்வுக்காக ஓயாது பாடுபடுபவர். அவ ருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி யின் பல்வேறு பொறுப்புக ளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன்.
வெள்ளச் சேதத்தை பார்வையிட மத்தியக் குழு நாளை வருகை
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வெள்ளச் சேதத்தைப் பார் வையிட மத்தியக் குழு தமிழகம் வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களுக்குச் சென்று, வெள்ளச் சேதத்தை மத்திய குழு ஆய்வு செய்ய இருக்கிறது.தமிழகத்தில் மார்ச் மாதம் ஏற் பட்ட பெருமழை, வெள்ளத்தி னால் பெருத்த சேதம் ஏற்பட்டது.24 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் அதிகமான ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழந்தன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்க ளுக்கு நிவாரணம் வழங்க, பேரி டர் நிவாரண நிதியிலிருந்து ரூ.100 கோடி வழங்கி மார்ச் 25-ம் தேதி அரசு உத்தரவிட்டது.பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடைகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க, கூடுதலாக ரூ. 75 கோடி வழங்க முதல்வர் கருணாநிதி உத்த ரவிட்டுள்ளார்.அதையும் சேர்த்து, வெள்ள நிவாரணத்துக்காக இதுவரை ரூ.175 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர்ச் சேதத்துக்கு, இரண்டு ஏக்கர் அளவுக்கு மட்டுமே நிவார ணத் தொகை வழங்கப்படும் என்ற உச்சவரம்பை நீக்கி சேதமடைந்த அனைத்துப் பயிர்களுக்கும், ஏக்க ருக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.அதுபோல கால்நடை இழப்புக் கும், எண்ணிக்கை உச்சவரம்பை தளர்த்தி இறந்த அனைத்துக் கால் நடைகளுக்கும் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது.
நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: சட்டப் பேரவையில் வாழ்த்து
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புக ளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன.இந்தப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களைக் கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் வெள் ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதம் இருந்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், விஜயகாந்த் எழுந்து, உண்ணாவிரதம் இருந்து வரும் திரையுலகினருக்கு பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் சார்பில் முதல்வர் அல்லது அவை முன்னவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
உடனே அவை முன்னவர் க. அன்பழகன், உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும், அனைத்து உறுப்பினர்களின் சார்பில் நன்றி தெரிவித்தார்.அதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மேஜையைத் தட்டி வர வேற்றனர்.
காலியிடங்களை நிரப்பாமல், வேளாண்துறையை சீரமைத்ததன் மர்மம் என்ன?
சென்னை, ஏப். 4: காலியிடங்களை நிரப்பாமல், வேளாண்து றையை மறுசீரமைத்ததன் மர்மம் என்ன? என்று அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ண மூர்த்தி சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பி னார்.பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
காலியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகுதான் வேளாண்துறை மறு சீரமைக்கப்படும் என்று அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார். ஆனால் காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே, வேளாண்துறை மறு சீரமைக்கப்பட்டுள் ளது. அதன் மர்மம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் கள். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் இல்லை.எண்ணெய் பனையிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் அமைப்பது பற்றி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஆலைகள் எப்போது அமையும்? எத்தனை ஏக்கரில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங் கள் இல்லை. இது பற்றி அமைச்சர் விளக்கம் தர வேண்டும்.
வெளிநாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு, சிறப்பு பொரு ளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.காவிரி நீர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, பாலாறு பிரச்னை ஆகியவை தீராத பிரச்னைகளாக உள்ளன. இவற்றை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:
வேளாண்துறையில் 8,600-க்கும் அதிகமான பணியாளர்கள் மூன்று அடுக்கு முறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர். இப்போது அவர்கள் இரண்டு அடுக்கு முறையில் வட்டார அளவில் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். விவசாயிகள் ஒரே இடத்தில் தொழில்நுட்பத் தக வல்களை பெற்று பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்து டன்தான் வேளாண்துறை சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மர்மமும் இல்லை.
நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க முடியாது
ஜி. லதா (மார்க்சிஸ்ட்):
குடியாத் தம் நகராட்சியில் மூன்று வார்டுக ளில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார் கள். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. அவர் களுக்கு பட்டா வழங்க அரசு முன்வருமா?
அமைச்சர் ஐ.பெரியசாமி:
ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலை புறம்போக்காக இருந்தால் பட்டா வழங்க முடியாது.அப்படி பட்டா வழங்கினால் எதிர்காலத்தில் விவ சாய நிலங்கள் பாதிக்கப்படும்.
பி.கே. சேகர்பாபு (அதிமுக):
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, எழில் நகர், எம்.ஜி.ஆர் நக ரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படுமா?
அமைச்சர் ஐ. பெரியசாமி:
திமுக அரசு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பட்டா வழங்கி வரு கிறது. பட்டா வழங்குவதற்கான குறைந்தபட்சத் தொகையை செலுத் திய பிறகு எழில் நகர், எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு சென்னை மாநக ராட்சி அனுமதி பெற்று பட்டா வழங்கப்படும்.
பி.கே. சேகர்பாபு (அதிமுக):
அதி முக ஆட்சியில் ரூ. 3,600 கொடுத்தால் கிரயப் பத்திரம் வழங்கப்பட்டது. இப் போது ரூ. 60,000 கொடுத்தால்தான் கிரயப் பத்திரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ரூ. 3,600 பெற்றுக் கொண்டு கிரயப் பத்திரம் வழங்க வேண்டும்.
அமைச்சர் ஐ. பெரியசாமி:
கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சி யில் 4,16,423 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜி.கே. மணி (பாமக):
திருப்பூர், மேட்டூரிலும் பட்டா வழங்க வேண்டி யுள்ளது. இந்தப் பகுதிகளில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ஐ. பெரியசாமி:
சட்ட மன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும்.
அங்கன்வாடி மையங்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுவதில்லை: பாமக புகார்
கே.வி. ராமநாதன் (பாமக):
அங்கன்வாடி மையங்களில் குழந் தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்க வேண்டும்.தரமான உணவு வழங்க, தரமான அரிசி வழங்க வேண்டும்.சில மையங்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. சமைப்ப தற்கு எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும். பவானி தொகுதி, அட் டவணைப்புதூர் கிராமம், கோண மூக்கனூரில் அங்கன்வாடி மையம் கட்ட அரசு முன்வருமா?
அமைச்சர் பூங்கோதை:
அட்ட வணைப்புதூர் ஊராட்சியில் அங் கன்வாடி மையத்துக்கு நிலம் ஒதுக்க அந்த ஊராட்சியில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சமூக நலத்துறையின் கீழ் நிலம் பதிவு செய்யப்பட்ட பிறகு சொந் தக் கட்டடம் கட்டப்படும்.தமிழகத்தில் 50,043 அங்கன் வாடி மையங்கள் உள்ளன. அவற் றில் 80 சதவீத மையங்கள் சொந் தக் கட்டடத்தில் இயங்குகின்றன.தற்போது இதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை.சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்துதான் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
எல்லா மையங்களுக் கும் தரமான அரிசியும், பருப்பும் அனுப்பப்படுகிறது.கடந்த அதிமுக ஆட்சியில் மைசூர் பருப்பு என்ற பெயரில் தர மற்ற பருப்பு வழங்கப்பட்டது.திமுக ஆட்சிக்கு வந்ததும் தர மான துவரம் பருப்பு வழங்கப்படு கிறது. இந்தியாவிலேயே அங்கன் வாடி மையங்கள் தமிழகத்தில் தான் சிறப்பாகச் செயல்படுகின் றன.
