Wednesday, April 30, 2008

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி: பேரவையில் பாராட்டு

சென்னை, ஏப். 29: 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண் ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு சட்டப் பேரவை யில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப் பன் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியதா வது:

இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி9 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உலக சாதனைப் படைத்துள்ளனர்.இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் விஞ்ஞானிக ளுக்கு முதல்வர் சார்பிலும், எனது சார்பிலும், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்பிலும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது அனைத் துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

முதல்வர் மீதான உரிமை மீறல் ஆய்வில் உள்ளது: ஆவுடையப்பன்

சென்னை, ஏப். 29: முதல்வர் மீது சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் கொடுத்துள்ள உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் செங்கோட்டையன் எழுந்து, "முதல்வர் மீது உரிமை மீறல் கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.செங்கோட்டையன் கொடுத்த உரிமை மீறல் பிரச்னை தனது ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலை வர் தெரிவித்தார்.

பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடை பெற்ற விவாதம் குறித்து வெளியில் அறிக்கை விட்டத தற்காக செங்கோட்டையன் மீது அமைச்சர் துரைமுரு கன், திங்கள்கிழமை (ஏப். 28) உரிமை மீறல் கொண்டு வந்தார்.அதனை ஏற்று செங்கோட்டையன் மீதான பிரச் னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப பேரவைத் தலைவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்களில் திருப்பணி: நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும்

சென்னை, ஏப். 29: கோயில்களில் திருப்பணி செய்வதற்குத் தேவை யான நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பெரியகருப்பன் வேண்டு கோள் விடுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:

டாக்டர் க. நெடுஞ்செழியன் (பாமக):

நாமக்கல் மாவட்டம் பர மத்தி ஊராட்சி ஒன்றியம் குன்ன மலை வல்லீஸ்வரர் ஆலயம் 13-ம் நூற்றாண்டில் வல்வில் ஓரியால் கட்டப்பட்ட பழமையான கோயி லாகும். எனவே அங்கு திருப்பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக் குமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

பழமையும், தொன் மையும் வாய்ந்த குன்னமலை வல் லீஸ்வரர் கோயில் 300 அடி உயர மலைக் குன்றின் மேல் உள்ளது. இந் தக் கோயிலுக்கு சொந்தமாக நிலங் கள் எதுவும் இல்லை. இந்தக் கோயிலில் உண்டியலும் வைக்கப் படவில்லை. மலையில் படிக்கட்டு கள் கட்டி திருப்பணி செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெரு மளவில் நிதி திரட்ட உறுப்பினர் உதவி செய்தால் விரைவாக திருப் பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ராஜேந்திரன் (திமுக):

சேலம் அயோத்தியாபட்டினத்தில் திரு மலை நாயக்கரால் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் உள் ளது. இந்தக் கோயிலில் திருப்பணி செய்ய அரசு முன்வருமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் உரிய காலத்தில் திருப்பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள் ளார். எல்லாக் கோயில்களிலும் ஒரே நேரத்தில் திருப்பணி செய் வது சாத்தியமல்ல.அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். கோயில்களில் திருப்பணி செய்ய அரசு முழுமை யாக நிதி ஒதுக்குவதில்லை. திருப் பணிக்குத் தேவையான நிதியில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தொகையை உபயதாரர்களிடம் இருந்து உறுப்பினர்கள் வசூலித்து தந்தால் உடனடியாக திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

ஆறுமுகம் (பாமக):

விலை யேற்றம் காரணமாக திருத்தேர்கள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வரு வதில்லை. எனவே விலையேற்றத் துக்கு ஏற்ப மதிப்பீடு செய்து கூடு தல் நிதி வழங்க அரசு முன்வருமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

தமிழகத்தில் 250 திருத்தேர்கள் செய்யும் பணி நடந்து வருகிறது.தேர் செய்யும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவில்தான் இருக் கிறார்கள் என்பதாலும், விலை யேற்றம் காரணமாகவும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நியாயமான தொகை அவர்களுக்கு வழங்கப்ப டும்.

டி.யசோதா (காங்கிரஸ்):

தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் கோயில் கட்ட அரசு ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறது. இது வரை எத்தனைக் கோயில்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள் ளது?

அமைச்சர் பெரியகருப்பன்:

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 16 ஆயிரம் கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயி ரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,000 கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

பத்திரப் பதிவு அமைச்சர் தகவலுக்கு ஆதாரத்துடன் மார்க்சிஸ்ட் மறுப்பு

சென்னை, ஏப். 29: பத்திர பதிவுக் கான நிலத்தின் மதிப்பு உயர்ந்துள் ளது சம்பந்தமாக பத்திரப் பதிவு அமைச்சர் அளித்த பதிலை சட் டப் பேரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சி.கோவிந்தசாமி ஆதாரத்துடன் மறுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரம் முடிந்ததும் சி. கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு அறிவிப்புக்கு பதில் அளித்து பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசிய தாவது:

பத்திரப் பதிவுத் துறையில் வழி காட்டி மதிப்புகள் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை கிராமப் புறங்க ளுக்கும், ஆண்டுதோறும் நகர்பு றங்களுக்கும் திருத்தி அமைக்கப் பட்டு வந்தன. ஆனால் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு வழிகாட்டி மதிப்புகள் திருத்தி அமைக்கப்படவில்லை.

இதனால் வழிகாட்டி மதிப்பு கள் வெளிச்சந்தையில் நிலவும் மதிப்பினை பிரதிபலிக்காமல், ஒரு சில நிலங்களுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் நிர்ண யம் செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.வெளிச்சந்தையில் நிலவும் மதிப் பிற்கு ஏற்றவாறு அறிவியல் ரீதி யாக வழிகாட்டி மதிப்புகளை திருத்தி அமைக்க, மைய மதிப்பீட் டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழு ஆகியவை 2005-ம் ஆண்டு மே 8-ம் தேதி அமைக்கப்பட்டன.

அதன்படி நிர்ணயம் செய்யப் பட்ட மதிப்புகள் பதிவுத் துறை இணைய தளத்தில் வெளியிடப் பட்டன. சம்பந்தப்பட்ட சார்பதி வாளர் அலுவலகங்களிலும் பார் வைக்கு வைக்கப்பட்டன.2007-ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் நடைமு றைக்கு வந்தன.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மதிப்புகள், கிராமங்களைப் பொறுத்தவரை 1-4-2003 வழி காட்டி மதிப்பிலிருந்து சராசரி யாக 91.68 சதவீதமும், நகர்புறங்க ளைப் பொறுத்தவரை 80.79 சதவீ தம் மட்டுமே உயர்ந்துள்ளன. அந் தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற வாறு சரியான மதிப்புகள் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள் பாதிப்படையும் வகையில் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்ப டவில்லை.அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் இந்த மதிப்புகளை ஆராய்ந்து அங்கீகா ரம் செய்துள்ள நிலையில் குறை பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.குறைகள் இருப்பதாக பொதுமக்க ளிடம் இருந்து முறையீடுகள் வந் தால் அவை மாவட்ட குழுவில் வைத்து சரிசெய்ய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சுரேஷ் ராஜன்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

திருப்பூர் பத்திரப் பதிவு அலுவலகம் 1-க்குப்பட்ட நெரிபெ ரிச்சல் ஊராட்சியில் பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு 2003-ம் ஆண்டு ரூ. 1,31,000 ஆக இருந்தது.தற்போது திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்புகளின் படி நிலத்தின் மதிப்பு ரூ. 69,32,400 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 5,292 சதவீதம் பத்திரப் பதிவுக் கான நில மதிப்பு உயர்ந்துள்ளது.

திருப்பூர் பத்திரப் பதிவு அலுவ லகம் 2-க்குட்பட்ட 15. வேலம்பா ளையம் மூன்றாம் நிலை நகராட்சி யில் 2003-ம் ஆண்டு பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு ரூ. 1,84,000 ஆக இருந்தது. திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்பின்படி நிலத்தின் மதிப்பு ரூ. 65 லட்சமாக அதாவது 3,554 சதவீதம் உயர்ந் துள்ளது.

இதனால் ஏழை மக்கள் 4 சென்ட் நிலம் வாங்கினால்கூட ரூ. 70,000 வரை பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் கடன் பெறுவதற்காக நிலத்தின் மதிப்பை அதிகமாக பதிவு செய்கிறார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு பத்திரப் பதிவு கட்டணம் அதிகமாகி உள்ளது. இதனை எதிர்த்து அப் பீல் செய்தாலும் 5 சதவீதம் மட் டுமே குறைக்கப்படுகிறது. சுமார் 5,000 சதவீதம் உயர்ந்துள்ளபோது 5 சதவீதம் குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை. எனவே அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் கோவிந்தசாமி

செந்தில் பாலாஜி (அதிமுக):

கரூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப் படு வதில்லை. இடைப்பட்ட காலத் தில் பதிவு செய்யப்பட்ட கட்ட ணங்களே இப்போதும் நடைமு றையில் உள்ளது.

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

திருத்தி அமைக்கப்பட்ட வழி காட்டி மதிப்பின்படிதான் பத்தி ரப் பதிவு நடைபெற்று வருகிறது.ஆனாலும் உறுப்பினர் தெரிவித்த தகவல் குறித்து ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு குடியரசில் வேலை

சென்னை, ஏப். 29: ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், ஐக் கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பா னிய நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப் பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித் துள்ளது.இது குறித்து அந்நிறுவனம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐ.டி.ஐ. படித்து ஏழு ஆண்டுகள் பணி யாற்றிய அனுபவம் பெற்ற பைப் பிட்டர் கள், ஏர் கண்டிசன் பைப்பினை பொருத்த அனுபவம் பெற்ற பிட்டர்கள், ஏர் கண்டி சன் மற்றும் டக் இன்சுலேஷன் பிரிவில் அனுபவம் பெற்ற இன்சுலேட்டர்கள், டிப் ளமோ தேர்ச்சி பெற்று எச்.வி.ஏ.சி. பைப் லைன் மற்றும் டக்ட் இன்சுலேஷன் பிரி வில் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டு நிறுவனத்துக்கு உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு நிறைவான ஊதியம், இலவச விமா னப் பயணச் சீட்டு மற்றும் இதர சலுகை கள் வழங்கப்படும்.இந்தப் பணிகளுக்கு தகுதி பெற்றவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் மே 2 மற்றும் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அடை யாறில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேர்முக தேர் வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

மேலும் விவரங்களுக்கு: 044 2446 4268, 2446 4269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையில் 21 வாரிசுகளுக்கு வேலை

சென்னை, ஏப். 29: கருணை அடிப்படையில் பால்வளத் துறை மற்றும் ஆவின் நிறு வன ஊழியர்களின் 21 வாரி சுகளுக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது.இது குறித்து செவ்வாய்க் கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பால்வளத் துறை ஊழி யர்களின் 9 வாரிசுகளுக்கும், ஆவின் நிறுவன ஊழியர்க ளின் 12 வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள் ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கி ழமை அவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அவர்களில் இளநிலை உதவியாளர்களாக நான்கு பேரும், கால அளவை மஸ் தூர்களாக 5 பேரும், ஆவின் சென்னை நிறுவ னத்தில் தொழிற்சாலை உத வியாளர்களாக 12 பேரும் நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.

பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயர், பால்வள மேம்பாட்டு ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை

சென்னை, ஏப். 28: முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்றும் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை என்று முதல்வர் கரு ணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.""கொடநாடு எஸ்டேட்டில் எவ்வளவு சம்ப ளம் என்று கேட்கும் கோவை தங்கம், கருணா நிதியின் குடும்பத்தினர் வாங்கியுள்ள எஸ் டேட்டுகள் பற்றி கேட்பாரா?'' என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங் கோட்டையன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கேள்வி-பதில் வடிவில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் சட்டப் பேர வையில் கேள்வி எழுப்பினார். அதற்கு அவையிலோ, அறிக்கையிலோ விளக்கம ளிக்க வேண்டிய செங்கோட்டையன் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத் துள்ளார். அவருக்கு நான் பதிலளிக்க விரும் பவில்லை.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட் டையன் மீது 1996-ம் ஆண்டு ஊழல் வழக்கு கள் குவிந்தன. அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடல் கொள்ளையர் போல்...:

""முன் னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோ டியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல் இருந்திருக்கக் கூடாது. பஸ்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் செங்கோட்டையன் பெருமள வில் ஊழல் செய்திருப்பதாக ஊழல் ஒழிப் புத் துறையினர் கூறியுள்ளனர். அவர் வாங் கிய சொத்துகளுக்காக முத்திரைக் கட்ட ணம் மட்டும் ரூ. 2.5 கோடி கட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. உயர் பதவியில் உள் ளவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்கா மல் போய்விட்டது. இதனால் சமூக முன் னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதி ராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நீதிமன்றங்கள் தடுக்கக் கூடாது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப் பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது'' என்று நீதிபதி சிவப்பா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த வழக்குகள் அதிமுக ஆட் சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப் புகள் வேறுவிதமாக வந்த போதிலும் நீதிபதி சிவப்பாவால் இந்த அளவுக்கு பாராட்டு பெற் றவர்தான் செங்கோட்டையன். அப்படிப்பட் டவர், நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்ப தைப் போல அறிக்கை விடுத்துள் ளார். முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்னமும் நான் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்க வில்லை என்று கருணாநிதி கூறி யுள்ளார்.

அரசு விழா அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏக்கள் பெயர்

சென்னை, ஏப். 28: அரசு விழா அழைப்பிதழ்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று அ.தி.மு.க., ம.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டிய தால் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை மானி யக் கோரிக்கை மீதான விவாத் தில் பேசிய மதிமுக எம்.எல்.ஏ.வீர இளவரசன்,

""மார்ச் 26-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங் கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில், விமான நிலைய விரிவாக்கம், தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட அந்த விழாவுக்கான அழைப்பிதழில் தொகுதி எம்.எல்.ஏ.வான எனது பெயர் இல்லை.இது குறித்து ஏப்ரல் 25-ம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு கடி தம் கொடுத்திருந்தேன். அது கண்டு கொள்ளப்படவில்லை.இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. ஜனநாயகத் துக்கு இழைக்கப்பட்ட அவமா னம்'' என்றார்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

வேண்டும் என்றே அரசு அவ்வாறு செய்யவில்லை. அரசு விழாக்களில் சில நேரங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் கலந்து கொள்வ தில்லை. எம்.எல்.ஏ.க்கள் விரும் பினால் அவர்களின் அனுமதி பெற்று எதிர்காலத்தில் அழைப் பிதழில் பெயர் அச்சிடப்படும்.

அமைச்சர் எ.வ. வேலு:

அதி முக ஆட்சியில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசு விழா அழைப்பிதழில் இடம் பெற்றதே இல்லை. தற் போது அரசு விழா அழைப்பிதழ் களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்க ளின் பெயர்கள் அச்சிடப்படுகி றது.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள விரும்பினால் மட்டுமே அழைப்பிதழில் பெயர் இடம் பெறும் என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சொல்கி றார். எம்.எல்.ஏக்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்றே விதிமுறைகளில் உள்ளது. விழா வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் எம்.எல்.ஏ.க்க ளின் உரிமை. விதிமுறைகளுக்கு மாறாக அமைச்சர் பேசக் கூடாது.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

விதிமுறைகளின்படிதான் எம்.எல்.ஏக்களின் பெயர்களை அழைப்பிதழில் போடுகிறோம்.ஆனால் அவர்கள் விழாவில் கலந்து கொள்வதில்லை. அத னால் அரசுக்குதான் அவமானம் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவை யில் நான் கலந்து கொண்ட விழா வில் அழைப்பிதழில் பெயர் இருந்தும் அதிமுக எம்.எல்.ஏக் கள் கலந்து கொள்ளவில்லை.இனி அரசு விழா அழைப்பிதழ்க ளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்க ளின் பெயர் இடம்பெறும்.அவர்கள் கலந்து கொண்டா லும், இல்லாவிட்டாலும் எங்க ளுக்கு கவலை இல்லை.

வைகோவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை, ஏப். 28: சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் பிரதமருக்கு நான் கடி தம் எழுதியதை நிரூ பித்தால்.. என்று விடுத்த சவால் என்ன ஆனது என்று மதி முக பொதுச் செயலா ளர் வைகோவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி யுள்ளார்.இது குறித்து கேள்வி- பதில் வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடை பெறுவதாக வைகோ கூறியுள்ளார்.பொடா சட்டத்தில், வெளியே வரமுடி யாமல் அவர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார் அல்லவா? சிறையில் உள்ளவ ரைக்கூட நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டுள்ளது அல்லவா? அதனால் "மினி எமர்ஜென்சி' என்று வைகோ சொல்லத் தான் செய்வார்.

சேது சமுத்திரத் திட்டப் பிரச்னையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதை நிரூபித்தால்... என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல் லுங்கள். பிறகு மெகா எமர்ஜென்சி, மினி எமர்ஜென்சி பற்றி பேசலாம்.விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக் கையின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் சலுகை விலையில் சமையல் எண்ணெய் விற்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது.

2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ரேஷன் கடைகள் மூலம் சமையல் எண் ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை, அரிசி போன்ற பொருள்களையும் சலுகை விலையில் வழங்கி வருகிறோம். சமீபத்தில் தலை மைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிக ளுடன் நீண்ட நேரம் ஆலோசித்து விலைவாசியைக் குறைக்க சில நடவடிக் கைகளை எடுத்துள்ளோம்.

உ.வே.சா. நினைவு இல்லம்: உ.வே.சா. நினைவு நாளான ஞாயிற்றுக் கிழமை திருவாரூர் மாவட்டம் உத்தமதா னபுரத்தில் அவரது நினைவு இல்லம் திறக்கப்பட்டது. ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை தனி மனிதராக இருந்து நிறைவாக செய்தவர் உ.வே.சாமி நாத அய்யர். அவர் முயற்சி செய்யாவிட் டால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.ஒருவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் அவர் செய்த நல்ல காரியங்களைப் போற்றக் கூடிய அரசு, திமுக அரசு என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கிராம சுகாதார செவிலியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

சென்னை, ஏப். 27: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறந்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப் பட்ட கிராம சுகாதார செவிலியரின் சஸ்பெண்ட் உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.நிர்மலா ஞாயிற்றுக்கி ழமை வெளியிட்ட அறிக்கை:

தட்டம்மை தடுப்பூசி போடுவது ஒரு குழுப் பொறுப்பு. இந்நிலையில் கிராம சுகாதார செவிலியரை சஸ்பெண்ட் செய்திருப்பது வருந்தத்தக்கது.தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்ட விதத்திலும், போடப்பட்ட முறையி லும் தவறில்லை என்று இது குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதனை ஏற்று சஸ் பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி மருந்துகளைப் பாரம ரிக்க குளர் சாதனப் பெட்டி இருப்பது போல, மற்ற ஊசி மருந்துகளையும் பராமரிக்க தனியாக குளிர் சாதனப் பெட்டி வழங்க வேண்டும்.அத்தியாவசியப் பணியில் முழுமை யாக கவனம் செலுத்த வேண்டியிருப்ப தால், உணவு மேளா, வீடுவீடாகச் சென்று கர்ப்பிணிகளைப் பரிசோதிப் பது போன்ற பணிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களை விடு விக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறார் கருணாநிதி

சென்னை, ஏப். 27: ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கரு ணாநிதி தூண்டிவிடுகிறார் என்று அதிமுக தலைமை நிலையச் செயலா ளர் கே.ஏ. செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஞாயிற்றுக்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும், அதனை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தி வரும் அதிமுக பொதுச்செய லாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கருணாநிதி தூண்டிவிடுகிறார்.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற தொழிலா ளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம், "1997-ல் வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் தினக் கூலி ரூ. 77 ஆக இருந்தது என் றும், 2001-ம் ஆண்டு ஐந்து ரூபாய் குறைப்பதற்கு அதிமுக ஆதரவாக இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட கூலி உயர்த்தப்பட வில்லை என்றும்' தெரிவித்தார்.

