Friday, April 11, 2008

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு

சென்னை, ஏப். 11: தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார். பேரவையில் வெள்ளிக்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

இல. வேலுசாமி (பாமக):

தருமபுரியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்க அரசு முன்வருமா?

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்:

இந்துக்களில் தகுதியும், பயிற்சியும் பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. நீதியரசர் ராஜன் அளித்த பரிந்துரைப்படி 2 இடங்களில் வைணவப் பயிற்சி பள்ளியும், 4 இடங்களில் சைவ பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தருமபுரியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கும் திட்டம் இல்லை.

மாலைராஜா (திமுக):

சைவத்தை யும் தமிழையும் வளர்த்த திருநெல்வேலியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பெரியகருப்பன்:

இப் போதுதான் முதன்முறையாக அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 207 மாணவர்கள் படித்து வரு கின்றனர். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. புதிதாக அமைக்கப்படும்போது திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கமலாம்பாள் (பாமக):

தமிழகத்திலேயே மேல்மருவத்தூரில்தான் தமிழில் பெண்கள் அர்ச்சனை செய்கின்றனர். அதுபோன்ற நிலையை தமிழகம் முழுவதும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் பெரியகருப்பன்:

இந்துக்களில் தகுதியும், பயிற்சியும் பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம். இருந்தாலும் உறுப்பினர் சொன்ன நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

படிப்படியாக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம்

சென்னை, ஏப். 11: தமிழகம் முழு வதும் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார். பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சு.குணசேகரன் (கம்யூனிஸ்ட்):

சிவகங்கை தொகுதி காளையார்கோயிலில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதியப்படுகின்றன. இந்த சார் பதிவாளர் அலுவலகத்துக்கு ஆண்டுக்கு ரூ. ஒன்றரை கோடி வருமானம் வருகிறது. ஆனால் இந்த அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் சிறு அறையில் இயங்கி வருகிறது. எனவே சொந்தக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

காளையார்கோயில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மாதம் தோறும் ரூ.3,115 வாடகை கொடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 568 சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. அதில் 311 அலுவலகங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 257 அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 788 வாடகையாக கொடுக்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2006-2007-ல் 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும், 2007-2008-ல் 15 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.ராஜா (திமுக):

தாம்பரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் கிழக்கு தாம்பரத்திலும், மேற்கு தாம்பரத்திலும் மாறி மாறி இயங்கி வருகிறது. எனவே தாம்பரத்தில் சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

சார் பதிவாளர் கட்டடம் கட்ட தனியாரிடம் இருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தந்தாலோ, அரசுக்கு சொந்தமான நிலம் இருந்தாலோ அங்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

சமூக நீதிக்கான போராட்டம் முற்றுப்பெறவில்லை

சென்னை, ஏப். 11: சமூக நீதிக் கான போராட்டம் முற்றுப்பெற வில்லை என்று முதல்வர் கருணா நிதி கூறியுள்ளார்.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று வியா ழக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இந்தத் தீர்ப்பை வர வேற்று தமிழக சட்டப் பேரவை யில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

பேரவையில் வெள்ளிக்கி ழமை கேள்வி நேரம் முடிந்ததும், சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே. மணி இந்தத் தீர்மா னத்தை முன்மொழிந்தார். சட்ட மன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் வழிமொழிந்தார்.சட்டமன்ற மார்க்சிஸ்ட் தலை வர் கோவிந்தசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் தலைவர் சிவபுண்ணியம், மதிமுக தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.இறுதியில் இந்தத் தீர்மானத் தின் மீது முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

சமூக நீதிக்கான பயணம் தமிழ கத்தைப் பொருத்தவரை நீதிக் கட்சியின் அமைச்சர் முத்தையா காலத்திலேயே தொடங்கி விட் டது.1920-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் கம்யூனல் ஜி.ஓ. தொடங்கி, மத்திய அரசால் 2007-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வரை சமூக நீதிக்கான பயணம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

பெரியார், அண்ணா, காமரா ஜர் ஆகியோர் இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக, ஜவாஹர்லால் நேரு இந்திய அர சியல் சட்டத்தில் இட ஒதுக்கீட் டுக்கான முதல் திருத்தத்தை செய் தார். அன்று தொடங்கி, இந்திய அரசியல் சட்டத்தில் 93-வது திருத்தம் வரை இட ஒதுக்கீட்டுப் பயணம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

வி.பி. சிங் ஆட்சியில்...:

அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட் டிற்கான முதல் கதவு 1990-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வி.பி.சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.அதனால்தான் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கிடைத் தது.அப்போது அதனை எதிர்த்து வட மாநிலங்களில் மாணவர் களை தீக்குளிக்கச் செய்கிற அள வுக்கு காட்டுமிராண்டித்தனமான எதிர்ப்புகள் வந்தன. அவற்றை யெல்லாம் மீறி இன்று சமூக நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது.சமூக நீதிக்கான போராட்டம் முற் றுப் பெற்றுவிடவில்லை. இன் னும் முழுமை அடைய வேண்டி யது ஏராளமாக இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்து உச்ச நீதி மன்றத்தால் தடுக்கப்பட்டு, நம் மைப் போன்றவர்கள் கொடுத்த போர்க்குரல் காரணமாக மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சத வீத இட ஒதுக்கீடு கிடைத்துள் ளது.கிரீமி லேயர்: கம்யூனிஸ்ட் நண் பர்கள் சுட்டிக்காட்டிய "கிரீமி லேயர்' பற்றி அமைச்சரவையில் யோசிக்க இருக்கிறோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் என்னிடம் கூறியது ஆறுதல் தரக் கூடிய செய்தியாகும்.

இட ஒதுக்கீட்டில் "கிருமி' (கிரீமி லேயர்) வேண்டாம் என்ப துதான் நமது வாதம். அதை விலக் கிக் கொள்ள மத்திய அமைச்ச ரவை யோசித்து முடிவு எடுக்கும்.இந்தத் தீர்மானத்தை, காங்கி ரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வரவேற்றுள் ளன. வெளியே சொல்லாவிட்டா லும் அதிமுக, மதிமுக ஆகிய கட்சி களுக்கும் இந்தத் தீர்மானம் உடன் பாடானதுதான் என்பதை நான் அறிவேன்.

இந்தத் தீர்மானத்தின்மீது அதி முகவினர் பேச வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கேட்டுக் கொண்டார்.அதற்கு, "மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி' என எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைத்தால் சலுகை

சென்னை, ஏப். 11: விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க தனியார் முன்வந்தால் தமிழக அரசு அறிவித்த சிறு தொழில் கொள்கையில் கூறப்பட் டுள்ளபடி சலுகைகள் வழங்கப்ப டும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச் சாமி தெரிவித்தார்.பேரவையில் வெள்ளிக்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

இரா. மாணிக்கம் (திமுக):

குளித்தலை பகுதியில் நெல் அதிக மாக விளைவதால் அங்கு நவீன அரிசி ஆலை அமைக்க அரசு முன் வருமா?