ஆன் -லைன் மூலம் தினமும் 11,000 டிக்கெட்டுகள் முன்பதிவு
டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்):
இரண்டு ரூபாய் டோக்கன் மூலம் அரசுப் பேருந்து களில் முன்பதிவு செய்ய, முன்பு வசதி இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீண்டும் இந்த வசதியை ஏற்படுத்த வேண் டும்.
அமைச்சர் கே.என். நேரு:
இப் போது ஆன்-லைன் மூலம் முன்ப திவு செய்யும் வசதி உள்ளது. அர சுப் பேருந்துகளில் பயணம் செய்ய, ஆன்-லைன் மூலம் தின மும் 11,000 டிக்கெட்டுகள் முன்ப திவு செய்யப்படுகின்றன.கோயம்பேடு பேருந்து நிலை யத்தில், டோக்கன் மூலம் முன்ப திவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டு வருவது பற்றி அதிகாரி களுடன் பேசி முடிவு எடுக்கப்ப டும்.
என்.ஆர். ரங்கராஜன் (காங்கி ரஸ்):
பட்டுக்கோட்டையில் இருந்து புதுச்சேரிக்கு புதிதாக பேருந்துகள் இயக்கப்படுமா?
அமைச்சர் கே.என். நேரு:
பட் டுக்கோட்டையில் இருந்து மதுக் கூர், மன்னார்குடி, வடலூர், புதுச் சேரி, கடலூர் வழியாக சென்னை வரும் தடத்தின் நீளம் 205 கி.மீ ஆகும். இரு மாநில அரசின் ஒப்பு தல் பெற்று, இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க அரசு நடவ டிக்கை எடுக்கும்.
தமிழரசு (பாமக):
சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் அர சுப் பேருந்துகள் ஓமலூர் பஸ் நிலையத்துக்கு வருவதில்லை.எனவே ஓமலூரில் இருந்து பெங்க ளூருக்கு பேருந்துகள் இயக்க அரசு முன்வருமா?
அமைச்சர் கே.என். நேரு:
ஓமலூரில் இருந்து சேலம் வந்துச் செல்ல பேருந்துகள் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
கூட்டுறவுச் சங்க செயலர் பதவிக்கு வங்கி அதிகாரி நியமிக்கப்படுவாரா?
மின் தட்டுப்பாட்டுக்கு திமுகவே காரணம்: அதிமுக எம்.எல்.ஏ.
தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு திமுக அரசின் செயலற்றத் தன்மையே காரணம். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் தட்டுப்பாடும் வந்து விடுகிறது.மின்தட்டுப்பாட்டை சரிசெய்ய முன்வராமல், மனதில் தோன்றும் காரணங்களைக் கூறியும், தவறான புள்ளிவிவரங்களைத் தந்தும் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மக்களைத் திசைத்திருப்பி வருகி றார்.முதலில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தேவையான டிரான்ஸ்பார் மர்கள் அமைக்கப்படவில்லை. அதனால்தான் மின் தட்டுப்பாடு, பற்றாக்குறை என்றார்.
பிறகு அதிமுக ஆட்சியில் தொலைநோக்குப் பார்வையோடு, போதுமான மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தவில்லை அதனால் மின் தட்டுப்பாடு என்றார்.1996-2001 திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதைவிட கூடுதலாக 4,000 டிரான்பார்மர்கள் அதாவது 25,403 டிரான்ஸ்பார்மர்கள் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டன.2,047 மெகாவாட்டுக்கு திட்டங்கள்: 2001-2006 அதிமுக ஆட் சிக் காலத்தில் 2,047 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால் 1996-2001 திமுக ஆட்சியில் வெறும் 560.69 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவே திட்டம் தீட்டப்பட்டது.ரூ. 5,600 கோடி மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதுபோல மத்திய அனல் மின் கழகத்துடன் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.உண்மை இவ்வாறு இருக்கும்போது மின் தட்டுப்பாட்டுக்கு அதி முகதான் காரணம் என்று சொல்ல திமுக அரசுக்கு தார்மிக உரிமை இல்லை.
மத்திய அரசு தடை: அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட மின் திட்டங்களுக்கு அப்போதைய வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தடையாக இருந்தார் என்றார்.
அமைதியாக இருக்க முடியாது
பக்கத்து மாநிலமான கர்நாடகத் தில் தமிழக பஸ்கள் எரிக்கப்படும் போதும், பெங்களூர் தமிழ்சங்கம் தாக்கப்படும்போதும், தமிழக மக்கள் பயத்துடன் இருக்கும்போதும் முதல் வர் என்ற முறையில் நான் அமைதி யாக இருக்க முடியாது.""கர்நாடகத்தில் எதிரொலித்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு, நாங்கள் மூத்த அரசியல் தலைவராக மதிக்கும் தமிழக முதல்வர் கருணா நிதி தெரிவித்த, சில கடுமையாக வார்த்தைகளே காரணம்'' என்று கர் நாடக முன்னாள் முதல்வரும் எனது நீண்டநாள் நண்பருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக பத்திரிகைக ளில் செய்தி வந்துள்ளது. இது என்னை மிகுந்த வேதனைக்குள் ளாக்கி இருக்கிறது.
கர்நாடகத்திற்கு எதிராக நான் பொது இடங்களிலோ அல்லது ஏப் ரல் 1-ம் தேதி சட்டப் பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசும்போதோ கடுமையான வார்த் தைகள் எதையும் பயன்படுத்த வில்லை.ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா, கூறியபடி, நான் என்ன பேசினேன் என்பதை சுருக்கமாக தருகிறேன்.""நாம் சகோதர மனப்பான்மையுடன் இருப்பவர்கள். நாம் ஒருவருக்கொரு வர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்ற கொள்கை உடைய வன்.சில சமூக விரோதிகள் இதில் ஆதாயம்தேட முயற்சி செய்து வருகி றார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற் காக பொறுமை காத்து வருகிறேன்'' என்று தான், நான் பேசினேன்.
என் னுடைய இந்தப் பேச்சு மார்ச் 31-ம் தேதி நாளிதழ்களில் வெளி வந்துள் ளது. அவற்றின் சுருக்கம்: ஒகேனக்கல் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாக முதல்வர் கூறியுள்ளார். இந்தத் திட் டத்துக்கு கர்நாடக அரசும் அனுமதி அளித்து விட்டது.இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், அரசியல் லாபத்துக்காக இந்தப் பிரச்னையை பெரிதுபடுத்தி சதிச் செயல்களில் ஈடு பட்டுள்ளனர் என்று தமிழக முதல் வர் கூறியுள்ளார்.எனது பேச்சைக் கவனமாகக் கவ னித்தால், என் வார்த்தைகளை யாரும் தவறாக பயன்படுத்த முடி யாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.தமிழகத்தின் உரிமைக்காக, ஜன நாயக முறைப்படி சட்டத்துக்கு உள் பட்டு தமிழக அரசு போராடி வருகி றது என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
பார்வையாளர் மாடத்தில் கனிமொழி, ஜோதி
முதல்வரின் மகளும், மாநி லங்களவை உறுப்பினரு மான கவிஞர் கனிமொழியும் பார்வையாளர் மாடத்தில் இருந்து அவை நிகழ்வுக ளைக் கவனித்தார்.