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 100 வழங்க வேண்டும் என்று அதி முக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குறிப் பிட்டு, முன்னாள் முதல்வருக்கு சொந் தமான கொடநாடு எஸ்டேட்டில் ரூ.100 தினக் கூலி தரப்படுகிறதா?' என்று கோவை தங்கம் கேள்வி எழுப்பினார்.தேயிலைக்கு நியாயமான விலை கேட்டு போராட்டம் நடத்திய விவசா யிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு பொய்வழக்கு போட்டது. அதிமுக ஆட்சியில் அந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டன.ஊதியத்தைக் குறைக்க ஒப்பந்தம்: 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், 25 ஏக்கருக்கு குறைவாக உள்ள தேயி லைத் தோட்ட விவசாயிகளுக்கு ரூ.2,800 மானியம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு அனைத்துத் தோட்ட தொழிலாளர் சங்கத்துக்கும், தோட் டத் தொழிலதிபர்கள் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த் தையில் தொழிலாளர்களின் ஊதி யத்தை குறைக்க தொழில் தகராறு சட் டம் 18 (1)-ன் கீழ் ஒப்பந்தம் ஏற்பட் டது.இந் ஒப்பந்தத்துக்கும் அதிமுக அர சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் பதை கோவை தங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த உடன்படிக்கையின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியம் அனைத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்க ளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொடநாடு எஸ்டேட்டில் தினக்கூலியாக ரூ. 90 வழங்கப்படுகி றது. பொதுவாக நிரந்தரத் தொழிலா ளர்களுக்கு மட்டுமே ரூ. 90 வழங்கப்ப டும். ஆனால் கொடநாடு எஸ்டேட் டில் தாற்காலிக தொழிலாளர்களுக் கும் ரூ. 90 வழங்கப்படுகிறது. அதனால் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிய தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.சட்டத்தில் கூறப்பட்டதைவிட அதி கமாக கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிபவர்களுக்கு போனஸ் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.

எனவே கொடநாடு எஸ்டேட் தொழி லாளர்கள் பற்றி கோவை தங்கம் கவ லைப்பட வேண்டிய அவசியம் இல்லை.தைரியம் உண்டா?: கொடநாடு பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பு, கரு ணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பி னர்களுக்கும், திமுகவினருக்கும் எத் தனை எஸ்டேட்டுகள், நிறுவனங்கள் உள்ளன? அதில் என்ன சம்பளம் வழங் கப்படுகிறது என்று கேட்கும் தைரியம் கோவை தங்கத்துக்கு உண்டா?

தமிழ் பற்றி வாய்கிழிய பேசும் கரு ணாநிதியின் குடும்பத்தில் எத்தனை பேர் தமிழ் வழியில் படிக்கின்றனர்? எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்? கரு ணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் என்னென்ன தொழில் செய்கிறார்கள்? அவர்களின் வருமானம் எவ்வளவு? கோடானு கோடி சொத்துக்களை கரு ணாநிதியின் குடும்பத்தினர் எப்படி சம்பாதித்தனர்? மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு செய்த ஊழல் என்ன? தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று பேர் மரணமடைய யார் கார ணம்? முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் எப்படி கொல்லப்பட் டார்? என்பதைப் பற்றியெல்லாம் கோவை தங்கம் கேள்வி எழுப்ப தயாரா? தத்துவம் பேசுவதா? "

"கொடநாடு எஸ்டேட்டில் ரூ. 100 சம்பளம் தருகி றீர்களா? என்று கேட்டால் ஆமாம் அல்லது இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்'' என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தத்துவம் பேசி னார்.தமிழகத்தில் மின்சார வெட்டு உண்டா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத ஆர்க்காடு வீராசாமி தத்துவம் பேசு வது வேடிக்கையாக உள்ளது.

இது போன்ற தேவையற்ற விவகா ரங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு, மின்சார விநியோகம் பற்றி தீவி ரமாக சிந்திக்க வேண்டும் என்று அவ ரைக் கேட்டுக் கொள்கிறேன்.முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் மனம்போன போக்கில் பேசுவதை கோவை தங்கம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.ஏ. செங்கோட்டையன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஈரோட்டுக்கு புதிய ஆட்சியர்

சென்னை, ஏப். 27: ஈரோடு மாவட்ட ஆட்சியராக மகேசன் காசிராஜன் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத் தில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பல ரும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, ஞாயிற் றுக்கிழமை பிறப்பித்தார்.இடமாற்றம் செய்துள்ள அதிகாரிக ளின் விவரம்: (ஏற்கெனவே வகித்த பொறுப்பு அடைப்புக் குறிக்குள்)

மகேசன் காசிராஜன், ஈரோடு மாவட்ட ஆட்சியர். (முதல்வர் அலுவ லக கண்காணிப்பு பிரிவு துணை செய லாளர்). டாக்டர் அனுராதா காத்தி ராஜீவன், மாநில திட்டக் குழு உறுப்பி னர் செயலாளர். (விடுமுறையில் இருந் தவர்).

கிரிஜா வைத்தியநாதன், குழந்தைகள் நலம் மற்றும் மகப்பேறு துறை சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர். (மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர்).

எஸ்.கே. பிரபாகர், எரிசக்தி துறை செயலாளர். (தமிழ்நாடு தொழில் முத லீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர்)

தயானந்த் கட்டாரியா, வேளாண்மை துறை சிறப்பு செயலா ளர் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகள் திட்ட ஆணையர், (கலால் மற்றும் அம லாக்கம் துறை ஆணையர்). தற்போது இப்பொறுப்பில் இருக்கும் பிரதீப் யாதவ் மாநில அரசுப் பொறுப்புக்குச் செல்கிறார்.

யு. சகாயம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையர். (மாநில தேர்தல் ஆணைய செயலாளர்).

பி. சீதாராமன், டாஸ்மாக், நிர்வாக இயக்குநர். (காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர்).டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த மங்கத்ராம் சர்மா மத்திய அர சின் வணிகத் துறை செயலாளராக நிய மிக்கப்பட உள்ளார். எனவே மாநில அரசுப் பணியில் இருந்து அவர் விடு விக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி

சென்னை, ஏப். 27: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர் ஜென்சி நடைமுறையில் இருப்ப தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சியை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்து உரிமை மறுக்கப்ப டுகிறது. ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி காட்டுதல் என்று ஜனநா யக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை சர்வசாதாரண மாக திமுக அரசு கைது செய்து வருகிறது. ஏப்ரல் 26-ம் தேதி மதுரை வந்த முதல்வருக்கு கருப்புக் கொடி காட் டப் போவதாக அறிவித்த அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுரா மன் உள்ளிட்ட 200 பேரை ஏப்ரல் 25-ம் தேதி இரவே கைது செய்து மறுநாள் இரவு வரை மண்டபத் தில் அடைத்து வைத்துவிட்டு, கரு ணாநிதி மதுரையில் இருந்து திரும் பியதும் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது திமுக அரசின் பாசிச போக்கை காட்டுகிறது.

இனி எதிர்காலத்திலும் கருப்புக் கொடி காட்ட நினைத்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப் பேன் என்று கருணாநிதி மிரட்டுகி றார். கடந்த இரண்டு ஆண்டுக ளாக ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்க முற்பட்டு அடக்குமுறையை ஏவியதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.தில்லியில் தடை இல்லை: ஈழ தமிழர் பிரச்னையில் இலங்கை அர சைக் கண்டித்து தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த தில்லி அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் எதிரே ஆர்ப்பாட் டம் நடத்த திமுக அரசு தடை விதிக்கிறது.

ஈழத்தில் தமிழ்ச்செல்வன் கொல் லப்பட்டதற்கு இரங்கல் தெரி வித்து ஊர்வலம் செல்ல முயன்ற பழ. நெடுமாறனும், நானும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம்.கடந்த மார்ச் 21-ம் தேதி ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த "தமிழ் ஈழ விடுதலை ஒருங்கி ணைப்புக் குழு' வைச் சேர்ந் தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட் டது.மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்த புரட்சிகர பெண் கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப் பட்டது.

ஜனநாய உரிமைகளை அழிக்க காவல்துறையை முதல்வர் கருணாநிதி பயன்படுத்தி வருகி றார்.அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதை உணர்ந்து, ஜனநாயகத்தில் நம் பிக்கை உள்ள அனைவரும் திமுக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டிக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோரை உட னடியாக விடுதலை செய்ய வேண் டும் என்று வைகோ தனது அறிக் கையில் கூறியுள்ளார்.

Saturday, April 26, 2008

டி.ஆர். பாலுவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இல. கணேசன்

சென்னை, ஏப். 25: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் நலனுக்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தனது குடும்பத்தினரின் நிறுவனம் லாபம் பெற வேண்டும் என்பதற்காக பெட்ரோலியத் துறையிடம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சலுகை பெற்றதாக ஊடகங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டும். ஆனால் நான் செய்ததில் என்ன தவறு என்று சவால் விட்டிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு. இதற்காக பிரதமர் அலுவலகம் எட்டு முறை பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து, மாநிலங்களவையில் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி.யை வெளியே அனுப்பி இருக்கலாம். தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று டி.ஆர். பாலு மனப்பால் குடிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அனுப்பாமல் தடுக்கும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதை தேர்தல் நேரத்தில் நிரூபிப்பார்கள் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

டி.ஆர். பாலுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: வைகோ

சென்னை, ஏப். 25: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து டி.ஆர். பாலுவை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகன்களால் நிர்வகிக்கப்படும், "கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேசன்', "கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேசன்' ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியன் ஆயில் மற்றும் எரிவாயு கழகத்தின் மூலம் எரிவாயு ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் அவர் தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

2007-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவர் யு.டி. சௌபே-வை அழைத்து, தனது நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு சப்ளை கழகத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மாவுக்கு கடிதம் எழுதுமாறு டி.ஆர்.பாலு வற்புறுத்தியுள்ளார். அதன்படி யு.டி. சௌபே, ஆர்.எஸ். சர்மாவுக்கு 2007-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி எழுதிய கடிதத்தில், 2006-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் டி.ஆர். பாலு தனது குடும்ப நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்க கோரியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தனது அமைச்சர் பதவியை குடும்ப நலனுக்கு பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தங்களின் நலனுக்கோ, தங்கள் குடும்ப நலனுக்கோ அப்பதவியை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது, தான் ஏற்றுக் கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு முற்றிலும் விரோதமாகும். இதன் மூலம் மத்திய அமைச்சராக நீடிக்கும் தார்மிக உரி மையை டி.ஆர். பாலு இழந்து விட்டார். இதனால் மத்திய அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. எனவே டி.ஆர்.பாலு அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம்

சென்னை, ஏப். 25: வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கணபதி கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம் தற்போது சரியாக செயல்படவில்லை. அதிமுக ஆட்சியில் திருக்கோயில் செயல் அலுவலர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டனர். பழனியில் ரூ. 4 கோடியில் ரோப் கார் அமைக்கப்பட்டது. ரூ. 30 கோடியில் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கும், ரூ. 4 கோடியில் சோளிங்கரிலும் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது?