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

கரூர் மாவட்டத்தில் 50 கூலி அரிசி ஆலைகளும், ஆறு நவீன அரிசி ஆலைகளும் உள் ளன. குளித்தலையில் நவீன அரிசி ஆலை எதுவும் இல்லை.தமிழக அரசு அறி வித்துள்ள சிறு தொழில் கொள்கை யின்படி விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க முன் வருபவர்களுக்கு 15 சதவீத முதலீட்டு மானியம், மூன்று ஆண்டுகளுக்கு மூன்று சத வீத மின் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும்

.எஸ். மணி (திமுக):

பொங்க லூர் தொகுதி கண்டியன்கோயி லில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

பொங்கலூர் தொகுதி கண்டியன்கோயிலில் இந்த ஆண்டு தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

எம்.ஆர். சுந்தரம் (காங்கிரஸ்):

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு சார்பில் நவீன ஜவ்வரிசி ஆலை அமைக்கப்படுமா?

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

ஆத்தூர் பகுதியில் 400-க்கும் அதிகமான ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. அதில் 30 ஆலைகள் நலிவடைந்த நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது.ஜவ்வரிசி ஆலை அமைக்க தனி யார் யாராவது முன்வந்தால் சிறு தொழில் கொள்கையில் அறிவித்த படி மானியம் வழங்கப்படும்.

27 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: கருணாநிதி நீதியை நிலை நாட்டுவார் சென்னை, ஏப். 11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவ னங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல் லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இந்தத் தீர்ப்பில் உள்ள குறைகளைப் போக்கி முதல்வர் கருணாநிதி நீதியை நிலை நாட்டுவார் என்று வேளாண்மைத் துறை அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள் ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவ னங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இந்தத் தீர்ப்பில் உள்ள குறைகளைப் போக்கி நீதியை முதல்வர் கருணாநிதி நிலை நாட்டுவார்.

1916 -1917-ம் ஆண்டுகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீதிக் கட்சி போராட்டம் நடத்தியது. 1921-ம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த தும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) வெளியிடப் பட்டது. 2004-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின்போது, மத்திய அர சின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வர பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது.அதன்படி மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. ஏ.ஐ.எம்.எஸ். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து அதனை சட் டமாக்கியது.

அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக் கால தடை விதித்தது. இந்த இடைக் காலத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த, மேல் முறையீட்டு வழக் கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டது. இந்த வழக் கில் திமுகவின் சார்பாக வழக்கறிஞர் கள் வாதாடினார்கள்.வஞ்சிக்கப்பட்ட, புறக்கணிக்கப் பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்துக்காக மார்ச் 10- ம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை சில ஆதிக்க சக்திக ளைத் தவிர அனைவரும் போற்றுகி றார்கள். 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே செயல்படுத்தப்படும் என்று அறிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர் ஜுன் சிங்குக்கு சேலம் மாவட்ட திமுக சார்பில் நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

மாநிலத்தில் திமுக ஆட்சியும், மத்தி யில் திமுக கூட்டணி ஆட்சியும் அமையும் போதெல்லாம் பிற்படுத்தப் பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் முன்னேற் றத்துக்காக சட்டப்பூர்வமாக முடிந் ததை செய்து வருவதன் அடிப்படை யில் கிடைத்த வெற்றிதான் இன்று கிடைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பாகும் என்று வீரபாண்டி ஆறுமுகம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரப் பலகைகளை அகற்ற உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை

சென்னை, ஏப். 11: விளம்பரப் பலகைகளை அகற்ற உயர் நீதிமன் றம் தடை விதிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள் ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள விளம்பரப் பலகைகளை அகற்றக் கூடாது என்று விளம்பர ஏஜென்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மார்ச் 9-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்த ரவைத் தொடர்ந்து அனுமதி இல் லாமல் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு மார்ச் 11 (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 15 வரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக உண்மைக்கு மாறான செய்திகளும், வதந்திக ளும் வந்துள்ளன.விளம்பரப் பலகைகள் அகற்று வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த தடையாணையையும் பிறப் பிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதி பதிகள் பெஞ்ச் வெள்ளிக்கிழமை தெளிவுரை வழங்கியுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள் ளது என்றும் உச்ச நீதிமன்ற உத்த ரவின்படி அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில் அரசின் நடவடிக்கை தொடரும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு கூடாது

சென்னை, ஏப். 11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத் தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கக்கூடாது என மத் திய அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி யுள்ளார்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட் டம் சரியானதே என்று உச்ச நீதிமன் றம் தீர்ப்பு கூறியுள்ளது.பிற்படுத்தப்பட்டோரில் பொருளா தார ரீதியில் முன்னேறிய பிரிவின ருக்கு (கிரீமி லேயர்) இந்த இட ஒதுக் கீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது.இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர் ஜுன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவீத இடஒ துக்கீட்டை வழங்கியபோது சமூக நீதிக்காக போராடி வருபவர்களும், சமூகத்திலும், கல்வியிலும் பின்தங் கிய வகுப்பைச் சேர்ந்தவர்களும் மிக வும் மகிழ்ச்சி அடைந்தனர். உச்ச நீதி மன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப் பால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது.சமூக நீதியை நிலைநிறுத்த மத்தி யில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட் டணி மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசு மத்திய அர சுப் பணிகளில் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தார்.இடஒதுக்கீட்டுக் கொள்கையை முழு வதும் நிறைவேற்றி, ஆண்டாண்டு காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட, பின்தங்கிய சமூக மக்களின் வாழ்க் கையை உயர்த்த இன்னும் நாம் பய ணிக்க வேண்டும்.

வெற்றி காண்பீர்கள்...

பொரு ளாதார ரீதியில் முன்னேறிய குடும் பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பிரச்னையையும் நீங்கள் (அர் ஜுன் சிங்) தீர்த்து, வெற்றி காண்பீர் கள் என நம்புகிறேன்.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒ துக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்திய ஒரே மாநிலம் தமிழகம்தான். இதற் காக, தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தமி ழக மக்களின் கனவு நிறைவேறி இருக் கிறது. இதற்காக நீங்கள் (அர்ஜுன் சிங்) மேற்கொண்ட முயற்சிகளுக்கும், தொடர் நடவடிக்கைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்என மத்திய அரசைதொடர்ந்துவற்புறுத்திய ஒரே மாநிலம் தமிழகம்தான். இதற்காக, தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"அரிசி விலையைவிட மணல் விலை அதிகம்'

சென்னை, ஏப். 10: அரிசி விலையைவிட மணல் விலை தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக மார்க் சிஸ்ட் எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் பேரவையில் குற்றஞ் சாட்டினார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

ஒரு யூனிட் மணல் விலை ரூ. 300 என்று பொதுப்பணித் துறை கொள்கை விளக்க குறிப் பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனது தொகுதி யில் உள்ள களியக்காவிளையில் ஒரு யூனிட் மணல் விலை ரூ. 3,500-க்கு விற்கப்படுகிறது.அரிசி விலையைவிட மணல் விலை அதிகமாக உள்ளது.