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: ஜி.கே. மணி
எதிர்பார்த்தது எதுவும் இல்லாத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் டாக தமிழக பட்ஜெட் உள்ளது.பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பொருளாதார ஆய்வு அறிக்கை, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதா, இல்லையா என்பது பற்றிய செயல் அறிக்கை, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு மக் களைச் சென்றடைந்துள்ளன என்பது பற்றிய விளைவு தாக்க அறிக்கை ஆகிய மூன்று அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்:
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான் மையான மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 92 சாதியினருக்கு அளிக் கப்படும் 23 சதவீத இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட் டியலில் உள்ள 108 சாதியினருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இட ஒதுக் கீடும் மக்கள் தொகை அடிப்படையில் முழுமையாகச் சென்றடைவ தில்லை.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், பெரும்பான்மை சமுதா யமாக உள்ள வன்னிய சமுதாயத்துக்கு 9 சதவீத ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது. இதற்கான புள்ளிவிவரங்களை முதல்வரிடம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
தனியார்துறையில் இட ஒதுக்கீடு:
நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும்.தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்ப டுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களுக்கு பின்னடைவு பணியிடங்களுக் கான காலியிடங்களை நிரப்ப மீண் டும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்ப டுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் பொருளாதார ரீதியாக முனேனேறாமல் அந்த மாநிலம் முன்னேற முடியாது. எனவே அவர்கள் வங்கி மூலம் கடன் பெற்று பஸ் வாங்க அரசு உதவ வேண்டும். அந்த பஸ்களை வாடகைக்கு எடுத்து அரசு இயக்க வேண்டும்.கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி நெச வாளர்கள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் ஜி.கே. மணி.
விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
விலைவாசி உயர்ந்துள்ளது.ஆனால் பற்றாக்குறை இல்லை. பணம் இருந்தால் எவ்வளவு தங்கமும் வாங்கலாம். சிமென்ட்டும் வாங்கலாம்.கடத்தல் பேர்வழிகளாலும், பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலை வாசி உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அமைச் சரவைக் கூட்டத்தை கூட்டி, மத்திய அரசு சில நடவடிக்கைகள் எடுத் துள்ளது. அதன் விளைவாக விலைகள் குறையத் தொடங்கி உள்ளன.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
விலைவாசி உயர்வுக்கு பதுக் கல்காரர்கள் மட்டும் காரணம் அல்ல. ஆன் லைன் வர்த்தகம்தான் விலை உயர்வுக்குக் காரணம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத் திய அரசிடம் சரியான கொள்கை இல்லை.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
நல்லது நடந்தால் அதற்கு கம்யூ னிஸ்ட்டுகள் காரணம். தவறு நடந்தால் அதற்கு காங்கிரஸ்தான் கார ணம் என்ற ஒரு கொள்கையை கம்யூனிஸ்ட்டுகள் கடைப்பிடிக்கின்றனர்.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
பீட்டர் அல்போன்ஸ் சொல்வது சரிதான். காங்கிரஸ் அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம்.தவறு செய்தால் கண்டிப்போம்.நன்மாறன் (மார்க்சிஸ்ட்):விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியது காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் காலம் கடந்து எடுக் கப்பட்ட நடவடிக்கை.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
மேற்கு வங்க முதல்வரே, நேரிடையாக நந்திகிராம் சென்று, மக்கள் அனுமதி இல்லாமல் கையளவு நிலம்கூட எடுக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார். அதன் பிறகும் அரசியல் ஆதாயத்துக்காக இந்தப் பிரச்னையை சிலர் பெரிதுபடுத்தி வருகிறார்கள்.
சேலத்துக்கு மேட்டூர் நீர் சாத்தியமில்லை
ஜி.கே. மணி (பாமக):
சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் மேட்டூர் நீரைக் கொண்டு வர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
ஜி.கே.மணி சொல்வதைக் கேட்கும் போது இனிப்பாக இருக்கிறது.ஆனால் இதுபற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் அவ்வளவு உயரத் துக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது சாத்தியமே இல்லை என்று கூறிவிட்டனர். எனவே இது நிறைவேற்ற முடியாதத் திட் டம்.
ஜி.கே. மணி (பாமக):
மேட் டூர் அணையில் நீர் குறைவாக இருக்கும்போது தண்ணீரை அவ் வளவு உயரத்துக்கு ஏற்ற முடியா மல் இருக்கலாம். ஆனால் மேட் டூர் அணையில் நீர் நிரம்பி வழி யும்போது கொண்டு செல்ல லாம்.
அமைச்சர் துரைமுருகன்:
மேட்டூர் அணையின் கொள்ள ளவு 120 அடி. 120 அடியிலிருந்து 360 அடிக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது.
ஜி.கே.மணி (பாமக):
வேளாண் துறையில் மூன்று சத வீத வளர்ச்சிக்கூட இன்னும் எட் டப்படவில்லை. விவசாயத்தை விட்டு விவசாயிகள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.எனவே விவசாயத்துக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்க வேண் டும்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமு கம்:
வேளாண்மையைத் தொழி லாக ஏற்று தொழிற்கொள்கை யில் முதல்வர் கருணாநிதி அறி வித்துள்ளார்.புதிதாக அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கையின்படி.மற்ற தொழில்களுக்கு வழங்கப்ப டும் அனைத்துச் சலுகைகளும் வேளாண் தொழிலுக்கும் வழங் கப்படும்.
ஜி.கே. மணி (பாமக):
வெள் ளச் சேதம் போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது நிவார ணம் வழங்க, இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியம் ஒன்றை அமைக்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்:
இயற் கைப் பேரிழப்புகள் ஏற்படும் போது நிவாரணம் வழங்க மத் திய அரசின் ஆலோசனை யின்படி ஆண்டுக்கு ரூ. 250 கோடியில் நிதி ஒதுக்கப்படு கிறது.அதில் 75 சதவீத நிதியை மத்திய அரசு அளிக்கிறது.சேதம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக இருந்தால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று நிவாரணம் வழங்கப்படும்.
முரண்பாடுகளை சமன் செய்கிற பட்ஜெட்
பல்வேறு முரண்பாடுகளை சமன் செய்கிற பட்ஜெட்டாக, தமிழக பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட்டை பொருளாதார மேதை ப. சிதம்பரமே பாராட்டி உள்ளார். அதிக கற்பனை, நேர்முக சிந்தனை யோடு ஏழைகளின் வலியை உணர்ந்த முதல்வரால் மட்டுமே இதுபோன்ற சமநிலை பட்ஜெட்டை அளிக்க முடியும்.வயதாக வயதாக கற்பனை வளமும், சிந்திக்கும் ஆற்றலும், நகைச்சுவை ஆற்றலும் முதல்வரிடம் மெருகேறி வருகின்றன.இந்த வயதிலும் சுமார் 3 மணி நேரம் நிதி அமைச்சர் க. அன்ப ழகன் நின்று கொண்டே பட்ஜெட்டை படித்தார். அதற்கான ரகசிய சூத்திரத்தை எங்களுக்கும் அவர்கள் இருவரும் சொல்ல வேண்டும்.