கோயில் தெப்பக் குளங்களை உடனடியாக தூர் வார வேண்டும். எனது தொகுதியில் உள்ள திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுற்றுலாத் துறை ரூ. 59.15 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. ஆனால் கோயிலில் இருந்து 3 கி.மீ.தொலைவில் பக்தர்களுக்கான வசதிகளை அரசு செய்து வருகிறது. இந்தப் பணிகளை கோயிலுக்கு அருகில் மேற்கொள்ள வேண்டும். திருவக்கரை கோயிலில் திருவிழா நேரங்களில் சமய சொற்பொழிவும், பட்டி மன்றங்களும் நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் கோயில்களில் திருட்டு போகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி கபாலீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது என்றார் கணபதி.

கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):

நூற்பாலைகளில் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களிடம் 24 மணி நேரமும் வேலை வாங்குகின்றனர். மூன்று ஆண்டுகள் வேலை செய்தால் திருமணத்துக்கு ரூ. 25,000 தருகிறோம் என்று சொல்லி அவர்களை கசக்கி பிழிகிறார்கள். ஆனால் அந்தத் தொகையும் சரியாக வழங் கப்படுவதில்லை. அவர்களுக்கு முதல் ஆண்டு ரூ. 25-ம், இரண்டாவது ஆண்டு ரூ. 40-ம், மூன்றாவது ஆண்டில் ரூ. 60-ம் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இந்த முறையை அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் இருந்து தமிழக போலீஸôர் அகற்றப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள்தான் கண்ணகி கோயிலில் அர்ச்சனை செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு நம்பூதிரிகள் அர்ச்சனை செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கண்ணகி கோயிலில் வழிபடும் உரிமையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்

சென்னை, ஏப். 25: சென்னை அரசு பொது மருத்துவம னைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் நினைவாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்.

சோளிங்கர் மற்றும் பள்ளிப்பட்டில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோளிங்கர் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கப்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. அங்கு ரோப் கார் எப்போது அமைக்கப்படும்?

தமிழகத்தில் 4.78 லட்சம் ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலங்கள் உள்ளன. கோயில் நிலங்களை வைத்துள்ள 38,000 குத்தகைதாரர்கள் உரிய குத்தகை தருவதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட குத்தகைதான் இப்போதும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சிவன் சொத்து குல நாசம்:

கோயில் நிலங்களை உள் குத்த கைக்கு விட்டு அதிகம் சம்பாதிக்கிறார்கள். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். கொடியவர்களின் கூடாரமாக உள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க கோயில் நில பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக் கள் குழு அமைக்க வேண்டும் என்றார் அருள் அன்பரசு.

தூத்துக்குடி "ரோச்' பூங்காவில் படகு இல்லம்

சென்னை, ஏப். 25: தூத்துக்குடி "ரோச்' பூங்காவில் ரூ. 16 லட்சம் செலவில் படகு இல்லம் அமைக் கப்படும் என்று சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

அனிதா ராதாகிருஷ்ணன்:

தூத்துக்குடியில் உள்ள "ரோச்' பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் அமைக்கப்படுமா?

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

தூத் தக்குடி "ரோச்' பூங்காவில் ரூ. 16 லட்சம் செலவில் படகு இல்லம் அமைக்கப்படும்.

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (அதிமுக):

திருச்செந்தூர் புராதனமான நகரம். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கலைநயம் மிக்க முருகன் கோயில் அங்கு உள்ளது. நாழிக் கிணறு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் இடம். 30 மசூதிகளைக் கொண்ட காயல் மாநகர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. புனித சவேரியார் வந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை வளர்த்த மணப்பாடு என்ற ஊரும் அருகில் உள்ளது. எனவே திருச்செந்தூரை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

சுற்றுலாத்துறை எந்த இடத்தையும் சுற்றுலாத் தலமாக அறிவிப்பதில்லை. சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஏற்கனவே திருச்செந்தூரில் சுற்றுலாத் துறை சார்பில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் ரூ.10.72 கோடியில் வணிக வளாகம்: ஸ்டாலின்

சென்னை, ஏப். 25: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 10.72 கோடி செலவில் வணிக வளாகம் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

அ. தமிழரசு (பாமக):

தமிழகத்தில் சுமார் 3,60,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவர்கள் தயாரிக்கும் தோல் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கொசுவலை போன்ற பொருட்களை விற்பனை செய்ய சென்னையிலும், மாவட்ட மற்றும் ஒன்றிய தலைநகரங்களிலும் வணிக வளாகம் கட்ட அரசு முன்வருமா?

அமைச்சர் மு.க. ஸ்டாலின்:

தமிழ கத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 10.72 கோடி செலவில் 36,300 சதுர அடி பரப்பில் பொருட்காட்சி மற்றும் விற்பனை அரங்கம் கட்டப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் கட்டப்பட இருக்கும் இந்த வளாகத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய 29 மாவட்டத் தலைநகரங்களில் "பூமாலை' வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.

அ. தமிழரசு:

ஓமலூர் தொகுதியில் சுமார் 1,300 மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உள்ளன. எனவே அங்கு வணிக வளாகம் அமைக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இடைத் தரகர்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் மு.க. ஸ்டாலின்:

அங் கொன்றும் இங்கொன்றுமாக இடைத்தரகர்கள் பிரச்னை இருக்கிறது. இடைத்தரகர்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம்

சென்னை, ஏப். 25: வோளாண் துறையில் 1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

ஞானசேகரன் (காங்கிரஸ்):

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை யில் "நவ்லாக்' தோட்டக்கலை பண்ணை உள்ளது. எனவே அங்கு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். தமிழகத்தில் வேலை இல்லாத வேளாண் பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

தமிழகம் முழுவதும் 5,520 வேளாண் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். 1,648 வேளாண் பட்டதாரிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர். 520 வேளாண் அலுவலர்களையும், 47 தோட்டக்கலை அலுவலர்களையும் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். வேளாண்துறையில் காலியாக உள்ள 1,707 வேளாண் அலுவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

வீ.ஏ.டி. கலியவரதன் (பாமக):

எனது முகையூர் தொகுதியில் எந்தக் கல்லூரி யும் இல்லை. எனவே வேளாண்மைத் தொழில் கல் லூரியாவது அமைக்கப்ப டுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

தமிழகத்தில் 12 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கே முழுமையாக வேலை வழங்க முடியவில்லை. தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை படிக்க போதுமான இடங்கள் உள்ளன. ஒரு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டுமானால் 200 ஏக்கர் நிலமும், ரூ. 150 கோடியும் தேவைப்படும். பணத்தைக்கூட எப்படியாவது திரட்டி விடலாம். ஆனால் 200 ஏக்கர் நிலத்தை உடனடியாக கையகப்படுத்துவது சாத்தியமற்றது. தமிழகத்தில் 56 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சார்ந்துள்ளனர். தற்போது புதிதாக வேளாண் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் இல்லை. எதிர்காலத்தில் இது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

மாவட்டம் தோறும் முதியோர் இல்லம்

சென்னை, ஏப். 25: மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் கட்டப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சை. சையது கௌஸ் பாஷா (திமுக):

தற்போது குழந்தைக ளால் கைவிடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் முதியோர் இல்லங்களில் எல்லோரையும் சேர்ப்பதில்லை. எனவே மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பூங்கோதை:

தமிழகத்தில் முதியோர் இல்லங்களை அரசு நடத்தவில்லை. முதியோர் இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தனிக்குடித்தனம் அதிகரித்து வருவதால் குழந்தைகளால் கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசின் பெற்றோர், மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிலத்தைத் தேர்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.

Friday, April 25, 2008

குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது: முதல்வர்

சென்னை, ஏப். 24: திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டதால் இறந்த குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இறந்த நான்கு குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இது குறித்து பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

ஏதும் அறியாத இளம் குழந்தைகள் மரணத்தைத் தழுவியிருப்பது உச்சகட்ட சோகமாகும். வழக்கத்துக்கு மாறாக நாமே கொன்று விட்டதைப் போன்று இந்த குழந்தைகளின் சாவு அமைந்து விட்டது. இறந்த குழந்தைகள் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா, லோகேஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 12 லட்சம் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

முன்னதாக இந்தப் பிரச்னை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி வட்டம் கட்ச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் பென்னலூர்பேட்டை கிராமத்தில் ஏழுமலை மகள் நந்தினி, வள்ளிமுத்துவின் மகள் பூஜா, மோகனின் மகள் மோகனப்பிரியா ஆகிய மூன்று குழந்தைகளும், திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் வெங்கடாபுரம் கிராமத்தில் குப்பையாவின் மகன் லோகேஷ் என்ற குழந்தையும் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டதால் ஏற்பட்ட அலர்ஜியால் இறந்துள்ளனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் நான் அங்கு சென்று இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். குழந்தைகளின் மரணம் குறித்து ஆய்வு செய்ய "விரைந்து செயலாற்றும் குழு' அமைக்கப்பட்டது.

மத்தியக்குழு வருகை:

குழந்தைகளுக்கு போடப் பட்ட தடுப்பு மருந்து, கலக்கும் திரவம் ஆகியவை ஆய்வு செய்வதற்காக இமாசல பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆய்வுக்குழு விரைவில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 276 குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமான ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதன் கிழமை (ஏப். 23) தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இந்த சம்பவத்தினால் தட்டம்மை தடுப்பூசி போடுவது தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட 5 குழந்தைகள் பயத்தின் காரணமாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அந்த 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேறு இடமே இல்லையா?

சென்னை, ஏப். 24: தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். இது குறித்து பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் பிரசித்தி பெற்ற உரையாற்றிய பிறகு 1897-ல் சென்னையில் தற்போது விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தில் அவர் 10 நாட்கள் தங்கியிருந்தார். விவேகானந்தர் இல்லத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உலகமே வியந்து பார்க்கின்ற, பல நூற்றாண்டாக உள்ள அந்த இல்லத்துக்கான குத்தகை 2010 வரை இருக்கிறது. ஆனால் அந்த இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியதாகவும், கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வந்துள்ளன. செம்மொழி மையம் அமைக்க வேறு இடமே கிடைக்கவில் லையா? விவேகானந்தர் இல்லத்தை அதே இடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

நல்ல திட்டங்கள் வரும்போது அதற்கு சிலர் தடையாக இருக்கிறார்கள். விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் நினைவுச் சின்னம் உள்ளது. அவர் நினைவாக கல்லூரிகள் உள்ளன. அதனால் விவேகானந்தர் இல்லத்தில் தாற்காலிகமாக தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கலாம். செம்மொழி மையம் சென்னை நகரின் மையத்தில் அமைவதுதான் நல்லது.