மணல் விலையேற்றத்தினால் பொதுப்ப ணித் துறை, உள்ளாட்சித் துறை மூலம் நடக்கும் கட்டடப் பணிகளும், இந்திரா தொகுப்பு வீடுகள் கட்டும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகள் இருந்தும் தற்போது கட்டப்ப டும் கட்டடங்கள் 10 ஆண்டுகள்கூட தாக்குப் பிடிப்பதில்லை. கமிஷனும், கையூட்டும்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளாக தினக் கூலிகளாகப் பணிபுரிபவர்களுக்கு நிரந்த ரப் பணி வழங்க வேண்டும். பணியின்போது உயி ரிழக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண் டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2,500 குளங்களை தூர்வாரினால் வறட்சியே இல்லாத மாவட்டமாக அந்த மாவட்டம் மாறும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம்.கால்வாயை தூர்வாரி படகு போக்குவரத்தை ஏற் படுத்த வேண்டும் என்றார் ஜான் ஜோசப்.

அனுமதி பெறாத ஆசிரியர் பள்ளியில் படித்தவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா?

சென்னை, ஏப். 10: அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள் ளிகளில் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் வியாழக் கிழமை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில ளித்து அவர் பேசியதாவது:

அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பற்றி அரசு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகிறது. இந்த விளம்பரத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதையும் மீறி சிலர் இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் சேர்கிறார்கள்.பின்னர் பள்ளி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

இந்த ஒருமுறை மாணவர் களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இனி அனுமதி பெறாத பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேராத நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அங்கீகாரம் இல்லாத பயிற்சிப் பள்ளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கம் தென்னரசு:

இந்த ஒருமுறை தேர்வு எழுத அனும தித்தால் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடி யாது. இது மனிதாபிமான பிரச்னை என்பதால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும்.

"ஒப்பந்தப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.க்கு ஒதுக்கீடு தேவை'

சென்னை, ஏப். 10: பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மக்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று விடு தலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை நடை பெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிக ளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்க ளுக்கு நான்காம், ஐந்தாம் நிலை பணிகள் தான் கிடைக்கின்றன. மாவட்ட பொறி யாளர்கள், ஒப்பந்தப் பணிகளில் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயல்ப டுகின்றனர். இந்த நிலையை மாற்ற மத்தியப் பிர தேச மாநிலத்தில் உள்ளதுபோல தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிக ளில் தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.நான் 10 சதவீதம்கூட கேட்கவில்லை. ஒரு சதவீதமாவது தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

உடனே அனுமதி வழங்க வேண்டும்:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் பழைய பள்ளிக் கட்டடங்களை இடித்து புதிதாக கட்ட பொதுப்பணித் துறையின் அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகிறது.எனவே வகுப்பறை விஷயத்தில் உடனடி யாக அனுமதி வழங்க அரசு சிறப்பு உத்தர வைப் பிறப்பிக்க வேண்டும்.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதனால் ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள 15 கிரா மங்களில் உள்ள நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கரும்பு பயிரை வெட்ட முடி யாத அளவுக்கு தண்ணீர் தேங்கி உள் ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண் டும்.

நீர்வள ஆதாரத் துறை என்று புதிய துறை உருவாக்கப்படுவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்ச கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

பொதுப்ப ணித்துறை ஒப்பந்தப் பணிகளில் வேலை யின் தரம்தான் பார்க்கப்படுகிறது. ஜாதி பார்க்கப்படுவதில்லை. வீராணம் ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது பற் றிய பிரச்னைக்கு தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

"குளங்களை பொதுப்பணித் துறை ஏற்க வேண்டும்'

சென்னை, ஏப். 10: தமிழகத்தில் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் குளங்களையும் பொதுப் பணித்துறை ஏற்க வேண் டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பி. ராமசாமி அர சுக்குக் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் அவர் பேசியது:

ஊராட்சிகளில் உள்ள குளங்கள் அனைத்தையும் பொதுப் பணித் துறை ஏற்க வேண்டும். தடுப்பணை கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இந்தக் குளங்களை தூர் வார வேண்டும்.தமிழகத்துக்குள் ஓடும் ஆறுகளை இணைக்க முடிவு எடுத்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற் கிறது.

ஏரி, குளம் போன்ற நீர்நிலை கள் மாசுபட்டு வருகிறது. குடிநீர் எடுக்க பயன்படும் குளங்களையா வது மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக் கிரமிப்பை அகற்ற வேண்டும். நதிநீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமி ழகம் மாறி வருகிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.பொதுப்பணித் துறை கட்டடங் கள் பல இடங்களில் பழுதடைந்து பயன்படாத நிலையில் உள்ளது.இதனை அரசு சரி செய்ய வேண்டும் என்றார்.

வை. காவேரி (பாமக):

குஜராத் மாநிலத்தில் நர்மதா திட்டத்தை செயல்படுத்தி லட்சக்கணக்கான ஏக் கர் நிலத்துக்கு பாசன வசதி செய்யப் பட்டுள்ளது.அதுபோல சேலம், நாமக்கல் மாவட்டத்துக்கு மேட்டூர் நீரைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 320 அடி உயரத் துக்கு நீரைக் கொண்டுபோக முடி யாது என்கிறீர்கள். அந்த அளவு உய ரத்துக்கு நீரை கொண்டுச் சென்றால் மின் உற்பத்தியும் செய்ய முடியும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்ப ணைகள் கட்டி நீர்வளத்தை அதிக மாக்க வேண்டும். கர்நாடகத்தில் காவிரி பாசனப் பரப்பு அதிகரித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிகமாகவில்லை. தகவல் அறியும் உரிமை ஆணையத்தை சுயசார்பு டையதாக மாற்ற வேண்டும்.அதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண் டும் என்றார்.

தமிழகம் "இழந்த' உரிமைகளை பாமக ஆட்சிக்கு வந்து மீட்கட்டும்

சென்னை, ஏப். 10: 2011-ல் பாமக ஆட்சிக்கு வந்த தும், தமிழகம் இழந்த உரி மையை மீட் கட்டும் என்று முதல்வர் கரு ணாநிதி கூறி யுள்ளார்.மதுரையில் புதன்கிழமை (மார்ச் 9) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், ""'இரண்டு திராவிடக் கட்சிகளின் போட்டி அரசியலால் தமிழகம் தனது உரிமையை இழந்துள்ளது' என்று கூறியிருந்தார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி, கேள்வி -பதில் வடிவில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இரண்டு திராவிடக் கட்சிக ளின் போட்டியால் தமிழகம் தனது உரிமையை இழந்துள்ளது என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.அதற்கு மாற்றாகத்தான் 2011-ல் அவர் ஆட்சிக்கு வரப் போகி றாரே? அப்போதாவது தமிழகம் இழந்த உரிமையைப் பெறட்டும்.

மத்திய அரசு ரூ. 60,000 கோடி விவசாயக் கடனை ரத்து செய்த தோடு நின்று விடாமல், தொடர்ந்து விவசாயிகள் கடன் பெறவும், வேளாண் முன்னேற்றத் திற்கான உதவிகளையும், சலுகைக ளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

கனவு கண்டிருப்பார்களா?:

ஒகேனக்கல் திட்டத்தை நிறை வேற்றக் கோரி சில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்துள் ளார்கள்.ஆளுநர் அந்த மனுவைப் பெற் றுக் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? தமிழகத்தில் குடி யரசுத் தலைவர் ஆட்சி நடப்பதாக அந்த அறிவார்ந்த அதிகாரிகள் கனவு கண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.தேர்தல் முடியும் வரை கிளர்ச்சி களுக்கோ, போராட்டங்க ளுக்கோ இடம் தராமல் அமைதி காப்போம் என்று வேண்டுகோள் விடுத்தது கோழைத்தனமா? அல் லது துரோகமா?