மத்திய அரசு தனது நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகு தியை தமிழகத்துக்கு ஒதுக்கி வருகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அருண்கு மார், தமிழக அரசை "பீமா ஸ்டேட்' என்று வர்ணிக்கிற அள வுக்கு மத்தியில் நம் முதல்வருக்கு செல்வாக்கு உள்ளது.மரணத்திலிருந்து மீட்க முடியாது: ரூ. 7,000 கோடி விவ சாயக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. அதனை முன்மாதிரியாக கொண்டுதான் மத்திய அரசு ரூ. 60,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.இந்த நேரத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாவிட் டால் விவசாயிகளை மரணத்திலிருந்து மீட்க முடியாது.
மனைவிகூட மதிப்பதில்லை:
நேர்மையாகக் கடனைக் செலுத்திய விவசாயிகளை, அவர்களது மனைவிகள்கூட மதிப்பதில்லை. எனவே கடனைக்கட்டிய விவசாயிகளைப் போற்றும் விதமாக அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏக்கள் அதிகாரி களோடு தொடர்பு கொண்டு வளர்ச்சிப் பணிகளை கண்கா ணிக்க முடியும்.
நரகமாகி வரும் சென்னை:
சென்னை மாநகரம் மனிதர் கள் வாழத் தகுதியற்ற நரகமாக மாறி வருகிறது. இனி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கினால் சலுகைகள் ஏதும் இல்லை என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில் சென்னை மாநகரின் நெருக்கடியைக் குறைக்க முடியாது.
பெரியார் திரைப்படத்துக்கு நிதி உதவி அளித்ததுபோல காமராஜர் பற்றிய திரைப்படத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். சென்னையைச் சுற்றி பல இடங்களில் "அதிகார பத்திரம்' மூலம் நில மோசடி நடக்கிறது. இதனைத் தடுக்க வில்லங்க சான்றிதழில் அதிகாரப் பத்திரத்தையும சேர்க்க வேண்டும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
யாருடைய ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டன?
அமைச்சர் ஐ. பெரியசாமி:
1996-2001 அதிமுக ஆட்சியில் உலக வங்கியில் இருந்து ரூ. 1,000 கோடி கடன் பெற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடு கள் கட்டப்பட்டன.இந்த வீடுகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக கட்டப்பட்டதால் மக்கள் வாங்கவில்லை.அதிமுக ஆட்சியில் இனி வீடு கள் கட்டப்படாது என்று உத்தர விடப்பட்டது. திமுக ஆட்சியில் இதுவரை 40,000 வீடுகள் கட்டப் பட்டு பத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளன.இந்த ஆண்டு 22,000 வீடுகள் கட்ட தயாராக இருக்கிறோம்.விவசாயிகள் -ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஒப்பந்தம்: வீடுகள் கட்டுவதற்காக கடந்த 10 ஆண்டுக ளாக விவசாய நிலங்கள் எங்கும் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை.ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப் பட்ட நிலங்களை மீண்டும் கொடுக்க முடியாது.ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங் களை விவசாயிகள் நேரடியாகக் கேட்கவில்லை. எஸ்டேட் முதலா ளிகள் தான் விவசாயிகள் போர் வையில் நிலத்தை கைப்பற்றத் திட் டமிட்டு வருகிறார்கள். இதற்காக விவசாயிகளிடம் ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஒப்பந்தம் செய்துள் ளனர்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தின் மூலம் 1996-2001 திமுக ஆட் சியில் கட்டப்பட்ட வீடுகள் தரம் குறைவாக இருந்ததால் யாரும் வாங்கவில்லை. அதனால் தான் தாற்காலிகமாக வீடு கட்டுவ தில்லை என்று அதிமுக ஆட்சி யில் முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர் ஐ. பெரியசாமி:
அதி முக ஆட்சியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக கட்டப்பட்ட வீடுகளை திமுக அரசு விற்பனை செய்ய நட வடிக்கை எடுத்து வருகிறது. வீடு களை விற்பனை செய்யும் பணி யைத்தான் அதிமுக அரசு செய் தது.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :
இது பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கத் தயாரா? அமைச்சர் ஐ. பெரியசாமி: துறை மானியக் கோரிக்கையின் போது இதுபற்றிய புள்ளிவிவரங் களை அளிக்க தயாராக இருக்கி றேன்.
கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):
இடைத்தரகர்கள் தான் நிலத்தை மீண்டும் கேட்கி றார்கள். விவசாயிகள் கேட்க வில்லை என்று அமைச்சர் சொல் கிறார். ஆனால் பல இடங்களில் விவசாயிகள் நிலத்தைக் கேட்டு உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகி றார்கள்.
ஜி.கே. மணி (பாமக):
இடைத் தரகர்கள்தான் கேட்கிறார்கள் என்று சொல்வது தவறு. விவசாயி கள்தான் கேட்கிறார்கள்.அமைச்சர் ஐ. பெரியசாமி: ஒரு விவசாயி கூட நிலத்தைக் கேட்டு மனுக் கொடுக்கவில்லை.
தைரியம் இருந்தால் எழுந்து பேசுங்கள்
உடனே தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி கூச்சலிட்டனர்.செவ்வாய்க்கிழமையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலிட, அவர் களை நோக்கி, ""தைரியம் இருந்தால் எழுந்து பேசுங்கள்'' என்று பேர வைத் தலைவர் எச்சரித்தார்.இதைப் போல் தங்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக பாமக எம்.எல்.ஏக்களும் கூச்சலிட்டனர்.பாராட்டு தேவையில்லை: கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப் பினர் ஆர். சின்னசாமி, ""நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்பளித்த பேரவைத் தலைவருக்கு நன்றி' என்றார். அப்போது குறுக்கிட்ட பேர வைத் தலைவர், ""உங்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லை'' என்றார்.
ஜெயங்கொண்டத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வருமா?'
து. அமரமூர்த்தி (காங்கிரஸ்):
ஒரு காலத்தில் நகர்ப்புற மக்க ளுக்கு மட்டுமே பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைத்து வந்தது.இப்போது சாதாரண கிராம மக்க ளுக்கும் கிடைக்க, இந்த அரசு திட் டம் தீட்டியுள்ளது.பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அது போல ஜெயங்கொண்டத்துக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட் டத்தை அரசு செயல்படுத்த வேண் டும்.
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
ஜெயங்கொண்டத்துக்கு கொள்ளி டம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும்.அரியலூர் தொகுதி, திருமானூர் ஒன்றியம் அழகிய மணவாளன் ஊராட்சியைச் சேர்ந்த மேலவரப் பங்குறிச்சியில் 3 ஆழ்துளை கிண றுகளும், கீழவரப்பங்குறிச்சியில் ஒரு ஆழ்துளை கிணறும் அமைக் கப்பட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.ஆனாலும் இந்தப் பகுதிகள், தற் போது ஆய்வில் உள்ள திருமானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 58 குடியி ருப்புகளுக்கான கொள்ளிடம் கூட் டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளன.
"தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்'
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் தமிழ கத்தின் உரிமைகளை எள்ளளவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.தமிழகத்தின் உரிமைகளுக்காக அனைவ ரும் ஓங்கிப் பேசியிருக்கிறார்கள். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தப் பிரச்னையில், தமிழகம் ஓரணியில் இருக்கி றது என்பதை எடுத்துக் காட்டிய அனைவருக் கும் நன்றி.இந்த ஒற்றுமையும், பாசப் பிணைப்பும் இருந்தால் பல பிரச்னைகளில் நமக்கு வெற்றி கிடைக்கும்.ஒகேனக்கல்லில் ஒரு கும்பலால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்தும், பெங்களூ ரில் திங்கள்கிழமை நடந்த நிகழ்வுகள் குறித் தும் பலர் பேசினார்கள்.