கி. ஆறுமுகம் (பாமக):

விவேகானந்தர் தியானம் செய்த இடத்தைத் தவிர அந்த வளாகத்தில் உள்ள மற்ற இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமைக்கலாம்.

கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):

ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில் ராமகிருஷ்ண மடத்தை புதுப்பிக்க அந்த மாநில அரசு ரூ. 21 கோடி ஒதுக்கியுள்ளது. விவேகானந்தர் இல்லத்தை பழைய இடத்திலேயே செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்):

ராமகிருஷ்ண மடத்துக்கு சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர் என்று பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அங்கு அவர்கள் விவேகானந்தர் பற்றிய கண்காட்சியை வைத்துக் கொள்ளலாம். விவேகானந்தர் இல்லத்தில் தமிழ் செம்மொழி மையம் அமைப்பதுதான் சரியானது.

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயலவில்லை

சென்னை, ஏப். 24: விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி செய்ய வில்லை என்று முதல்வர் கருணாநிதி மறுத்தார். தமிழ் செம்மொழி மையம் தாற்கா லிகமாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய தமிழக அரசு நிர்பந்தம் செய்வதாக செய்திகள் வெளியாயின. அரசின் இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சட்டப் பேரவை வியாழக்கிழமை காலை கூடியதும் அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீúஸô, கடிதமோ எழுதவில்லை. விவேகானந்தர் இல்லத்தை இடிப்பதாகவோ அல்லது புதிய இடத்துக்கு மாற்றுவதாகவோ எந்தப் பிரச்னையும் எழவில்லை.

சாமியார்களிடம் மோதவிடுவதா?

அதை ஏன் அபகரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிய வில்லை. பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிறபோது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ள வேண்டும்? தமிழ் செம்மொழி மையத்துக்கு தாற்காலிகமாக இடம் தேடியபோது, ஏதேதோ கதை கட்டி, அது பலிக்காத காரணத்தால் எங்களை சாமியார்களுடன் மோதவிடுவதற்காக சில காரி யங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சாமியார்களிடம் மோதவிட்டாலும், மாமியார்களிடம் மோதவிட்டாலும் நாங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை.

மூட நம்பிக்கைகளை சாய்த்தவர்:

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தியவர். புகை பிடித்தவர். மனம் சுத்தமாக இருந்தால் இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கத்தோடு செயல்பட்டவர். கட்டடத்தை எடுக்கப் போவதில்லை என்றபோதிலும் விவேகானந்தர் குறித்து எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக இடம் கொடுத்தோம். அப்படிப்பட்ட விவேகானந்தரின் பெயரால் இருக்கிற மண்டபத்தை இடிக்க யாரும் விரும்பவில்லை. நினைக்கவும் இல்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.

ரூ. ஆயிரம் குத்தகை:

897-ம் ஆண்டில் 9 நாட்கள் விவேகானந்தர் தங்கி சொற்பொழிவுகள் நிகழ்த்திய இடம் என்பதால், அதன் நினைவாக அந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்குமாறு மடத்தின் தலைவர் அரசிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி 27,546 சதுர அடி பரப்ப ளவு கொண்ட அந்த இடம் 1997-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, சில நிபந் தனைகளுடன் ராமகிருஷ்ண மடத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ. ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு, விவேகானந்தர் இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி, அந்த இல்லத்தின் முன்பு உள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் கோரியது.

அதையும் திமுக அரசு பரிசீலனை செய்து 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி மூன்று ஆண்டு குத்தகைக்கு விட்டது. இந்த இல்லத்தை 30 ஆண்டு குத்த கைக்குத் தர வேண்டும் என்று ராமகிருஷ்ண மடம் கோரிக்கை வைத்தபோது "அமைச்சரவைக் கூட்டத்தில் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும்' என்றேன். விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடிக்கும் மேல் என்பதால் சலுகை குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டுகளுக்கு 2000-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி குத்தகைக்கு விடப்பட்டது.

சாதுக்கள் சவால் விடக் கூடாது:

"அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம்; முறைப்படிதான் நடக்கிறோம்' என்று அந்த மடத்தின் பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கு எல்லாம் பயப்படவில்லை. சாதுக்கள் சவால் விடுகிற அளவுக்கு வரக்கூடாது. அது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் கொள்கைக்கு விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? குமரி முனையில் அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அû மத்து , இங்கே விவேகôனந்தர் மண்டபத்தை போஷித்து பாதுகாத்து வருகிற அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல. சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

"பாலாறு இல்லத்தில்' செம்மொழி மையம்:

தமிழ் செம்மொழி மையம், தாற்காலிகமாக அதே காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.

Thursday, April 24, 2008

மிரட்டி வசூல் செய்கிற பழக்கம் எனக்கு இல்லை

சென்னை, ஏப். 20: யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக்கம் எனக்கு வராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கேள்வி - பதில் வடிவில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக ரூ. 1,300 கோடியை ஏன் ஜப்பானிடம் வாங்க வேண்டும்? அரசியல் கட்சிகளுக்கு பணம் சப்ளை செய்வதற்காக இங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பிறகுதான் இதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் கூறியிருக்கிறார். அரசியலில் பல ஆண்டுகளாக இருக்கும் எனக்கு அந்த இரண்டு நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்துக்கு தெரிந்திருக்கிறது. அப்படியே தெரிந்தாலும், யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக் கம் எனக்கு வராது. அரசியலுக்கு வந்த குறுகிய காலத்தில் இது போன்று பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கிறது.

ஒளிந்து கொள்வது எங்கே?

தமிழக உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை புலனாய்வுத் துறை ஒட்டுக் கேட்டதாகக் கூறி, ஒரு சி.டி.யை அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் தூக்கிக் காட்டிய காட்சி புகைப்படமாக வந்திருக்கிறது. அவர்களின் அந்த மிரட்டலுக்கெல்லாம் யார் பயப்படுவார்கள்? அவர்கள் சி.டியை காட்டுவது இருக்கட்டும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்த அவர்களின் கையெழுத்தோடு கூடிய கோப்புகளை தூக்கிக் காட்டினால் எங்கே போய் ஒளிந்து கொள்வார்கள்?

சென்னை உயர் நீதிமன்றத்தின் மொழியாக தமிழைக் கொண்டுவர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று மத்திய சட்ட அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் கூறியுள் ளார்.அவர் அளித்த உறுதி மொழியின் படி விரைவில் நல்ல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று நம்புகிறேன்.

மரண தண்டனை...:

உலகளவில் மரண தண்டனையே கூடாது என்ப துதான் எனது கொள்கை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக வேண்டுகோள் விடுத்து, பாகிஸ்தானின் லாகூர் சிறையில் வாடும் இந்தி யரான சரப்ஜித் சிங்கின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

சவால் விடுவதா?

தமிழ்நாடு, கர்நாடக மக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பைக் கருதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு ஒத்திவைத்ததற்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று துள்ளிக் குதிக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் இருந்த போது வாய்மூடி மெüனமாக இருந்தவர்கள் தி.மு.க. அரசு தானாக முன்வந்து, தூங்கிக் கொண்டிருந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து நிறைவேற்ற முன்வந்துள்ள நிலையில் சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு ஏன்?

சென்னை, ஏப். 20: மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள வரைவு சாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லியில் நடை பெறும் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார் பில் பிரதிநிதிகளை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதிக்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி தமிழகத்தி லிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்துள்ளது.

அதில், "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் இந்த வரைவு சாசனம் நிறைவேற்றப்பட்டு பிரதமரி டம் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

பிரதமருக்குக் கடிதம்:

இதுகுறித்து மார்ச் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிராக இந்த வரைவு சாசனம் அமைந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, மாநில அரசுகளை பலவீனப் படுத்த மேற்கொள்ளப்படும் இந்த முயற் சிகளை ஏற்க முடியாது.

ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று அந்தக் கடிதத் தில் கருணாநிதி கூறியிருந்தார். முதல்வரின் கடிதத்தில் உள்ளபடி ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படவில்லை. எனவே தில்லி மாநாட்டில் கலந்து கொள்வ தில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது மேற்கு வங்க அரசும், மத்திய அரசின் வரைவு சாசனத்தை எதிர்த்து மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகா ரப் பரவலாக்கம் செய்வதிலும், கூடுதல் நிதி வழங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழக அரசு முன்னணியில் உள்ளது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்ட்டு அவற்றின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மாநில அரசு தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து தான் வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

மனநோயாளிக்கு பின்னால் உள்ள நோயாளிகளை கண்டறிய வேண்டும்:

மார்க்சிஸ்ட் சென்னை, ஏப். 23: மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை அவமதித்த மனநோயா ளிக்கு பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன் அரசைக் கேட்டுக் கொண்டார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை, மர்ம நபர்களால் ஏப்ரல் 21-ம் தேதி அவமதிக் கப்பட்டது. இது குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:

நன்மாறன் (மார்க்சிஸ்ட்):

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை மனநோயாளியால் அவமதிக்கப்பட்டது வேதனையைத் தருகிறது. இந்த மனநோயாளிக்குப் பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும். முத்துராமலிங்கத் தேவர் தியாக வாழ்வு வாழ்ந்த தேசியத் தலைவர். அவரை வைத்து தன் நலனை வளர்த்துக் கொள்ள யாரையும் அனுமதிக்கக் கூடாது.

துரைராஜ் (அதிமுக):

மதுரை யில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒரு மனநோயாளியை கைது செய்திருப்பது போலீஸôர் திட்டமிட்டு நடத்திய நாடகம். உசிலம்பட்டியில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சிலைகளைப் பற்றி இந்த அரசு எங்கே கவலைப்படப் போகிறது? தேவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உ. மூர்த்தி (திமுக):

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கருணாநிதிதான் உருவாக்கினார். திமுக ஆட்சியில்தான் மூன்று கல்லூரிகள் அந்தப் பகுதியில் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சி யில்தான் தேவர் சமுதாயதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தேவர் சிலையை அவமதித்த மனநோயாளியை போலீஸôர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுகிறது.

