Monday, May 12, 2008

பி.பி.ஓ. பணித்திறன் வளர்க்கப் பயிற்சி

சென்னை, மே 11: சுருக்கெழுத்தாளர்கள் சங்கம் ஆளுமைத் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பை மே 19 முதல் நடத்துகிறது. பி.பி.ஓ., கே.பி.ஓ. கால் சென்டர்களில் பணியில் சேர விரும்புகிறவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது, நேர நிர்வாகம், நேர்முகச் சிந்தனை, குழு விவாதம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

ஆங்கில வழியில் பிளஸ் 2 படித்தவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.1,000.

மேலும் விவரங்களுக்கு:

044 -2434 2421, 2433 7387.

ரூ. 3.20 லட்சம் உதவித் தொகை: கருணாநிதி வழங்கினார்

சென்னை, மே 11: அறக்கட்டளை மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக 32 பேருக்கு ரூ. 3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்த ரூ. 5 கோடி வைப்பு நிதி யாக போடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியில், கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த வட்டியில் இருந்து 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவித் தொகையாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2005-ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.83.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திக் மீது நடவடிக்கையா?

சென்னை, மே 11: பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கை நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் தெரிவித்தார். பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கார்த்திக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 33 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் பட்டியலை கட்சி மேலிடத்துக்கு கார்த்திக் அனுப்பினார். அதில் அவரது ரசிகர் மன்றத்தினர் மட்டுமே இடம் பெற்றிருப்ப தாக புகார் எழுந்தது. இதனால் அந்தப் பட்டியலை கட்சி மேலிடம் திருப்பி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. கார்த்திக்கை கட்சியில் இருந்து நீக்க, பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.கட்சி அறிவித்த போராட்டங்களில் ஈடுபடாமல் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது ஏன்? தொண்டர்களை சந்திக்காமல் தனியாக செயல்படுவது ஏன்? என்று விளக்கம் கேட்கப்பட்டி ருப்பதாக கூறப்படுகிறது.

பிஸ்வாஸ் பதில்:

இது குறித்து "தினமணி' நிருபரிடம் பிஸ்வாஸ் தொலைபேசியில் கூறியதாவது: இது முற்றிலும் எங்களின் உட்கட்சி விவகாரம். வரும் மே மாதம் 17-ம் தேதி மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.அப்போது தமிழகம் தொடர்பான திட்டங்களும் விவாதிக்கப்படும்.

கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பற்றியும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதா? என்பது பற்றியும் இப்போது எதுவும் கூற விரும்ப வில்லை என்றார்.

வெளிநாட்டினரை ஈர்க்கும் விநாயகர் சிற்பங்கள்

சென்னை, மே 11: சென்னையில் நடைபெற்றுவரும் ரத்தினக் கண்காட்சியில் விநாயகர் சிற் பங்களை வெளிநாட்டினர் அதிகமாக வாங்கிச் செல்கின்ற னர்.சென்னை சேமியர்ஸ் சாலை யில் "சிருஷ்டி' என்ற தமிழ்நாடு கைவினைக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் விற்பனைக் கூடத் தில் ரத்தினக் களஞ்சியம் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட் சியில் நவரத்தினங்களான மாணிக்கம், பவளம், முத்து, மர கதம், கோமேதகம், வைடூரியம், புஷ்பராகம், வைரம், நீலம் ஆகி யவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உரு வாக்கப்பட்ட சிற்பங்கள் பார் வையாளர்களைக் கவர்ந்துள் ளன.நவரத்தினங்களைத் தவிர 90 வகையான உபரத்தினக் கற்கள் உள்ளன.அவற்றில் 30 வகை கற்களில் செய்யப்பட்ட விநாயகர், ராதா கிருஷ்ணன் போன்ற இந்துக் கடவுள்களின் சிற்பங்களும், நடன மங்கைகளின் சிற்பங்க ளும் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரூ. 70 முதல் ரூ. 7 லட்சம் வரை:

""நவரத்தினங்கள், பளிங்கு போன்ற 40 வகை கற்க ளில் கலைநயத்துடன் செய்யப் பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் ஒரே இடத்தில் சென்னையில் முதன் முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.சிற்பங்கள் தவிர நேபாளத் தில் உள்ள கண்டகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட சாளக்கிராமம் என்னும் கற்கள், நர்மதை ஆற்றில் கண் டெடுக்கப்படும் நர்மதா பாணம் எனப்படும் சிவலிங்கம் ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன. ரூ. 70 முதல் ரூ. 7 லட்சம் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன என்கிறார் இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சோமசுந் தரம்.

'மாணிக்க யானை:

நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கத்தில் செய்யப்பட்ட 9.5 கிலோ எடையுள்ள எட்டு அங்குல விநாயகர் சிலையின் விலை ரூ.1,45,000. அதுபோல பவளத்தில் செய்யப்பட்ட ஒன்றரை அங்குல அளவுள்ள விநாயகர் சிலை ரூ.99 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.