கர்நாடக அரசு மற்றும் சில விஷமிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், தமிழகத் தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் உறுதியாக எடுத்துக் கூறினார்கள்.இந்தப் பிரச்னையில் முதல்வர் பின்னால் அணிவகுத்து நிற்போம் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உறுதி கூறினார்கள்.பிரதமருக்கு கடிதம்: ஒகேனக்கல் பிரச்னை யில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மார்ச் 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி னார்.இந்தத் திட்டம் 2 மாவட்டத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம்.
குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தேசிய குடிநீர் கொள்கை கூறுகிறது.கர்நாடகம் ஒப்புதல் அளித்த பிறகே...: மத் திய அரசு, கர்நாடக அரசு அதிகாரிகளுடன் பேசி, கர்நாடகம் பெங்களூருக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம், தமிழகம் தன் பகுதி யில் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொள் ளலாம் என்று ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே இந்தத் திட்டம் தீட்டப்பட்டது.
இது மனிதாபிமான பிரச்னை. நாம் யாரு டைய பாகத்திலும் பங்கு போடவில்லை. தமி ழகப் பகுதியில் இருந்துதான் தண்ணீர் எடுக்கி றோம். குடிநீருக்காகவா சண்டை போடுவது? கர்நாடகத்தில் சிலர் வேகத்தை காட்டியிருக் கிறார்கள். பக்கத்து மாநிலங்களுடன் நல்லுற வைக் காக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பெருந்தன்மையைக் கடைபிடிக்கிறார்.
முதல்வர் கவலை:
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேம்பாலத் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஏற்பட் டுள்ள ஆபத்துகள் பற்றி நினைக்கும்போது கண்ணீர் வருகிறது என்றார்.தேச நலனில் அவருக்குள்ள அக்கறையை, பெருந்தன்மையைக் இது காட்டுகிறது.ஆனால் பெருந்தன்மையை மட்டுமே கடைபி டித்து, இருப்பதையும் விட்டுவிட முடியாது என்றார் துரைமுருகன்.
தமிழக -கர்நாடக நல்லுறவுக்கு வேட்டு வைக்க வேண்டாம்
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
தரு மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளுக்காக அதிமுக ஆட் சியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டம் தயாரிக்கப்பட்டது.ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இந் தத் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை, மத்திய அரசு அனும திக்க வில்லை.இப்போது மத்திய அரசு அனும தித்து திட்டம் நிறைவேற இருக்கிற நிலையில், சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது இரு மாநில சகோதர உறவுக்கு வேட்டு வைக்கின்ற செயலாகும்.பெங்களூரிவில் தமிழ் படம் திரையி டப்பட்ட தியேட்டர்கள், தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள், தமிழ் சங்கம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாது காப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக் கத்து மாநிலத்துக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்வது கண்டிக்கத் தக்கது. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
திங்கள் கிழமை பெங்களூரில் தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டுள்ளனர். தேர்தலில் வாக் குகளைப் பெற வேண்டும் என்ற குறு கிய அரசில் நோக்கத்துடன் இந்தப் பிரச்னையை பாஜக கிளப்பி உள்ளது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத் துக்கு எடியூரப்பா இடையூறாக இருந்து வருகிறார். குடிநீருக்காக தண் ணீர் எடுப்பதை நீதிமன்றம்கூட தடுக்க முடியாது. கர்நாடகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் தமிழர்களின் வாழ்வாதாரத் துக்கு விடப்பட்ட சவாலாகும். பெங்களூரில் தமிழர்கள் மீது தாக்கு தல் நடக்கும்போது கர்நாடக போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் துள்ளனர். தாக்குதல் நடத்திய கன்னட அமைப்புகள் மீது நடநடிக்கை எடுக்க முதல்வர் முயற்சி செய்ய வேண்டும்.
ஜி.கே. மணி (பாமக):
வெறிபிடித்த சிலர் அரசியல் ஆதாயத்துக்காக இந்தப் பிரச்னையை எழுப்பி உள்ளனர். கன் னட வெறியர்கள் தமிழகத்துக்கு எதி ராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.கர்நாடகம் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பதோடு எல்லை பிரச்னையை யும் எழுப்பி இருக்கிறது. அவர்கள் எல்லை பிரச்னையை கிளப்பினால் நாங்களும் எல்லை பிரச்னையை கிளப் புவோம். பெங்களூரு, எங்களூரு என் போம். கோலார் தங்க வயலை மீட்க போராடுவோம். எடியூரப்பா தலைமையில் பாஜகவி னர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தபோது அவர்களை தமிழக எல்லைக்குள் தமி ழக போலீஸ் அதிகாரிகளே அனுமதித் துள்ளது வருந்தத்தக்கது.குடிநீர் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசிடம் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையில் அதி முக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக ளும் முதல்வரின் பின்னால் அணிவ குத்து நிற்கிறது.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
அர சியல் ஆதாயத்துக்காக பாஜக, இந்தப் பிரச்னையை கிளப்பி வருகிறது. மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட் டின் இறையாண்மையும், ஒற்றுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.வை.
சிவபுண்ணியம் (கம்யூ னிஸ்ட்):
குடிநீர் திட்டத்தை நிறை வேற்ற கர்நாடகம் எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசி யல் ஆதாயத்துக்காக தமிழகத்தை மிரட்டுகிற நோக்கில் பாஜக செயல்ப டுகிறது.ஒகேனக்கல்லை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் அந்தப் பகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.இந்தப் பிரச்னையில் தமிழக மக்க ளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பந்த் போன்ற நடவடிக்கை களை அரசு அறிவிக்க வேண்டும்.
கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):
கன்னட அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது வெறித்தனத்தைக் காட்டி இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைத்துள்ளன.பெங்களூரில் தமிழர்களின் கருமாரியம் மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் தாக் கப்பட்டுள்ளன. முதல்வரின் உருவ பொம் மையும் எரிக்கப்பட்டுள்ளது. இது கண்ட னத்துக்குரியது. கர்நாடகத்தின் இந்த நட வடிக்கையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
செல்வம் (விடுதலைச் சிறுத்தை கள்):
கடந்த சில நாட்களாக பெங்களூ ரில் தமிழின விரோதிகள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தமிழ் நடிகர், நடிகை கள் கண்டிக்க வேண்டும். இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண் டும்.
விஜயகாந்த் (தேமுதிக):
ஆடுகிற மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடு கிற மாட்டை பாடித்தான் கறக்க வேண் டும். அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மத்திய அரசுக்கு ஒரு புள்ளி வைத்து அதனை நிறைவேற்ற முடியாமல் செய்து வருகின்றனர்.அதுபோல தமிழக அரசும் ஒரு புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் இந்தப் பிரச்னை தீரும்.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கைதிகளிடம் விசாரணை
செ. தாமோதரன் (அதிமுக):
பொள்ளாச்சி சிறைச் சாலை மிகவும் பழமையானது. அங்கு 100 ஆண் கைதி களை மட்டுமே அடைக்க முடியும். 18 வயதுக்கு குறை வான கைதிகளை புதுக்கோட்டைக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.இதனால் ரிமாண்ட் செய்ய அதிக நேரம் செலவாகிறது.இதற்குத் தீர்வாக பொள்ளாச்சியில் புதிதாக கிளை சிறைச் சாலை அமைக்க வேணடும்.