ராஜேந்திரன் (காங்கிரஸ்):

மதுரை கோரிப்பாளையத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தேவர் சிலையை அவமதித்த மனநோளி கைது செய்யப்பட்ட பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):

திமுக எம்.எல்.ஏ மூர்த்தியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திரனும் தவறான தகவலைத் தந்துள்ளனர்.பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையா தேவர்தான் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை உருவாக்கினார். கருணா நிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்த சிலையை வி.வி.கிரி திறந்து வைத்தார்.

ஜி.கே. மணி (பாமக):

கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது வேதனையைத் தரு கிறது. கைது செய்யப்பட்ட மன நோயாளிதான் உண்மையான குற் றவாளியா? அவருக்கு பின்னால் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும்.

வீர இளவரசன் (மதிமுக):

வைத்தியநாத அய்யர் தலைமையில் தலித்துகள் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்தபோது அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவருக்கு இருந்த நிலங்களை எல்லாம் தலித் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அப்படிப்பட்ட தேவர் திருமகனாரின் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். வேறு எந்த தலைவரின் சிலைக் கும் இதுபோன்ற அவமதிப்பு நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஏப். 23: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இது குறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சிலை பைத்தியக்காரரால் அவமானப்படுத்தப் பட்டுள்ளது. இனி இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்த சிலைக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். முத்துராமலிங்கத் தேவர் இன்று சிலை வடிவத்தில் இருந்தாலும் காமராஜரை உருவாக்கிய, தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தலைவர். தேவருக்கும் காமராஜருக்கும் சில அரசியல் மாறுபாடுகள் இருந்தது. ஆனாலும் தேவர் மீது காமராஜர் கொண்ட அன்பும் பாசமும் எள்ளளவும் குறைந்தது இல்லை.

தேவர் மீது அண்ணா மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர். எளிமைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர்.

வீட்டுக்குள் இருந்தே ஓட்டு:

அவரது மறைவு தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக் கியது. வீட்டுக்குள் இருந்து கொண்டு ஓட்டு வாங்கிய தலைவர் இந்தியாவில் அவர் மட்டுமே. அப்படிப்பட்ட தலைவரை இன்னும் சில காலம் பாதுகாக்க முடி யாமல் போனது, நமக்கு அவப்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தேவர் சிலை இல்லாத இடங்கள் இல்லை என்கிற அளவுக்கு பல்லாயிரக்கணக்கான சிலைகள் உள்ளன.

சிலர் தேவரின் அருமை பெருமைகளை உணராமல் அவரது சிலையை உடைத்தும், அசிங்கப்படுத்தியும் வருகிறார்கள். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையை பைத்தியக்காரர் ஒருவர் அசிங்கப்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதல்வர் கருணாநிதி.

தேவர் சிலையை உடைத்தது யார்?

சென்னை, ஏப். 23: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை உடைத்தது யார்? என்பது தொடர்பாக அதிமுக -கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி, "ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலை சில மாதங்களுக்கு முன் உடைக் கப்பட்டது. மணல் எடுப்பதில் மாமூல் வாங்குவது தொடர்பான பிரச்னையில் அந்தச் சிலையை உடைத்தது அதிமுகவைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மையின் மகன்' என்றார்.

உடனே அதிமுக உறுப்பினர் கள் அனைவரும் எழுந்து நின்று ராமசாமி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அதிமுக கொறடா செங்கோட்டையன் எழுந்து, "அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி பேசினார். அதனை நிரூபிக்க தயாரா? அதுவரை அவர் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றார்.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஊர் நாட்டாண்மையின் மகன்தான் அங்குள்ள தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று சிவபுண்ணியம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். அவர் அரசுக்கு வக்காலத்து வாங்கட்டும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இயக்கத்தை அவர் அவமதிக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி:

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது முத்துதேவன்பட்டியில் இப்போது மதிமுகவில் இருக்கும் ராமகிருஷ்ணனின் நிலத்தை வாங்கி எனது மகன் அழகிரிக்கு எழுதிக் கொடுத்ததாக இதே அவையில் அப்போது அமைச்சராக இருந்த குழந்தைவேலு குற்றம் சாட்டினார்.அதற்கான ஆதாரத்தைக் காட்டினால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இல்லையெனில் குழந்தைவேலு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றேன். இந்த சவாலை குழந்தைவேலு ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால் ஆதாரத்தைக் கொடுக்க முடிய வில்லை. நானும் தினமும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அவர் ஆதாரத்தைக் கொண்டு வந்தார். அது போலி ஆதாரம் என்பதை அப்போதிருந்த பேரவைத் தலைவர் கண்டுபிடித்து எனக்கு சாதகமாக தீர்ப்பு தந்தார். ஆனாலும் குழந்தைவேலு ராஜினாமா செய்ய வில்லை. அதுபோன்ற ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள் ளது.

செங்கோட்டையன் (அதிமுக):

நிரூபிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? சங் கரலிங்கபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்ட வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. முதல்வர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.

அமைச்சர் பரிதி இளம் வழுதி:

சரக்கு இருந்தால் சவால் விட லாம். இல்லையென்றால் சலாம் போட்டு ஓடி விட வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

குற்றம் சாட்டிய உறுப்பினர் நிரூபிக்கிறேன் என்று பொறுப்பு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபு.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :

ஆளும் கட்சியினர் பிரச்னையை தீர்ப்பதற்கு முயலாமல் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது வேதனையைத் தருகிறது.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

சங்கரலிங்கபுரம் ஊர் நாட்டாண்மை வேல்முருகனின் தம்பி மாரிமுத்துதான் தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.

முதல்வர் கருணாநிதி:

சிவ புண்ணியமும், செங்கோட்டையனும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை என்னிடம் கொடுத்தால் நாளை எனது முடிவை அறிவிக்க தயாராக இருக்கிறேன்.

முதல்வர் தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ்கள் ஓடவில்லை

சென்னை, ஏப். 23: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ்கள், டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. விஜயகுமார் குற்றம் சாட்டினார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் பல இடங்களில் டிரைவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களும் டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை. அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுவதைவிட மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

அதுபோல அரசு மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்தால்தான் ஊசி போடுவேன் என்கிறார்கள்.

ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் குழந்தைகள் மாறியதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயகுமார்.

144 பேருக்கு பணி நிரந்தர ஆணை: கருணாநிதி வழங்கினார்

சென்னை, ஏப். 23: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தின் நேரடி கொள்முதல் நிலையங் களில் தாற்காலிகமாக பணியாற்றி வந்த 144 பேர் பணி மூப்பு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நிரந்தர ஆணையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.

அதன் படி 144 பணியாளர்களுக்கும் கால முறை விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியின்போது, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கே.பனீந்திர ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

ரூ. 1,500 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்

சென்னை, ஏப். 23: சென்னை தரமணியில் ரூ. 1,500 கோடியில், தக வல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முதல்வர் கருணாநிதி முன்னிû லயில் டி.எல்.எப். நிறுவனத்தடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தமிழக அரசின் சார் பில் டிட்கோ நிறுவனத்தின் தலைவர் எஸ். ரôமசுந்தரமும் , டி.எல்.எப். நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் கே.பி. சிங்கும் இந்த ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டனர்.

சென்னை தரமணியில் உள்ள ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) தகவல் தொழில் நுட்ப மையமாகத் திகழ்கிறது. அங்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், (டிட்கோ) கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ள டி.எல்.எப். நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.

சுமார் 26.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய உள்ளது. 45 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் அமைக்கப்பட உள்ளன. 2009-ம் ஆண்டு 25 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். மீதமுள்ள பணிகள் 2011- க்குள் முடிக்கப்படும். இதன் மூலம் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரிடையாகவும், 10 ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம்:தமிழக கோரிக்கை ஏற்பு

சென்னை, ஏப். 22: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். பேரவையில் செவ்வாய்க்கிழமை விதி எண் 110-ன் கீழ் அமைச்சர் ஸ்டாலின் படித்த அறிக்கை:-

ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2007-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகளின் பட்டியலை தயார் செய்து கடந்த மார்ச் 20- ம் தேதி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.

இதற்கிடையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்தது. அதில், ""ஊராட்சிகள்'' என்ற பொருளை மாநில அரசுப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, ஊராட்சிகள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பது போன்ற ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. "இந்த வரைவு சாசனத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை நீக்க வேண்டும். அதன் அடிப்படை யில்தான் தில்லி மாநாட்டில், தமிழ் நாட்டில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மார்ச் 29-ம் தேதி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்தது.

பிரதமர் கடிதம்:

மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கோ, இணைப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று வரைவு சாசனத்தில் உள்ள பரிந்துரையை இந்த சாசனத்தில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஏப்ரல் 21-ம் தேதி கிடைத்தது.

இந்தப் பரிந்துரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டாலும், தேசிய வளர்ச்சி மன்றம் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகுதான் இறுதி செய்யப்படும் என்றும் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனாலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள மாநாட்டில் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகளை அனுப்ப கால அவகாசம் இல்லை. அதனால் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு சாசனத்தின் ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் குறித்து தமிழக அரசின் நிலையை மத்திய அரசு ஏற்றுக் ùகôண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் மு.க. ஸ்டாலின்.

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத ஊதியம்

சென்னை, ஏப். 22: இளம் வழக்க றிஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டம், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

இளம் வழக்கறிஞர்கள் ஆரம்ப காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இளம் வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு 3 ஆண்டுகளுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு பெருநகரங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பயணப்படி வழங்க வேண்டும். தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உருவாக்க வேண்டும். ஒரத்தநாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றார்.

எம்.வி.ஆர். வீரகபிலன் (அதிமுக):
கடலில் இருந்து 1,000 மீட்டர் தொலைவில் குடியிருக்கும் மீனவர்களுக்கும் சுனாமி நிவாரணமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை இழக்கும் முன் விலைவாசியை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூட்டணி பற்றிதான் கவலைப்படுகின்றன.

வீர இளவரசன் (மதிமுக):

நீதி மன்றமும், சட்டப்பேரவையும் ஒன்றையொன்று சார்ந்து இருந்தால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். எந்த நோக்கத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கம் பாதிக்கப்படாத வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு "தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் சூட்ட வேண்டும்' என்றார்.

நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது

சென்னை, ஏப். 22: மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் பீட் டர் அல்போன்ஸýக்கு சென்றுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

முதல்வர் கருணாநிதி:

மாநில அரசிடம் உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிவதை திமுக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தில்லியில் நடக்கும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றால் ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகளை ஏற்றதாகி விடும். அந்த அவமôனத்துக்கு ஆளாக வேண்டாம் என்றுதான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்தோம். இந்த விஷயத்தில் நம்முடைய மனம் புண்பட்டிருப்பûத உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், புண்ணுக்கு மருந்தாக கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் நண்பர் பீட்டர் அல்போன்ஸýக்கு வந்துள்ளது.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

கடிதத்தின் நகல் தான் எனக்கு வந்துள்ளது.