ஒகேனக்கல் திட்டத்தை படிப்ப டியாக எப்படி நிறைவேற்றுவது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகப் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் சில அவச ரக்காரர்கள், ""மாலையில் ஒப்பந் தம், நள்ளிரவில் திட்டம் தொடக் கம், மறுநாள் காலையில் திறப்பு விழா'' என்று மந்திரத்தில் மாங் காய் விழச் செய்வோம் என்கிறார் கள்.அவர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேதி வாரியாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந் தத்தை புரிந்து கொள்ளட்டும்.

ஒகேனக்கல் திட்டத்துக்கு திட்ட மேற்பார்வை ஆலோச கரை நியமிக்க, பிப்ரவரி 2008 முதல் மார்ச் 2008 வரை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இது பற்றி ஜூலை 2008-ல் முடிவு எடுக்கப்ப டும்.விரிவான திட்ட அறிக்கையை யும், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்க ளையும் திட்ட மேற்பார்வை ஆலோசகர் அக்டோபர் 2008-ல் ஆய்வு செய்வார்.இந்தத் திட்டத்துக்கு டிசம்பர் 2008 -ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்ப டும். மார்ச் 2009-ல் ஒப்பந்தப்புள் ளிகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெ டுக்கப்படும். டிசம்பர் 2012-ல் திட் டம் முடிவடையும்.சில அவசரக் கட்சித் தலைவர் கள் அரசியலிலும் "ஸ்டண்ட்' என்று ஆரம்பித்தால் அது நடக் கிற காரியமா? என்பதை ஆர அமர்ந்து ஆலோசிக்க வேண்டும்.

விளம்பர பலகைகள் அகற்றும் பணி தொடங்கி விட்டது:

அனு மதி பெறாத விளம்பரப் பலகை களை அகற்ற தமிழக அரசு பிறப் பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. அதன்படி விளம்பர பலகை களை அகற்றும் பணி புதன்கி ழமை இரவே தொடங்கி விட் டது. இந்த நல்ல முயற்சிக்கு பல கைகளை வைத்திருப்பவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 2002-ம் ஆண்டு ஆளுநர் உரையில் பஸ் களை படிப்படியாக தனியார் மய மாக்க முடிவு செய்யப்பட்டு அறி விக்கப்பட்டதை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் படித்துக் காட்டி னார். இந்த அறிவிப்பு வந்த நேரத்தில், அதிமுக அரசு பஸ்களை தனியார் மயமாக்கப் போவதாக அறிவித் துள்ளதே என்று செய்தியாளர் கள் கேள்வி கேட்டார்கள்.

அவர்கள் அப்படி செய்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை ரத்து செய்வோம் என்று பதில் கூறினேன். அது அப்போது பத்திரிகைகளில் வந்துள்ளது.அந்த அறிவிப்புக்குப் பிறகுதான் அதிமுக அரசு பஸ்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட் டது என்று முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறுத்தை தாக்கி இறந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: கருணாநிதி

சென்னை, ஏப். 10: வால்பாறை யில் சிறுத்தைப் புலி தாக்கி இறந்த சிறுமி காயத்ரியின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்ப டும் என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கி ரஸ் உறுப்பினர் கோவை தங்கம் இதுகுறித்து பேசியதாவது:

கோவை மாவட்டம் வால்பா றையில் அனலி பகுதியைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகள் காயத்ரி, மார்ச் 5-ம் தேதி சிறுத்தைப் புலி தாக்கி இறந்துள்ளார்.சிறுத்தைப் புலிகளை பிடிக்க குறைந்தது 20 கூண்டுகளையா வது அமைக்க வேண்டும். அரசு அனுமதி தந்தால் கூண்டுகள் வாங்க, எனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங் கத் தயாராக இருக்கிறேன்

.முதல்வர் கருணாநிதி:

கோவை தங்கம் ரூ.10 லட்சம் தந் தால் கூண்டுகள் வாங்கப்படும்.இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப் படும்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ கேரிக்கை

சென்னை, ஏப். 10: தங்கள் ஆட்சியில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடர வேண்டும் என்று அதி முக எம்.எல்.ஏ தாமோதரன், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கி ழமை நடைபெற்ற பொதுப்ப ணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தில் அவர் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில், மழைநீர் சேகரிப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத் தப்பட்டது. அதனால் நிலத் தடி நீர் மட்டம் உயர்ந்தது.ஆனால் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகி றது. எனவே மீண்டும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அரசு தொடர வேண்டும்.

திமுக ஆட்சியில் காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரி யாறு பிரச்னை, பாலாறு பிரச்னை, பாண்டியாறு புன் னம்பழா பிரச்னை, ஒகேனக் கல் பிரச்னை என்று நதிநீர் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இந்தப் பிரச்னைகள் தீர்க்கப் பட்டால் குடிநீர்ப் பிரச்னை யும் தீரும். மின் உற்பத்தியும் பெருகும்.

இந்தப் பிரச்னைக ளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்திப் பயன் இல்லை. மத் திய அரசை நம்பியும் பிரயோ ஜனம் இல்லை. நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பை பெறுவ துதான் ஒரே வழி.மணல் கொள்ளை:அதி முக ஆட்சியில் மணல் கொள்ளை தடுக்கப்பட்டது. குறைந்த விலையில் மணல் கிடைத்தது. தற்போது ஆறுக ளில் அதிக அளவு மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட் டம் குறைந்து வருகிறது.

தோல் மற்றும் சாயப் பட்ட றைக் கழிவுகளினால் நொய் யல், பவானி ஆறுகள் மாசு பட்டுள்ளன. பரம்பிக்குளம் ஆழியாற்றில் இருந்து திரு மூர்த்தி அணைக்கு 49 கி.மீ.நீளத்துக்கு காண்டூர் கால் வாய் உள்ளது. இந்தக் கால்வா யில் செயற்கையாகவும், இயற் கையாகவும் உடைப்பு ஏற்படு வதால் சுமார் நான்கு டி.எம்.சி. தண்ணீர் வீணாகி றது. அதனை அரசு சரி செய்ய வேண்டும்.

ஏக்கர் வாரியாக தண்ணீர் தீர்வை விதிக்க வேண்டும்:

தற்போது பயிர் வாரியாக தண்ணீர் தீர்வை விதிக்கப்படு கிறது. அதனை மாற்றி ஏக்கர் வாரியாக தண்ணீர் தீர்வை விதிக்க வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைப் பகுதிக ளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.எம்.எல்.ஏ நிதியிலிருந்து, பாசனக் கால்வாயை தூர்வார அனுமதிக்க வேண்டும் என் றார் தாமோதரன்.