அமைச்சர் ஐ. பெரியசாமி:
பொள்ளாச்சி சிறைச்சாலை யில் இப்போது 72 கைதிகளை அடைக்க வசதி உள்ளது.ஆனால் 27 கைதிகள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சிறைச் சாலைக்கு சுற்றுச் சுவர் கட்ட ரூ. 12.25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.எனவே பொள்ளாச்சியில் புதிய கிளை சிறைச்சாலை அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை.
செ. தாமோதரன்(அதிமுக):
பொள்ளாச்சி சிறைச்சாலை யில் சில பணிகள் நடந்து வருவது உண்மைதான். ஆனால் அங்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிவறை வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இரவு 6 மணிக்கு மேல் கொண்டு வரப்படும் கைதிகளிடம், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
நிலம் கொடுத்தால் துணை மின் நிலையம்
க.நெடுஞ்செழியன் (பாமக):
கபிலர் மலை பகுதியில் குறைந்த மின் அழுத் தத்தால் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகி றது. மின் மோட்டார்கள் பழுதாகின் றன.எனவே ஜேடர்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
கபி லர்மலை ஜேடர்பாளையத்தில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, ஜேடர்பாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப் பட்டு அந்தத் துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத் ததும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, வாரிய ஒப்புதல் பெறப்பட்டு துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
க. நெடுஞ்செழியன் (பாமக):
பர மத்தி ஒன்றியம் வெள்ளிப்பாளையத் தில் துணை மின் நிலையம் அமைக்க மக்கள் நிலம் தர தயாராக இருக்கிறார் கள். அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
துணை மின் நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் உறுப்பி னர்கள், நிலத்தைப் பெற்று தந்தால் மார்க்கெட் விலையைக் கொடுத்து வாங்கி, அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
எஸ்.ஆர். ராஜா (திமுக):
தாம்பரம் தொகுதியில் ஈஞ்சம்பாக்கம், சிட்லப் பாக்கம், மேற்கு தாம்பரம் ஆகிய இடங் களில் துணை மின் நிலையம் அமைக் கப்படுமா?
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
தமிழ்நாட்டிலேயே தாம்பரம் தொகுதி யில்தான் அதிகமான துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதிகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருப் பதால், மூன்று துணை மின் நிலையங் கள் திறக்கப்பட்டன. மேலும் ஆறு இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.உறுப்பினர் கேட்கும் இடங்களில் நிலத்தைப் பெற்று தந்தால் அங்கு துணை மின் நிலையம் அமைக்கப்ப டும்.
பூம்புகாருக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 69 லட்சம் எங்கே?
மு.க. பெரியசாமி (பாமக):
2004-ம் ஆண்டு சு ன ô மி யி ன் போது பூம்புகா ரில் உள்ள சிலப் பதிகார கலைக் கூடம், பூங்கா, தங்கும் விடுதி ஆகியவை கடுமையாக சேதம டைந்தன.அதனைச் சீரமைக்க ரூ. 69 லட்சம் ஒதுக்கப்பட்டது.ஆனால் இந்த நிதி பயன்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை.அந்த நிதி எங்கே உள்ளது? சிலப் பதிகார கலைக் கூடம் இருண்டு போய் உள்ளது. அது சீரமைக் கப்படுமா?
சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்:
பூ ம் பு க ô ரி ல் உள்ள 6 குடில் கள் சுனாமியால் முழுவதும் சேத ம û ட ந் த ன .இதனை சீர மைக்க ரூ. 69 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டது.இதுபற்றி ஆய்வு செய்த பொதுப்பணித் துறை பொறியா ளர்கள் குடில்களை சரி செய்ய முடியாது. இடித்துவிட்டு தான் கட்ட வேண்டும் என்று கூறிய தால், மேற்கொண்டு பணி நடை பெறவில்லை.
அதற்காக ஒதுக் கப்பட்ட ரூ. 69 லட்சம் அப்ப டியே உள்ளது.புதிதாக குடில்களை கட்ட இடங்களைக் தேடி வருகிறோம்.ரூ. 31.23 லட்சம் செலவில் பூம்புகாரிலுள்ள மன்றங்கள், பூங்காக்கள், சுற்றுலா வளாகங் கள் ஆகியவற்றில் தற்போதுள்ள மின் சாதனங்களை மாற்றவும், புதிய மின் விளக்குகளைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.சிலப்பதிகார கலைக் கூடம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், கொற்றப் பந் தல் ஆகியவை ரூ. 35.11 லட்சம் செலவில் பொதுப்பணித் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு தலையிட பேரவை தீர்மானம்
கடந்த மார்ச் 27-ம் தேதி முதலில் ஒரு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. பெங்களூரில் தமிழ் சங்கம் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடந்த தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் பிரச்னை குறித்து கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப் பாட்டை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே உடனடியாக, தமிழக மக்க ளின் உரிமைகளைக் காக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.மார்ச் 27-ம் தேதி, பேரவையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் விளைவை நாம் அறிந்து கொள்வதற்கு முன்பே, மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நெருக்க டிக்கு, அவசியத்துக்கு ஆளாகி இருக்கிறோம்.
தமிழர்கள் என்றாலே அலர்ஜி: நமக்கும் கர் நாடகத்தில் உள்ள மொழி வெறியர்கள் சிலருக் கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தக் கசப்பு, ஒரு வகையில் வரவேற்கத்தக்கக் கசப்பாகத் தான் இருக்கிறது. பேரவையில், இன்று ஒரு நாள் தான் எல்லோரும், ஒரே கருத்தில், ஒரு தீர்மா னத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து நிறை வேற்றி இருக்கிறோம்.தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்றாலே, கர்நாடகத்தில் உள்ள மொழி வெறியர்கள் சில ருக்கு அறவே பிடிப்பதில்லை. அப்படி ஒரு "அலர்ஜி' அவர்களுக்கு ஏற்பட்டு நம்மை வெறுப்பதையே தொழிலாக, வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளுவருக்கே மரியாதை இல்லை: அந்த வெறுப்பு நீக்கப்படாமல் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு என்று சொல்வ தெல்லாம், வெறும் வாய் மொழியாக இருக் குமே தவிர, வாய்மை நிறைந்ததாக இருக்க முடி யாது.உலகம் போற்றும் உத்தம ஞானி, தமிழர்க ளுக்கு குறளைத் தந்த எம்மான் அய்யன் வள்ளு வருக்கு கர்நாடகத்தில் மதிப்பு இல்லை. பத்தாண்டுக்கும் மேலாக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் வாயிலில் வைக்கப்பட்ட திருவள்ளு வர் சிலை திறக்கப்படாமல் துணியால் மூடப் பட்டுள்ளது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் வரை, பெங்களூரில் எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன்.பயிர் பச்சைக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னவர்கள் இன்று உயிர் காப்பதற் கும் தண்ணீர் கிடையாது என்று சொல்கிற அளவுக்கு ஒகேனக்கல் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள்.
மார்ச் 27 தீர்மானம்:
""தமிழகம் எப்போதும் தன் பக்கத்து மாநிலங்களுடனும், அந்த மாநில மக்களுடனும் நட்பையும், நல்லுறவையும் பேணி வளர்த்து வருகிறது. எனவே, ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும், உதவியையும் தமிழக அர சுக்கு வழங்க வேண்டும். கர்நாடக அரசு கடைப் பிடித்து வரும் எதிர்ப்பு போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றும் மார்ச் 27-ம் தேதி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கர்நாடகத்துக்கு கண்டனம்:அமைதி காக்கும் நோக்குடனும், மாநிலங்களுக்கு இடையே ஒற் றுமை காணவும் அவையில் தீர்மானம் நிறை வேற்றினோம்.
ஆனால் கர்நாடகத்தில் உள்ள சில வெறியர் கள் அந்த தீர்மானத்துக்கு எதிராக, தமிழக மக்க ளின் நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் போக்கினையும், நடந்த கலவரங்களையும் சட் டப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, அணி வகுப்பது, பணி முடிப்பது பற்றி அனைத் துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
திருப்பரங்குன்றத்தில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கிராமங்களில் உள்ள விளை நிலங் களை கையகப்படுத்தி வருகிறது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்க லம் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி, வளை யங்குளம், நல்லூர், எலியார்பத்தி, நெடுமதுரை ஆகிய கிராமங்களில், ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் திமுக அரசு இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் பகுதிகள் அதிமுக-வுக்கு சாதகமானவை என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விவசா யிகளை அங்கிருந்து வெளியேற்ற திமுக அரசு திட் டமிட்டுள்ளது.விலைவாசி மேலும் உயரும்: அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.இந்த நேரத்தில் விவசாய நிலங்களை கையகப்ப டுத்தினால் விலைவாசி மேலும் உயரும். மின்சாரத் துக்கு விடுமுறை அளித்து, ஒளியை விரட்டி தமி ழர் இல்லங்களில் இருளைப் புகுத்தியிருக்கிறார் கருணாநிதி.
திமுக அரசின் இந்த மக்கள் விரோதப்போக்கை கண்டித்து திருப்பரங்குன்றம் ஒன்றியம் வளையங் குளத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிமுக சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன், மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் எம். ஜெயராமன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ஜெயல லிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஒரு லட்சம் கோடி வர்த்தகம்: இந்தியன் வங்கி சாதனை
இந்தியன் வங்கி சமீபத்தில், தனது அனைத்துக் கிளைக ளையும் "கோர் பேங்கிங் சொல் யூசன்' மூலம் இணைத்து சாதனை படைத்தது. இதன் மூலம் எல்லா வாடிக்கையா ளர்களும், இந்த வங்கியின் எந் தக் கிளை மூலமும் சேவை பெற முடியும்.இன்டர்நெட் வங்கிச் சேவை, ஸ்மார்ட் கார்டு வசதி போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட வங்கியாக, இந் தியன் வங்கி திகழ்கிறது.
மணிகண்டம் -காவிரி குடிநீர் திட்டம்: டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்'
மு. பரஞ்சோதி (அதிமுக):
மணிகண்டம் -காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் 150 கிரா மங்களுக்கு குடிநீர் வழங்க அதி முக ஆட்சியில் தொடங்கப்பட் டது. இந்தத் திட்டத்தை, 11 பிரிவுகளாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதில் 6 பிரிவுகளுக்கு டெண்டர் முடி வாகவில்லை. ஐந்து பிரிவுக ளில பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
இந்தத் திட்டத்துக்கு 2005-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டப் பணிகள் 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் ஐந்து பகு திகளில் பணிகள் நடந்து வருகி றது. மீதமுள்ள 6 பகுதிகளி லும் பணிகள் தொடங்கப் பட்டு வரும் டிசம்பர் மாதத் துக்குள் முடிக்கப்படும்.இந்தத் திட்டம் நிறைவேற் றப்பட்டால் 1,02,000 பேர் பய னடைவார்கள். ஆண்டுக்கு ஒருவருக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
யோகாசனம் கற்றால் யோகம் வருமா?
விடியல் சேகர் (காங்கிரஸ்):
அரசு, தனியார் பள்ளிகளில் யோகாசனத்தை கட்டாயப் பாட மாக்க வேண்டும். மரம் நடும் விழா நடத்தியதுபோல, ஈஷா யோகா மையம், உலக அறிவுத் திருக்கோயில் போன்ற அமைப்பு கள் மூலம் பள்ளிகளில் யோகாச னம் கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வாரத்துக்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் யோகாசனமும் கற்றுத் தரப்படுகிறது. யோகா கற்றால் மன இறுக்கம் குறைகிறது. உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது. கலை ஞர் 84 வயதிலும் 24 வயது இளை ஞரைப்போல சுறுசுறுப்பாக இருப்பதற்கு யோகாசனமே கார ணம்.
ஆழியாறு யோகா மையம் மூலம் இதுவரை, 1,10,000 ஆசிரி யர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ. 1.61 கோடி ஒதுக்கியுள்ளது.இந்த ஆண்டு மேலும் 80,000 ஆசி ரியர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படும்.
ஜி.கே. மணி (பாமக):
சர்க் கரை நோய், இதய நோய் போன் றவை இப்போது பள்ளி மாணவர் களுக்கும் வருகிறது. உணவு பழக் கமும், உடற்பயிற்சி இல்லாததும் தான் இதற்கு காரணம். எனவே மாணவர்களுக்கு யோகாசனத்தை யும், விளையாட்டையும் கட்டாய மாக்க வேண்டும். எம்.எல்.ஏக்க ளுக்கும் யோகாசனம் கற்றுத்தர வேண்டும்.
தங்கம் தென்னரசு:
உடற்கல் விக்கு திமுக அரசு மிகுந்த முக்கி யத்துவம் அளித்து வருகிறது.2006-2007-ம் ஆண்டில் 168 உடற் கல்வி ஆசிரியர்களும், 2007-2008- ம் ஆண்டில் 439 உடற்கல்வி ஆசி ரியர்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை யோகம் இருந்தால் யோகம் (யோகாசனம்) கிட்டும்.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
யோகாசனம் செய்ய வேண்டுமா னால் காலை 5.30 மணிக்கு எழுந் திருக்க வேண்டும். சுமார் 10 எம்.எல்.ஏ.க்களாவது தயார் என் றால், அண்ணாநகரில் உள்ள ஆசன ஆண்டியப்பன் மூலம் எம்.எல்.ஏ. விடுதியில் யோகாச னம் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்ப டும்.
ஜி.கே. மணி (பாமக):
தினமும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது என்று கடந்த ஆண்டு ஆர்க்காடு வீராசாமி பேரவையில் கூறினார்.அவரது ஆலோசனையை நாங் கள் இன்றுவரை பின்பற்றி வருகி றோம்.
எஸ்.வி. சேகர் (அதிமுக):
தின மும் காலையில் ஒரு லிட்டர் தண் ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது என்பதில் உண்மை இல்லை. பெற்றோர்களுக்கு சர்க் கரை நோய் இருந்தால் பிள்ளைக ளுக்கு நிச்சயம் சர்க்கரை நோய் வரும். தெரியாதத் தகவல்களை அவையில் கூற வேண்டாம்.
வி.பி. துரைசாமி (பேரவை துணைத் தலைவர்):
யோகம் இருந்தால் யோகம் கிட்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி னார். அது என்ன யோகம் என்று சொன்னால் நல்லது.
தங்கம் தென்னரசு:
அவர வர்க்கு என்ன யோகம் வேண் டுமோ, அந்த யோகம் கிடைக்கும்.பேரவை துணைத் தலைவர் யோகா கற்றால் கோபம் குறையும்.ராஜ யோகம் கிடைத்தாலும் கிடைக்கும்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :
யோகாசனம் கற்றால் யோகம் கிடைக்கும். என்ன யோகம் என்பது பரம ரகசி யம்.
யானைகளைத் தடுக்க சூரிய மின் வேலி
ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட்):
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் கோட்டத்தில் வனப் பகு தியில் யானைகள், காட்டுப் பன் றிகள், காட்டுக் குரங்குகள் அட் டகாசம் அதிகமாக உள்ளது.காட்டுக் குரங்குகள் வீடுக ளின் கூரைகளைப் பிரித்து உள்ளே நுழைந்து பொருட் களை நாசம் செய்கின்றன.இதை தடுக்க மின்சாரத் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
அமைச்சர் என்.செல்வராஜ்:
கன்னியாகுமரி மாவட்டம் சிற் றார் கோட்டத்தில் காட்டு யானைகளின் வருகையைத் தடுக்க 2006-2007-ல் 10 கி.மீ தூரத்துக்கு சூரிய மின் வேலி அமைக்கப்பட்டது. 2007-2008-ல் 31 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது இந்த நிதியாண் டுக்குள் முடிக்கப்படும்.குரங்குகள் அறிவாற்றல் மிக்க விலங்கு. யானைகள் மின் வேலி யின் மீது காய்ந்த மரங்களைப் போட்டு கடந்துச் செல்ல முயற்சி செய்கிறது. வன விலங்கு களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மு. கண்ணப்பன் (மதிமுக):
தனியார்கள் முதலில் அகழி அமைத்து அதன் பிறகு மின்வேலி அமைக்கிறார்கள்.அதன் மூலம் யானைகளின் வருகை கட்டுப்படுத்தப்படுகி றது. அதுபோல வனத்துறையும் செய்யுமா? பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நிதி ஒதுக்கப் பட்டுள்ளது பற்றி அமைச்சர் கூறினார். பல நேரங்களில் மனித உயிர்களும் பலியாகின்றன.
அமைச்சர் என். செல்வராஜ்:
தேவையான இடங்களில் அகழி வெட்டி, சூரிய மின்வேலி அமைத்துள்ளோம். வன விலங் குகளால் கடந்த ஆண்டு இறந்த 30 பேருக்கு ரூ. 30 லட்சம் வழங் கப்பட்டது. இந்த ஆண்டு இறந்த 23 பேருக்கு ரூ. 23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கலைராஜன் (அதிமுக):
தமிழ்நாட்டில் மொத்தம் எத் தனை யானைகள் உள்ளன.அதில் ஆண் யானைகள், பெண் யானைகள் எவ்வளவு? யானை கள் காட்டை விட்டு நாட்டுக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் என். செல்வராஜ்:
தமிழ்நாட்டில் சுமார் 4,015 யானைகள் உள்ளன. ஆண், பெண் யானைகளின் எண் ணிக்கை தெரியவில்லை.யானைகள் தண்ணீருக்காக வும், உணவுக்காகவும் காட்டை விட்டு வெளியே வருகின்றன.அதற்காக காடுகளில் சிறுசிறு தண்ணீர் குட்டைகளை அமைத் துள்ளோம். யானைகள் ஒரு நாளைக்கு 20 கி.மீ. இடம்பெய ரக் கூடியவை.
குத்தாலம் அன்பழகன் (திமுக):
கடந்த ஆட்சியில் முதுமலை யில் யானைகளுக்கு புத்து ணர்ச்சி முகாம் நடத்தப்பட்டது.அதுபோல இப்போது நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?
அமைச்சர் என். செல்வராஜ்:
அப்படி எந்தத் திட்டமும் அர சிடம் இல்லை.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
ஜவ்வாது மலையில் உள்ள எனது ஐந்து ஏக்கர் நிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழு யானைகள் புகுந்து தென்னை மரங்களை நாசம் செய் துவிட்டது. அதனைத் தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்:
ஞானசேகரனுக்கு அதிகமான நிலங்கள் உள்ளன. மாமனார் வழியிலும் நிலங்கள் உள்ளன.எனவே ஜவ்வாது மலையில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு கொடுத்து விடுங் கள். யானைகள் மேய்ந்துவிட்டு போகட்டும்.
சொல்வது சுலபம், செய்வது கடினம்
வெள்ள நிவாரணத் தொகையை ஏக்கருக்கு ரூ. 7 ஆயிர மாக உயர்த்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ் ணசாமி கூறியுள்ளார்.வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் களுக்கு ஹெக்டேருக்கு ரூ, 4000 அதாவது ஏக்கருக்கு ரூ. 1,600 வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது.விவசாயிகளின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்தத் தொகையை உயர்த்தி ஏக்க ருக்கு ரூ. 3,000 வழங்க உத்தரவிட்டுள் ளோம்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகி யோரிடம் பேசி உரிய தொகையை கிருஷ்ணசாமி பெற்றுத் தந்தால் அவர் தெரிவித்த ஆலோசனையை சுலபமாக நிறைவேற்றலாம். சொல் வது சுலபம், செய்வது கடினம்.
மண்டல் கமிஷன் பரிந்துரை களை நிறைவேற்ற ஆணையிட்ட தற்காகப் பிரதமர் பதவியை இழந்த வி.பி. சிங்குக்கு தமிழகம் முழுவ தும் பிரமாண்டமான வரவேற்புக் கூட்டங்களை திமுக நடத்தியது.அந்தக் கூட்டத்துக்கு யாரும் போகக் கூடாது. வீட்டிலிருந்து கூட அவரை யாரும் பார்க்கக் கூடாது என்று அறிக்கை விட்ட ஜனநாயகத் தலைவர் (?) ஒருவர், தமிழக சரித்திரத்தில் இடம் பெற் றுள்ளார்.2011-ல் பாமக தலைமையில் ஆட்சி அமையும். அந்த ஆட்சி யின் முதல்வர் போடுகின்ற முதல் கையெழுத்து மதுவிலக்கு கொண்டு வரும் உத்தரவாகத்தான் இருக்கும் என்று பாமக தலைவர் கூறியுள்ளார்.அந்த வாய்ப்பு அவருக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான், மதுவிலக்கு பற்றி அவர் பேசுவதை எல்லாம் பொறுமையாகக் கேட் டுக் கொண்டிருக்கிறோம்.
அவர் கள் ஆட்சிக்கு வந்து கள்ளுக் கடை, பிராந்திக் கடைகளை ஒழிக்கட்டும்.மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட ரூ. 60,000 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி, மயக்கமடைந்த விவசாயிக்கு தெளிக்கும் தண்ணீ ரைப் போன்றது என்று பாமக நிறு வனர் ராமதாஸ் கூறியுள்ளார்.மயக்கம் அடைந்தவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவனை எழுப்புவதுதான் முதல் கடமை.அதைத்தான் மத்திய அரசு செய்தி ருக்கிறது.
அதிமுக ஆட்சியை விட நிதி ஒதுக்கீடு அதிகம்:
நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய துறைக ளுக்கான நிதி ஒதுக்கீடு அதிமுக ஆட்சியைவிட குறைக்கப்பட்டுள் ளதாக அதிமுக புரளி கிளப்புகி றது. அது உண்மையல்ல என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.