முதல்வர் கருணாநிதி:

நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நமது அரசியல் சட்ட அமைப்பே அப்படி உள்ளது. அதனால்தான் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று கூறினோம். நம்முடைய கருத்தை மதித்து கடிதம் எழுதிய பிரதமர் மன் மோகன் சிங்குக்கு பேரவையின் சார்பிலும், அரசின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை மாற்றப் போவதில்லை என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகள் வெளியில் இருந்து மத்திய அரசை ஆதரிக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சாசனம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் வைக்கப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யாமல் எப்படி தேசிய வளர்ச்சி மன்றத்திலும், பிரதிநிதிகள் மாநாட்டிலும் வைக்க முடியும். இது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை.

ஜி.கே. மணி (பாமக):

மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக மாநில அரசின் நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கிறது. வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசு சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டதா?

அமைச்சர் மு.க. ஸ்டாலின்:

வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசின் சார்பில் எந்தக் குழுவும் அனுப்பப் படவில்லை.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

மத்திய அரசிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரங்களை தட்டிப் பறிப்பது கடும் கண்டனத்துக்குரியது. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தைப்போல மேற்கு வங்க அரசும் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.

சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசுக்கு மாற்றுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு நேர்மாறாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர்'

விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் முயற்சி தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது. ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

விவேகானந்தர் தமிழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஏற்புடையதல்ல

சென்னை, ஏப். 22: விவேகானந் தர் இல்லத்தை காலிசெய்ய தமிழக அரசு கொடுத்துள்ள திடீர் நெருக்கடி அதிர்ச்சி அளிக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

"ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக் கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக்கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல.

எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி

சென்னை, ஏப். 22: கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல் லத்தை கருணாநிதி அபகரிக்க முயற்சி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ் செம்மொழி மையத்தில் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன்மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத் தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார். இந்தியத் திருநாட்டின் பெரு மையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.

அந்த இடத்தில் சுவாமி விவேகா னந்தரின் போதனைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது. பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலி ருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பய ணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகி றது. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.

செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என்றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமா றும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகானந்தரை திட்டமிட்டு அவமதிப்பது போல் உள்ளது. தமிழ் மொழி, செம்மொழி என்று ஆரம்பித்து கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம். மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் விவேகானந்தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபகரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பரிசீலனை

சென்னை, ஏப். 21: திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தெரிவித்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

செ.ம. வேலுசாமி (அதிமுக):

திருப்பூர், கோவை இரண்டு நகரங்களுக்கும் மையமாக உள்ள பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு முன்வருமா? அதற்கு தேவையான நிலம் பல்லடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி சி.வி. குடியிருப்பு பகுதியிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய பகுதிகளில் எப்போது உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்?

அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்:

இடவசதி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைக் கேற்ப விளையாட்டு கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் அரசின் பரீசி லனையில் உள்ளது. பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் பரிந்துரைத்தால் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும். கோவையில் இடம் கிடைத்தால் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள்

சென்னை, ஏப். 21: கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா பீட்டர் அல்போன்ஸ் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

பாலபாரதி (மார்க்சிஸ்ட்):

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட் டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா?

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை வடிவமைத்தவர் ராஜீவ் காந்தி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர் இதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்திருந்தால் 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். எங்கள் நேரம் உங்கள் தயவில் எல்லாம் ஆட்சி நடத்த வேண்டி இருக்கிறது. மத்திய அரசை கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தால் இந்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றி விடலாம்.

நன்மாறன் (மார்க்சிஸ்ட்):

33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட்டுகள் இடையூறு செய்யவில்லை.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

பகுதி, பகுதியாக இடை யூறு என்பதெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஒட்டுமொத்தமாக இடையூறு செய்வதால்தான் மத்திய அரசால் செயல்பட முடியவில்லை.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

நல்ல திட்டங்களை எப்போதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிப்பார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத் துக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படும்போது நாட்டு நலன் கருதி அதனை எதிர்க்கிறோம். கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரித்தால் அமெரிக்காவிடம் இந்தியாவை ஒப்படைத்து விட்டால் என்ன செய்வது?

டி. சுதர்சனம் (காங்கிரஸ்):

இந்தியா எந்த நாட்டுக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இது பற்றி தனியாக ஒரு நாள் விவாதம் நடத்தலாம். சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் பதில் அளிக்க வேண்டியிருப்பதால் இத்தோடு முடித்து விடுவது நல்லது என்றார்.

சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு

சென்னை, ஏப். 21: சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ லதா கோரிக்கை விடுத்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 41,663 சத்து ணவு மையங்களிலும் எரிவாயு இணைப்பு, புகைப்போக்கியுடன் கூடிய நவீன சமையல் கூடம் அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள் ளிட்ட எல்லாத் துறைகளிலும் சரி பாதி பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணையம் மூலமாக பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மகளிர் ஆணையத்துக்கு பெண் ணிய சிந்தனை உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஆணையத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான் மையின பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஆண் வாரிசு உள்ள முதியோர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுக்க பெண்கள் தினத் தன்று கருத்தரங்குகளை அரசு நடத்த வேண்டும் என்றார்.

இளமதி சுப்பிரமணியம் (அதிமுக):

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊதியம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் தொலைநோக்கு திட்டமான தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு திமுக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.

மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்

சென்னை, ஏப். 21: மாநில மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பத்மாவதி கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் திங் கள்கிழமை நடைபெற்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

மாநில மகளிர் ஆணையத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். ஆணையத்தின் முடிவுகளை சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும். ஆண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து உடம்பில் சூடு போட்டு பிச்சை எடுக்கும் கும்பலை திருச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு வார விடுமுறை, கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.500-க்குக் குறையாமல் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு தயாரிக்க ஒரு குழந் தைக்கு வழங்கப்படும் 44 பைசாவை அதிகப்படுத்தி ஒரு ரூபாய் வழங்க வேண்டும். ஊன முற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும்.

சக்தி கமலாம்பாள் (பாமக):

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அவல நிலையில் உள்ளது. போதுமான டாக்டர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டும். முதியோர் உதவித் தொகையை விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாழைப்பழமும், மாம்பழமும் வழங்க வேண்டும். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சித் திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழா ஆண்டான இந்த ஆண்டில் காஞ்சிபுரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காஞ்சிபுரத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றார்.

இளம் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும்

சென்னை, ஏப். 21: இளம் வயது சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.எஸ்.எஸ். ராமன் கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

16 வயதுக்கு குறைவான இளம் வயதினர் சர்க்கரை நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சுலின் இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. எனவே அவர்களை ஊனமுற்றோர்களாக அறிவித்து சலுகைகள் வழங்க வேண்டும்.

கோயில் நிதியிலிருந்து இலவச திருமணம்:

திருப்பதி தேவஸ் தானம் மூலம் ஒரு ஜோடிக்கு ரூ.50,000 செலவில் இலவச திருமணங்களை ஆந்திர அரசு நடத்தி வருகிறது. அதனைப் பின்பற்றி தமிழகத்தில் பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியைப் பயன்படுத்தி இலவச திருமணங்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.

முதியோர்களுக்கு மணியார்டர் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு உதவித் தொகை முழுமையாக கிடைப்பதில்லை. எனவே வங்கி மூலம் நேரிடையாக முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும்.

தனியார் நடத்தும் மறுவாழ்வு மையங்களை கண்காணிக்க அரசு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். சென்னையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அரசே நடத்த வேண்டும் என்றார் இ.எஸ்.எஸ்.ராமன்.

கழிவு நீரை அகற்ற புதிய இயந்திரம்

சென்னை, ஏப். 21: சென்னையில் கழிவு நீரை அகற்ற தூர் வாரும் இயந்திரத்தை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2006-07-ஆண்டு உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ரூ.3 கோடி செலவில் கழிவு நீரை அகற்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னை குடிநீர் வாரியத்தால் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணியாளர்கள் கழிவு நீரில் இறங்குவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.

தற்போது சென்னை மாநகரில் சுமார் 2,671 கி.மீ. நீளத்துக்கு கழிவு நீர் குழாய்களும், சுமார் 77,081 கழிவு நீர் நுழைவாயில்களும், 185 கழிவு நீரேற்றும் நிலையங்களும் உள்ளன. கழிவு நீரை அகற்ற தூர்வாரும் இயந்திரங்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் மூலம் 32 அடி ஆழம் வரை உள்ள கழிவு களை அகற்ற முடியும். இந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ. 5,85,390. முதல் கட்டமாக மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை மூன்று மாதம் ஆய்வு செய்தபிறகு மேலும் இயந்திரங்கள் வாங்கப்படும்.

இந்த இயந்திரத்தை திரு வல்லிக்கேணி வாலாஜா சாலையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே. தீனபந்து, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா, செயல் இயக்குநர் சி. தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். .

Saturday, April 19, 2008

சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு கோரி மனு

சென்னை, ஏப். 19: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி, காங்கிரஸ் தலைமை அலுவலகச் செயலாளர் ராஜன், அண்ணா சாலை காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி ஆகி யோர் சமீபத்தில் மாவட்ட நிர் வாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். வாசன் ஆதரவாளர்களான அவர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் வரை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜி.கே. மூப்பனார் பேரவை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் அலுவலகச் செயலாளர் ராஜன், சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்புக்கேட்டு காவல் நிலையத்தில் மனு கொடுத்திருப்பது காங்கிரஸôர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிமுகவினர் விளக்கேற்றி வழிபாடு

சென்னை, ஏப். 19: சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் விளக்கேற்றி சித்ரா பௌர்ணமியை கொண்டாடினார்கள். சித்ரா பௌர்ணமி தினத்தன்று அதிமுகவினர் தங்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிடுமாறு அதிமுக பொதுச்செயளாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி சென்னையில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் விளக்கேற்றி சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். வடசென்னையில் ஆர்.கே. நகர் தொகுதியில் 10 அடி உயர அகல் விளக்கை அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் ஏற்றினார். வட சென்னையில் சுமார் 2,000 பெண்கள் விளக்கேற்றினார்கள்.