விளைநிலங்களில் தொழிற்சாலைகள் கட்ட தடை விதிக்க வேண்டும்

சென்னை, ஏப். 10: விளைநிலங்களில் தொழிற்சாலைகள் கட்ட அரசு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வேல்துரை அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

தாமிரபரணி பாசனப் பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கி கால் வாய்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். எலுமிச்சை யாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இரண்டு போகம், மூன்று போகம் விளையும் நிலங்களில் தொழிற்சாலைகள் கட்ட அரசு தடை விதிக்க வேண்டும்.

விளைநிலங்களில் ஒரு தொழிற்சாலை கட்டினால்கூட அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவ சாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மணல் எடுப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றார்.

பேரவை மகிழ்ச்சி

சென்னை, ஏப். 10: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத வீத ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப் புக்கு தமிழக சட்டப் பேரவையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது குறுக்கிட்டு, அவை முன்னவரும் நிதி அமைச் சருமான க.அன்பழகன் பேசியதாவது:

""மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தீர்ப்பை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 2007-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி சட்டப் பேரவையில் முதல் வர் கருணாநிதி ஒரு தீர்மானத் தைக் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

தற்போது இந்த இடைக்காலத் தடையை நீக்கி 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பினால் ஏற்பட்ட மகிழ்ச் சியை பேரவையின் உறுப்பினர்க ளோடு பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார் அன்பழகன்.

சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

சென்னை, ஏப். 9: சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ மாலைராஜா பேரவையில் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக உள்ள சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அது போல யாதவர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற நிலையை மாற்றி, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.குறைந்தபட்சமாக ரூ. ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 2,400-ம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் தனி போக்குவரத்து கோட்டம் உருவாக்க வேண் டும். விபத்துகளை தடுப்பதற்காக டிரைவர், கன்டக்டர்களுக்கு விபத்து விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்.ஏ.சி. பஸ்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே குறைந்தது 50 வால்வோ பஸ்களையாவது அரசு விட வேண்டும்.உத்தரப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் நஷ்டம் காரணமாக போக்கு வரத்துத் தறை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் வெளிநாடுகளில் உள்ளதுபோன்ற தரமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரை யொட்டியுள்ள சுத்தமல்லி பஞ்சாயத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றார் மாலைராஜா.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்கியது

சென்னை, ஏப். 9: அதிமுக ஆட்சி யில் போக்குவரத்துத் துறை லாபத் தில் இயங்கியதாக அதிமுக எம்.எல்.ஏ சண்முகவேலு கூறி னார்.பேரவையில் புதன்கிழமை நடை பெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் அவர் பேசியதாவது:

மத்திய அரசு 14 முறை பெட் ரோல், டீசல் கட்டணத்தை உயர்த் தியது. ஆனாலும் அதிமுக ஆட்சி யில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட வில்லை.2004-05 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை ரூ. 14 கோடி லாபம் ஈட்டியது. நம் நாட்டில் டாடா, அசோக் லைலண்டு போன்ற நிறுவனங்கள் இருக்கும் போது வெளிநாட்டு நிறுவனங்க ளில் இருந்து வால்வோ பஸ்களை அரசு வாங்குகிறது.பஸ்களுக்கு கூடு கட்டும் பணி களை அரசு தனியாருக்கு அளித் துள்ளது. அதனால் போக்குவரத் துத் துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை. பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, பஸ் ஜப்தி செய்யப்பட்ட பிறகுதான் இழப்பீடு வழங்கப்படுகி றது. இந்த நிலை மாற வேண்டும்.சென்னை மாநகரில் ஓடும் ஷேர் ஆட்டோக்களைப் போல, சொகுசு பஸ்களிலும் ஆடு மாடுகளைப் போல பயணிகளை ஏற்றுகிறார் கள். ஷேர் ஆட்டோக்களைப் போல அரசு பஸ்களிலும் குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 5 வசூலிக்கி றார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில்...

ரயில் கட்டண அளவுக்கு பஸ் கட்ட ணம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. ஆனால் பல்வேறு பெயர்களில் பஸ்கள் விடப்பட்டு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.போக்குவரத்துத் துறை ஊழியர்க ளுக்கு ஓய்வு ஊதியத் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என்றார்.

எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் அநியாய பஸ் கட்டணம்: பாமக எம்எல்ஏ

சென்னை, ஏப். 9: எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் பஸ்களில் அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக பாமக எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் குற்றம் சாட்டினார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

சென்னையிலிருந்து திருவண் ணாமலைக்கு சாதாரண பேருந் தில் ரூ. 55-ம், எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் ரூ. 62-ம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் தற்போது எஸ்.எஸ்.எஸ்.என்ற பெயரில் உலா வரும் பஸ்க ளில் ரூ. 72 அநியாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சாதாரண பஸ்களில் பயணம் செய்வதைவிட எஸ்.எஸ்.எஸ்.பஸ்களில் அரை மணி நேரம் மட் டுமே மிச்சமாகிறது. இந்த அரை மணி நேரத்துக்காக ரூ. 18 அதிக மாக வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

தனியார் பஸ்கள் இரண்டு ஆண்டுகள் ஆனபிறகும் நல்ல நிலையில் உள்ளன. ஆனால் அர சுப் பேருந்துகள் தனியார் பஸ்கள் போல பராமரிக்கப்படாததால் மோசமான நிலையில் இருக்கின் றன.அதிகாரிகள், ஓட்டுநர், நடத்து னர்களை பஸ் பராமரிப்புக்குப் பொறுப்பு ஏற்கச் செய்ய வேண் டும். நகரங்களில் புதிய பஸ்களை விடும் அரசு கிராமங்களில் புதிய பஸ்களை இயக்குவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

அனைத்துப் பஸ்களிலும்...:

பாஸ் உள்ள மாணவ, மாணவி களை குறிப்பிட்ட நகர பஸ்களில் மட்டுமே ஏற்றுகின்றனர். இத னால் ஒரே பஸ்ஸில் கூட்ட நெரிச லில் மாணவர்கள் சிக்கி அவதிப்ப டுகின்றனர். அவர்களிடம் நடத்து னர்கள் கேவலமாகப் பேசுகிறார் கள். பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் காலை, மாலை நேரங்க ளில் சொகுசு பஸ்கள் நீங்கலாக மற்ற பஸ்கள் அனைத்திலும் அவர்களை பயணம் செய்ய அனு மதிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் பயணச்சீட்டு:

திருவண்ணாமலைக்குச் செல் லும் அரசு பஸ்களில் ஆங்கிலத் தில் மட்டுமே பயணச்சீட்டு அச்ச டிக்கப்பட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகும் தமி ழுக்கு இப்படி ஒரு அவமானம் ஏற் பட்டுள்ளது.

எம்.எல்.ஏகளுக்கு அவமானம்:

அரசு பஸ்களில் எம்.எல்.ஏக்கள் இலவசமாகப் பயணம் செய்ய லாம் என்று அரசு அறிவித்துள் ளது. ஆனால் பஸ்களில் எம்.எல்.ஏக்களுக்கு உரிய மரி யாதை தருவதில்லை.வி.ஐ.பி. சீட்டில் கூட உட்கார வைக்காமல் அவமதிக்கின்றனர்.அதனால் பல எம்.எல்.ஏக்கள் தொங்கிக் கொண்டு செல்கின்ற னர். சில நேரங்களில் எம்.எல்.ஏக் கள் இன்ஜின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர்.

தமிழகத்தில் அதிகமான ஆம்னி பஸ்கள் ஓடிக் கொண்டி ருக்கின்றன. அவற்றின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? ஆம்னி பஸ்களுக்கென்று தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என் றார் எதிரொலி மணியன்.

பஸ் கட்டணத்தைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை

சென்னை, ஏப். 9: பஸ் கட்ட ணத்தைப் பற்றி மக்கள் கவலைப்ப டவில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தி தெரிவித் தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

குறித்த நேரத்தில், குறித்த இடத்துக்கு சென்று சேர வேண்டும் என்பது குறித்துதான் மக்கள் கவலைப்படுகிறார்கள்.பஸ் கட்டணத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.குறித்த நேரத்தில் சில இடங்க ளுக்கு செல்ல முடியாமல் பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. தின மும் ரூ.50 சம்பாதிக்கும் தயிர் விற் கும் ஏழைப் பெண்கள்கூட தற் போது அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். அந்த அளவுக்கு கட்டணம் குறைவாக உள்ளது.

பஸ்ஸில் குவா குவா சத்தம் இல்லை:

அதிகமான பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் குறித்த நேரத்தில் குறித்த இடத் துக்கு செல்ல முடிகிறது. இத னால் திமுக ஆட்சியில் "பஸ்ஸில் குழந்தை பிறந்தது', "பஸ்ஸில் குவா குவா சத்தம்' போன்ற செய்திகள் வருவதில்லை.ஆனால் கடந்த ஆட்சியில் பஸ் கள் மோசமான நிலையில் இருந்த தால் "பஸ்ஸில் குழந்தை பிறந்தது' என்ற செய்தி அதிகமாக வந்து கொண்டிருந்தது.கடந்த ஆட்சியில் மழை பெய் தால் பஸ்ஸýக்குள் குடை பிடிக்க வேண்டி இருந்தது. ஆனால் தற் போது அந்த நிலை இல்லை. தற் போது மக்கள் காத்திருந்து அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

பாண்டியன், பல்லவன் வரும் நேரத்தில்...:

பாண்டியன், பல்ல வன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் நேரத்தில் அரியலூர் ரயில் நிலை யத்துக்கு வந்து செல்ல பஸ் இயக்க வேண்டும்.அரியலூரில் இருந்து சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு பஸ் இயக்க வேண் டும். பள்ளிப்பட்டில் போக்குவ ரத்து பணிமனை அமைக்க டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் 2 ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றுத் தந் துள்ளார். எனவே அந்த இடத் தில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்றார் அமரமூர்த்தி.

ஆதாரத்தைக் காட்டினார் கே.என்.நேரு

சென்னை, ஏப். 9: பஸ்களை தனி யார் மயமாக்க அதிமுக அரசு திட் டமிட்டது என்பதற்கு 2002-ம் ஆண்டு ஆளுநர் உரையை போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆதாரமாகக் காட்டினார்.பேரவையில் புதன்கிழமை போக் குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. சண்முகவேலு பேசினார்.அப்போது குறுக்கிட்ட அமைச் சர் கே.என். நேரு போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்க அதி முக திட்டமிட்டது என்று குற்றம் சாட்டினார்.

அதனை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன், அதி முக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மறுத்தனர்.முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்னைக்கு ஒரு நீண்ட விளக்கம் அளித்தார். அதன் பிறகு பேரவை யில் அமைதி ஏற்பட்டது.

அதன்பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.ஆர். சுந்தரம் பேசும்போது பஸ்களை தனியார் மயமாக்க அதிமுக அரசு திட்ட மிட்டது என்று மீண்டும் பிரச் னையை கிளப்பினார்.அதற்கு அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எதிர்ப் புத் தெரிவித்தார்.

அப்போது குறுக் கிட்ட கே.என். நேரு, 2002 ஆளுநர் உரையில் 36, 37 பக்கத்தில் பத்தி 35-ல் ""போக்குவரத்துத் துறையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேருந்து வழித் தடங்களையும், சேவைகளை யும், பணிகளையும் படிப்படியாகத் தனியார் மயமாக்க இவ்வரசு முடிவு செய்துள்ளது'' என்று இருப்பதாக படித்தார்.அதற்காக 2002-ம் ஆண்டு நவம் பர் 11-ல் வெளியிடப்பட்ட அரசா ணையையும் அவர் பேரவையில் படித்துக் காட்டினார்.

அப் போது செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கிட்டு, அமைச்சர் கே.என்.நேரு ஆளுநர் உரையை ஆதாரமா கக் காட்டியுள்ளார். அதனை செங் கோட்டையன் ஏற்றுக் கொள்கி றாரா? இல்லையா? என்பதை விளக்க வேண்டும் என்றார்.அதற்கு பதிலளித்த செங்கோட் டையன், அதிமுக ஆட்சியில் அப் படி எத்தனை வழித்தடங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது என்ப தற்கு பட்டியல் தரமுடியுமா என் றார்.

பஸ்களை தனியார் மயமாக்க திட்டமிட்டோமா?

சென்னை, ஏப். 9: அரசு பஸ் களை தனியார் மயமாக்க கடந்த ஆட்சியில் முயற்சி மேற்கொள் ளப்பட்டது என்று போக்குவரத் துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதால் பேரவையில் திமுக -அதிமுக உறுப்பினர்க ளுக்கு இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது புதன்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சண்முகவேலு (அதிமுக):

பல பெயர்களில் பஸ்கள் விடப்பட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.திமுக அரசு கடன் பெற்றுத்தான் புதிய பஸ்களை இயக்கி வருகிறது.

அமைச்சர் கே.என். நேரு:

கடன் வாங்குவது எல்லா ஆட்சி யிலும் நடப்பதுதான். அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் எதுவும் வாங்கவில்லை. அதனால் கடனும் வாங்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுக்கால அதி முக ஆட்சியில் 5,600 பஸ்கள் மட் டுமே புதிதாக வாங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 9,901 பஸ்கள் வாங்கப்பட்டுள் ளன.

எக்ஸ்பிரஸ் பஸ்கள், எல்.எஸ்.எஸ் பஸ்கள், சொகுசு பஸ்களுக்கான கட்டணங்களை திமுக அரசு நிர்ணயிக்கவில்லை.கடந்த அதிமுக ஆட்சியில் நிர்ண யிக்கப்பட்ட கட்டணம்தான் தற் போது நடைமுறையில் உள்ளது.அரசு பஸ்களை தனியார் மய மாக்க அதிமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

பஸ்களை தனியார் மயமாக்க அதிமுக ஆட்சியில் எந் தவிதமான முயற்சியும் எடுக்க வில்லை. அமைச்சர் வேண்டும் என்றே தவறான தகவலைத் தருகி றார்.

நத்தம் விஸ்வநாதன் (அதி முக):

நஷ்டத்தில் இயங்கும் சில வழித்தடங்களை மட்டும் தனியா ரிடம் விட அதிமுக ஆட்சியில முடிவு எடுக்கப்பட்டதே தவிர போக்குவரத்துத் துறையை தனி யார் மயமாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

அமைச்சர் கே.என். நேரு:

அதி முக அரசு பஸ்களை தனியார் மய மாக்கினால், திமுக ஆட்சிக்கு வந் ததும் மீண்டும் தேசிய மயமாக்கு வோம் என்று கருணாநிதி கூறி னார். அதன் பிறகுதான் அந்த முயற்சி நின்றது.

முதல்வர் கருணாநிதி:

காங்கி ரஸ் ஆட்சிக் காலத்தில் 100 மைல் தூரம் செல்கின்ற நீண்ட தூர பஸ் களை, அப்போதைய போக்குவரத் துத் துறை அமைச்சர் வெங்கட்ரா மன் தேசிய மயமாக்கினார்.அதன் பிறகு நான் முதல்வராக இருந்தபோதுதான் போக்குவரத் துத் துறை தேசிய மயமாக்கப்பட் டது. அப்பேது டி.வி.எஸ்., பொள்ளாச்சி மகாலிங்கம், குடந்தை ராமன் அண்டு ராமன் போன்ற பஸ் உரிமையாளர்கள் தானாக முன்வந்து பஸ்களை தேசியமயமாக்க ஒப்புக் கொண் டார்கள்.

யாரையும் புண்படுத்தாமல், நஷ் டத்துக்கு ஆளாக்காமல் சுமுக மான முறையில் பஸ்கள் தேசிய மயமாக்கப்பட்டது. இடையி டையே சிலர் பஸ்களை தனியார் மயமாக்கப் போகிறார்கள் என்று வதந்திகளை பரப்பியிருக்கலாம்.ஆனால் எதிர்க்கட்சிகள் யாரும் அதற்கு இடம் தரவில்லை.நல்ல புரட்சிகரமான முடிவு எடுத்த பிறகு அதிலிருந்து கீழ் நோக்கிப்போக எந்த அரசும் முன் வராது என்பது நண்பர் செங் கோட்டையனுக்கு நன்றாகத் தெரியும்.14 அல்லது 15 பிரிவுகளாக இருந்த போக்குவரத்தை ஒரே நிறு வனமாக திமுக அரசுதான் மாற்றி யது.

இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

சென்னை, ஏப். 9: தூத்துக்குடி மாவட்டம் சின்னார்குளம், சேர குளம் பகுதிகளில் இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்ப டும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரம் முடிந்ததும், காங் கிரஸ் எம்.எல்.ஏ ராணி வெங்க டேசன் இது குறித்து பேசியதா வது:

தூத்துக்குடி மாவட்டம் சின் னார்குளம், சேரகுளம் பகுதியில் மார்ச் 8-ம் தேதி பகவதி அம் மாள், கோவில்பிள்ளை அம் மாள் ஆகிய இருவரும் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தனர்.மூன்று பேர் காயமடைந்துள்ள னர். உயிரிழந்த மற்றும் காயம டைந்தவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

தூத் துக்குடி மாவட்டம் சின்னார்கு ளம், சேரகுளம் பகுதியில் கடந்த மார்ச் 8-ம் தேதி இடி மின்னலு டன் பெருமழை பெய்தது.அதில் இடி தாக்கி இருவர் உயிரி ழந்தனர். மூன்று பேர் காயம டைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பகவதி அம்மாள், கோவில்பிள்ளை அம்மாள் ஆகிய இருவரின் குடும்பத் திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும். காயம டைந்து மருத்துவமனையில் உள்ள சங்கரம்மாள் (40), லீலா வதி (39), சிறுவன் பால்துரை ஆகியோருக்கு மாவட்ட ஆட் சித் தலைவரின் நேரடிப் பார் வையில் சிகிச்சை அளிக்கப்ப டும். அவர்களது சிகிச்சைக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்கும்.

ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கிருஷ்ணசாமி நன்றி

சென்னை, ஏப். 8: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதற்கு, தமிழக காங் கிரஸ் தலைவர் எம். கிருஷ்ண சாமி நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து செவ்வாய்க்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நீண்ட காலமாகப் போராடி வருகி றார்கள். அவர்களின் கோரிக் கையை ஏற்று, ரூ. 1,300 இருந்த ஊதியம் ரூ. 3,072 ஆகவும், ரூ.3,000-ஆக இருந்த ஊதியம் ரூ.5,786 ஆகவும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார்.

அதுபோல 5 முதல் 15 ஆண்டுகளாக பணி புரிந்து வருபவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் சம்ப ளம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு ரேஷன் ஊழியர்களின் மனக்கு றையை நீக்கும். இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள் வதாக அவர் கூறியுள்ளார்.

இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

சென்னை, ஏப். 8: கன்னியாகு மரி மாவட்டம் திருவட்டார், குல சேகரம் பகுதிகளில் இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறி வித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ லீமா ரோஸ், இது குறித்து பேரவையின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் திரு வட்டார், குலசேகரம் பகுதியில் மார்ச் 7-ம் தேதி இடி தாக்கி யேசு தாஸ் (26), நாகேந்திரன் (40) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். உயிரி ழந்த மற்றும் காயமடைந்தவர்க ளுக்கு அரசு உரிய நிவாணம் வழங்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

கன்னி யாகுமரி மாவட்டம் திருவட்டா ரில் கடந்த மார்ச் 7-ம் தேதி இடி மின்னலுடன் பெருமழை பெய் தது. அதில் இடி தாக்கி இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம டைந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இருவர் குடும்பத் துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங் கப்படும். காயமடைந்து மருத்துவ மனையில் உள்ள மூன்று பேருக் கும் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடிப் பார்வையில் சிகிச்சை அளிக்கப்படும். அவர்களது சிகிச் சைக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்கும்.

எந்தவகை மின்வெட்டு?

சென்னை, ஏப். 8: தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கி ழமை 10 நிமிஷங்களுக்கும் மேலாக மின்தடை ஏற்பட் டது. இதனால் பேரவை நூல கம் உள்ளிட்ட முக்கிய இடங் கள் இருளில் மூழ்கின.காலை 10.24 மணிக்கு மின் தடை ஏற்பட்டபோது, பேர வையில் கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. மின்தடை ஏற்பட்ட அடுத்த நொடியே பேரவையில் மின்சாரம் வந்து விட்டது.

ஆனால் அவையில் உள்ள எலக்ட்ரானிக் கடிகாரங் கள் 10 நிமிஷங்களுக்கு மேலாக வேலை செய்ய வில்லை.""பேரவையில் காலை 10.24 மணிக்கு மின்தடை ஏற்பட் டது. அது எந்த வகை மின் வெட்டு'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கேள்வி எழுப்ப, அவையில் சிரிப்பலை எழுந்தது.

எந்த ஏரியும் தானாக உடைவதில்லை

சென்னை, ஏப். 8: எந்த ஏரியும் தானாக உடைவதில்ல. ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான் ஏரியை உடைக்கின்றனர் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் தெரி வித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவா தம்:

ஆறுமுகம் (பாமக):

பெரு மழை வெள்ளம் ஏற்படும் மதகு ஓரங்களில்தான் ஏரிகள் உடை கின்றன. எனவே ஏரிகளின் மதகு களை வலுவுள்ளதாக அமைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

எந்த ஏரியும் தானாக உடைவதில்லை.உடைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.ஏரியை ஆக்கிரமிப்பு செய்தி ருப்பவர்கள்தான், தண்ணீர் புகுந்து தங்களுக்கு பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக ஏரி களை ஆங்காங்கே உடைக்கிறார் கள்.இப்படி ஏரிகளை உடைத்தவர் களை நாங்களே நேரில் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதற்காகத்தான் ஏரி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள் ளது.

எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங் கிரஸ்):

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக் குட்பட்ட மாமண்டூர் கிராம ஏரி மிகப் பெரியது. இதுவரை இந்த ஏரி தூர்வாரப்படவில்லை.கரையை உயர்த்தி, மதகுகளை அதிகரிக்கவும், சீர் செய்யவும் அரசு முன்வருமா?

அமைச்சர் துரைமுருகன்:

மாமண்டூர் ஏரியின் கரையை உயர்த்த முடியாது. கரையை உயர்த்தினால், ஏரிக்கு எதிர் முனையில் உள்ள கிராமங்களில் வயல்வெளிகள் நீரில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.தேவையான மதகுகள் இருப்ப தால் மதகுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ.2 லட்சம் செலவில் பழுதடைந்த இரண்டு மதகுகளைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெளிநடப்பு

சென்னை, ஏப். 8: கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, ஒரு குறிப்பிட்ட பிரச்னையை விவாதிக்க அனுமதிக்க வேண் டும் என்று சட்டப்பேரவை யில் அதிமுகவினர் செவ் வாய்க்கிழமை கோரினார்.ஆனால் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலை மையில் அதிமுகவினர் வெளிந டப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக்கு ஜெயல லிதா செவ்வாய்க்கிழமை வந் தார். பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியதும் முக் கிய பிரச்னை ஒன்றை விவா திக்க, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரினார். இதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.""கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க பேரவையில் ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எனவே, அனும திக்க முடியாது'' என்றார் பேர வைத் தலைவர்.

இதைத் தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரி வித்த அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கோஷமிட்டனர். அவர்களு டன் மதிமுக உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.விதியை மீறி அவையை ஒத் திவைக்க முடியாது'' என்றார் பேரவைத் தலைவர்.தொடர்ந்து அதிமுக - மதி முக உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அப் போது அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

""பேர வையை நடத்த ஒத்துழைப்புக் கொடுங்கள். அமைதியாக இருங்கள்'' என்றார் பேரவைத் தலைவர். ஆனாலும், பிரச் னையை விவாதிக்கக் கோரி அதிமுக-மதிமுக உறுப்பினர் கள் தொடர்ந்து வலியுறுத்தி னர். எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்தவுடன் பரிசீலனை செய்யப்படும். இப்போது உட் காருங்கள்'' என்றார்.

ஆனா லும், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி யவாறு இருந்தனர். அமைதி காக்கும்படி பேரவைத் தலை வர் கேட்டுக்கொண்டார்.ஆனால் அதிமுகவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திய வாறு இருந்தனர். அதிமுகவி னரின் கோரிக்கைக்கு அனுமதி தர மறுத்தார் பேரவைத் தலை வர். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் அதிமுக-மதிமுக உறுப்பினர் கள் வெளிநடப்புச் செய்தனர்.

22 உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு

சென்னை, ஏப். 8: தமிழகத் தில் 22 உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு அமைக்கப்படும் என்று வேளாண்துறை அமைச் சர் வீபாண்டி ஆறுமுகம் சட் டப் பேரவையில் தெரிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து நடை பெற்ற விவாதம்:

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்):

விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் போன்றவை கெடாமல் பாது காக்க, உழவர் சந்தைகளில் ஏ.சி. கிடங்கு அமைக்கும் திட் டம் அரசிடம் உள்ளதா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்:

15 மெட்ரிக் டன்னுக் கும் மேல் விற்பனை நடக்கும் உழவர் சந்தைகளில் ஏ.சி.கிடங்கு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 22 உழவர் சந் தைகளில் ஏ.சி. கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏ. ராஜா (திமுக):
நாகர்கோ யில் தொகுதியில் ஈத்தாமொழி, தெங்கம் புதூர், புத்தளம் ஆகிய இடங்களில் உழவர் சந்தை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்:

ஈத்தாமொழி, தெங்கம் புதூர், புத்தளம் ஆகிய இடங்க ளில் உழவர் சந்தை அமைக்க சாத்தியமில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.ஆனாலும் உறுப்பினர் தொடர்ந்து வலியுறுத்துவதால் மாவட்ட ஆட்சியரோடு தொடர்பு கொண்டு, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளோடு கலந்து பேசி, சாத்தியம் இருந்தால் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 104 உழ வர் சந்தைகள் உள்ளன. அவற் றில் 1,053 மெட்ரிக் டன் காய்க றிகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் 7,800 விவசாயிக ளால் கொண்டு வரப்பட்டு விற் பனை செய்யப்படுகின்றன.இதன் மூலம் 1,97,000 நுகர் வோர்கள் பயன் பெறுகின்ற னர்.கடந்த ஆண்டு புதிதாக 50 உழவர் சந்தைகள் அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டது.அதில் 28 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோவிந்தசாமி (மார்க் சிஸ்ட்):

திண்டுக்கல் மாவட் டம் ஒட்டன்சத்திரத்தில் மெகா உழவர் சந்தை அமைக்கப்ப டுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்: 1996-ம் ஆண்டே, ஒட் டன்சத்திரத்தில் மெகா உழவர் சந்தை அமைக்க திட்டமிடப் பட்டது.கடந்த அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகளே கூடாது என்று முடிவு செய்து, 28 உழ வர் சந்தைகளை மூடினார்கள்.அந்த 28 சந்தைகளும் தற் போது சீரமைக்கப்பட்டு வரு கின்றன.உழவர் சந்தைகளை மூடிய அதிமுகவினரே, இப்போது கடந்த ஆண்டு 50 உழவர் சந் தைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தீர்களே, எப் போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்புகின்ற னர். அந்த அளவுக்கு இந்தத் திட்டம் அனைவரின் வரவேற் பையும் பெற்றுள்ளது.

ஜி.கே. மணி (பாமக):

புளி, மிளகாய் போன்ற நீண்ட நாள் பயன்படுத்தும் பொருட்க ளைப் பாதுகாக்க தனியார், ஏ.சி. கிடங்கு அமைத்து வாடைக்கு விடுகின்றனர். அது விவசாயிகளுக்கு கட்டுப்படி யாக வில்லை.எனவே பகுதிவாரியாக பெரிய அளவில் ஏ.சி. கிடங்கு அமைக்க அரசு முன்வருமா? வாழை போன்ற அழுகும் பொருட்களைப் பாதுகாக்க பெங்களூரில் உள்ளது போன்ற மார்க்கெட் அமைக்கப்படுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம்:

தேனி மாவட்டம் சின்ன மனூரில் வாழையை பழுக்க வைக்க ரூ. 6 கோடியில் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள் ளது.