தென்சென்னை:

தென் சென்னை மாவட்டத்தில் 10 வட்டங்களில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் சுமார் 5,000 பெண்கள் விளக்கேற்றினார்கள். சைதாப்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செந்தமிழன் உள்ளிட்டோர் விளக்கேற்றினார்கள்.

Friday, April 18, 2008

தமிழக சட்டப் பேரவை கவரேஜ் - முத்தையா சரவணன்

மார்ச் - 20, 2008

சென்னைக்கு கூடுதலாக1.5 கோடி லிட்டர் குடிநீர்

தாட்கோ கடன் ரூ. 5.5 கோடி தள்ளுபடி

புத்தக பதிப்பாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள், நரிக்குறவர்கள் ஆகியோருக்கு தனி நலவாரியம்

பயிர்க் கடன் வட்டி குறைப்பு

விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்

மார்ச் - 26, 2008

கோயில் சொத்துகள் கொள்ளை போகின்றன

திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித் தொகை தாருங்கள்

மதுவிலக்கு: திமுக - பாமக காரசார விவாதம்

மழை வெள்ளத்துக்கு இதுவரை 24 பேர் பலி

வெள்ள நிவாரணம் - ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்வு

மார்ச் - 27, 2008

வைப்பாறு தடுப்பணை பிரச்னை: திமுக - அதிமுக வாக்குவாதம்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மனித உரிமைக் கல்வி

கர்நாடகத்தின் எதிர்ப்பை தடுத்து நிறுத்துங்கள்

தொழிற்சாலைக்குக் கட்டாய வார விடுமுறை இன்னும் ஒரு மாதம் நீடிக்கும்

மார்ச் - 28, 2008

குடிபோதையில் வேலைக்கு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க அரசு பரிசீலனை

அதிகாரிகளின் துணையோடு அரிசி கடத்தல்

ஒகேனக்கல் நீர்மின் திட்டத்துக்கு கர்நாடகம் தடையாக உள்ளது

முந்திரி சாப்பிடுவது நல்லதா?

தனியார் பஸ்களை அரசு வாடகைக்கு எடுக்குமா?

மார்ச் - 31, 2008

மணிகண்டம் -காவிரி குடிநீர் திட்டம்: டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்'

யோகாசனம் கற்றால் யோகம் வருமா?

யானைகளைத் தடுக்க சூரிய மின் வேலி

ஏப்ரல் - 01, 2008

தைரியம் இருந்தால் எழுந்து பேசுங்கள்

ஜெயங்கொண்டத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வருமா?'

"தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்'

தமிழக -கர்நாடக நல்லுறவுக்கு வேட்டு வைக்க வேண்டாம்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கைதிகளிடம் விசாரணை

நிலம் கொடுத்தால் துணை மின் நிலையம்

பூம்புகாருக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 69 லட்சம் எங்கே?

மத்திய அரசு தலையிட பேரவை தீர்மானம்

ஏப்ரல் - 02, 2008

பார்வையாளர் மாடத்தில் கனிமொழி, ஜோதி

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: ஜி.கே. மணி

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?

சேலத்துக்கு மேட்டூர் நீர் சாத்தியமில்லை

முரண்பாடுகளை சமன் செய்கிற பட்ஜெட்

யாருடைய ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டன?

ஏப்ரல் - 03, 2008

அங்கன்வாடி மையங்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுவதில்லை: பாமக புகார்

ஆன் -லைன் மூலம் தினமும் 11,000 டிக்கெட்டுகள் முன்பதிவு

மின் தட்டுப்பாட்டுக்கு திமுகவே காரணம்: அதிமுக எம்.எல்.ஏ.

கூட்டுறவுச் சங்க செயலர் பதவிக்கு வங்கி அதிகாரி நியமிக்கப்படுவாரா?

ஏப்ரல் - 04, 2008

நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: சட்டப் பேரவையில் வாழ்த்து

காலியிடங்களை நிரப்பாமல், வேளாண்துறையை சீரமைத்ததன் மர்மம் என்ன?
நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க முடியாது

ஏப்ரல் - 08, 2008

இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

எந்தவகை மின்வெட்டு?

எந்த ஏரியும் தானாக உடைவதில்லை

ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெளிநடப்பு

22 உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு

ஏப்ரல் -09, 2008

சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்கியது

எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் அநியாய பஸ் கட்டணம்: பாமக எம்எல்ஏ

பஸ் கட்டணத்தைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை

ஆதாரத்தைக் காட்டினார் கே.என்.நேரு

பஸ்களை தனியார் மயமாக்க திட்டமிட்டோமா?

இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

ஏப்ரல் - 10, 2008

"அரிசி விலையைவிட மணல் விலை அதிகம்'

அனுமதி பெறாத ஆசிரியர் பள்ளியில் படித்தவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா?

"ஒப்பந்தப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.க்கு ஒதுக்கீடு தேவை'

"குளங்களை பொதுப்பணித் துறை ஏற்க வேண்டும்'

சிறுத்தை தாக்கி இறந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: கருணாநிதி

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ கேரிக்கை

விளைநிலங்களில் தொழிற்சாலைகள் கட்ட தடை விதிக்க வேண்டும்

பேரவை மகிழ்ச்சி

ஏப்ரல் - 11, 2008

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு

படிப்படியாக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம்

சமூக நீதிக்கான போராட்டம் முற்றுப்பெறவில்லை

விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைத்தால் சலுகை

ஏப்ரல் - 15, 2008

இந்த ஆண்டு 25,495 வீடுகள் கட்டப்படும்

நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் அரசுக்கு விடப்பட்ட சவால்: காங்கிரஸ்

பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு: இருவர் சஸ்பெண்ட்

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் வாதம்

சிறைத் துறை பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

ஏப்ரல் - 16, 2008

சுடுகாட்டால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு

எஸ்.சி. மக்கள் கோயில் கட்ட ரூ.50 ஆயிரம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னைக்குப் புதிதாக 5 சுற்றுலா பஸ்

மதுரை, திருச்சிக்கு ஐ.டி. பார்க் எப்போது?

இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதி ரூ.26 ஆயிரம் கோடியாக உயரும்

அதிமுக 2 - வது நாளாக வெளிநடப்பு

அதிகத் தொகை கேட்கும் ஒப்பந்ததாரர்கள்

ஏப்ரல் - 17, 2008

ஓட்டலில் தோசை விலை உயர்வு: பேரவையில் அதிமுக புகார்

அம்பத்தூர் தாலுகா மூன்றாகப் பிரிக்கப்படுமா?'

உயர் வருவாய் பிரிவினர் நீக்கம் பற்றி திமுக உயர்நிலைக் குழுவில் முடிவு

அறப் போராட்டமா? அரைப் போராட்டமா?

அதிமுக, கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

ஏப்ரல் - 21, 2008

திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பரிசீலனை

கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள்

சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு

மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்

இளம் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும்

ஏப்ரல் - 22, 2008

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம்:தமிழக கோரிக்கை ஏற்பு

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத ஊதியம்

நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது

ஏப்ரல் - 23, 2008

மனநோயாளிக்கு பின்னால் உள்ள நோயாளிகளை கண்டறிய வேண்டும்:

தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

தேவர் சிலையை உடைத்தது யார்?

முதல்வர் தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ்கள் ஓடவில்லை



ஏப்ரல் - 24, 2008

குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது: முதல்வர்

செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேறு இடமே இல்லையா?

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயலவில்லை

ஏப்ரல் - 25, 2008

வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம்

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்

தூத்துக்குடி "ரோச்' பூங்காவில் படகு இல்லம்

சென்னையில் ரூ.10.72 கோடியில் வணிக வளாகம்: ஸ்டாலின்

1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லம்

ஏப்ரல் - 28, 2008

அரசு விழா அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏக்கள் பெயர்

ஏப்ரல் - 29, 2008

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி: பேரவையில் பாராட்டு

முதல்வர் மீதான உரிமை மீறல் ஆய்வில் உள்ளது: ஆவுடையப்பன்

கோயில்களில் திருப்பணி: நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும்

பத்திரப் பதிவு அமைச்சர் தகவலுக்கு ஆதாரத்துடன் மார்க்சிஸ்ட் மறுப்பு

ஏப்ரல் - 30, 2008

சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் விரைவில் சரி செய்யப்படும்

பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு

வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

கார்களில் சிவப்பு விளக்கை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

பேரவையிலிருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

மே - 5, 2008

பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்

இந்திய வளர்ச்சிக்கு புஷ் "அங்கீகாரம்'

நெசவாளர்களுக்கு நன்மை செய்தது யார்?

எம்.எல்.ஏ.க்களுக்கு ரயிலில் இடம் இல்லை: காங்கிரஸ் புகார்

பார்வையாளர் மாடத்தில் முதல்வர் குடும்பம்

ஸ்பிக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

அமராவதி கால்வாயில் மே 10 முதல் 18 வரை தண்ணீர் திறக்க உத்தரவு

அதிமுக திராவிடக் கட்சியா?

மே - 6, 2008

கல்வி அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை

உயர்கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்

ஒத்துழைப்பு தாருங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை: பாமக

ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது?

மே - 7, 2008

"அரசு ஊழியர்களுக்கு கைத்தறி கட்டாயம்'

கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது எப்போது?

மே - 8, 2008

நெருங்கி வருவது யார்? பேரவையில் ருசிகரம்

மே - 9, 2008


முதலிடம் பெற்ற ராஜேஷ்குமாருக்கு பாமக எம்.எல்.ஏ. பரிசு


வேலூர், தூத்துக்குடி மாநகராட்சி: சட்ட முன்வடிவு தாக்கல்


தமிழகம் ஆயுதச் சந்தையாக மாறிவிட்டது


"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்'

மே - 12, 2008

நிரம்பி வழிந்த பார்வையாளர் மாடம்


நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி


சோதனைச் சாவடிகளை நவீனப்படுத்த ரூ. 70 கோடி: கே.என். நேரு

மே - 13, 2008

ஆபாச நடனத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

விளம்பரப் பலகை: சட்ட முன்வடிவு தாக்கல்

தோழமையுடன் வாழ வேண்டும் - பேரவையில் முதல்வர் கருணாநிதி உருக்கம்

மே - 14, 2008

பூகம்பம், குண்டு வெடிப்பு: பேரவையில் இரங்கல்


வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம்


'வெட்கப்படுகிறேன்'


சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா