Sunday, May 4, 2008

இலவச ஆஸ்துமா சிகிச்சை

சென்னை, மே 3: உலக ஆஸ்துமா தினமான மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை இந்திய குழந்தை மருத்துவக் கழகத்தோடு இணைந்து இலவச ஆஸ்துமா பயிற்சி முகாமை நடத்துகிறது.

18 வயதுக்கு குறைவான, அடிக்கடி இருமல் அல்லது மூச்சுவிட கஷ்டப்படும் குழந்தைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். குழந்தைகள் நல மருத்துவத் துறையின் புறநோயாளிகள் பிரிவில் நடக்கும் இந்த முகாமில் அடிப்படை சோதனைகள் இலவச மாகச் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு:

98402 94333, 98431 43520, 94451 40200.

ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 882 பேருக்கு வேலை

சென்னை, மே 3: சென்னையை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா பொறியியல் கல்லூரியில் பொறியியல், கலை அறிவியல், எம்.சி.ஏ., பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் 882 மாணவ, மாணவிகள், இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம், காக்னிசென்ட், டாடா என்டர்பிரைசஸ், எல் அண்ட் டி, காரிடார், ஹூண்டாய், மகேந்திரா அண்டு மகேந்திரா, வேர்ல்டு பேங்க், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ.ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர்.

அமராவதி கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை: துரைமுருகன்

சென்னை, மே 3: முதல்வர் கருணாநிதியிடம் பேசி அமராவதி ஆற்றின் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவ டிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமராவதி பிரதான கால்வாயில் விவசாயத்துக்காக ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கரும்பு அறுவடை நடைபெறுவதாலும், தென்னை மரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதாலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோவையில் சுற்றுப்பயணம் செய்துவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் துரைமுருகனிடம் வலியுறுத்தினார். சென்னை திரும்பியதும் முதல்வர் கருணாநிதியிடம் பேசி ஒரு சிறப்பு உத்தரவு மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் துரைமுருகன் தெரிவித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

யானைப் பசிக்கு சோளப் பொரி'

சென்னை, மே 3: ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் ஒருவர் வீதம் 385 மாணவர்களை சிறந்த உறைவிடப் பள்ளியில் சேர்ப்பது என்ற அரசின் முடிவு யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தி லிருந்தும் ஒருவர் வீதம் 385 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களை சிறந்த உறைவிடப் பள்ளியில் சேர்த்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆகும் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 385 பேருக்காவது அரசு செலவில் தரமான பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற அளவில் இந்த அறிவிப்பை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். ஆனால் இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது.

இப்படிச் சொல்வதால் துணை நிற்க வேண்டியவர் விசை ஒடிந்தி டச் செய்யலாமா? என்ற கேள்விக் கணை என் மீது வீசப்படும். இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.

தேட வேண்டியுள்ளது:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசு நிர்வாகத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுபோல ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான போட்டித் தேர்விலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்களில் 10 சதவீதம் பேர் கூட தமிழக மாணவர்கள் இல்லை.சமுதாயத்தில் பெருவாரியாக உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பெரும் செலவு செய்து தகுதியும் திறமையும் வளர்த்துக் கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை.

ஆந்திரத்தை முந்த வேண்டும்:

எனவே தமிழக மாணவர்களை கைதூக்கிவிட அரசாங்கமே மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். பக்கத்து மாநிலமான ஆந் திரத்தில் மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை 30 ஆண்டுகளாக அந்த மாநில அரசு நடத்தி வருகிறது. இதனால் ஆதிதிராவிட, பழங்கு டியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்து தகுதியை வளர்த்து வருகிறார்கள். இதனால் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறு கின்றனர்.

இப்போதைய அறிவிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டத்துக்கு ஒரு உறைவிடப் பள்ளியை தொடங்க அரசு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு மாவட்டம் தோறும் அதிக எண்ணிக்கையில் உறைவிடப் பள்ளியை திறந்து ஆந்திரத்தை தமிழகம் முந்த வேண்டும். அப்போதுதான் அகில இந்திய போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற முடியும். தமிழகம் இழந்து வரும் பெருமையை நிலைநிறுத்த முடியும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சியைத் தடுத்தது யார்?

சென்னை, மே 3: தொழில் வளர்ச்சியைத் தடுத்தது யார்? என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்து கேள்வி -பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பின்தங்கிய மாவட்டமான தூத்துக்குடியில் டைட்டானியம் தொழிற்சாலை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டபோது, ராமதாஸ் அங்கு சென்று, ""ஒரு சென்ட் நிலத்தைக்கூட கொடுக்க விடமாட்டேன்'' என்ற போராட்டம் நடத்தினார். அப்போது பின்தங்கிய மாவட்டம் (தூத்துக்குடி) என்பது நினைவுக்கு வரவில்லையா? டைட்டானியம் தொழிற்சாலை தொடங்கப்படாததால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விட்டதே? ஓசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்தபோதும் ராமதாஸ் அதனை எதிர்த்தார். அதையெல் லாம் அந்த இளைஞர் கள் நினைக்காமலா இருப்பார்கள்? தொழில் தொடங்க முன் வந்தது யார்? அதைத் தடுத்தது யார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

மற்ற மாநிலங்களுக்கு...:

ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முத லீடு செய்கிறவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் தொழில் தொடங்க விரும்புகின்றனர். நாம் சென்னையில் அனுமதி கொடுக்காவிட்டால் ஆந்திரம், கர் நாடக மாநிலங்களுக்குப் போய்விடுவார்கள். அந்த மாநிலங்கள் பல சலுகைகளை அளித்து அவர்களை வர வேற்கத் தயாராக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப மையங்களை கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூரில் தொடங்க திட்டமிட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

ஹைதராபாத், பெங் களூரில் உள்ளதுபோல கிரீன்பீல்டு விமானதளத்தை சென்னையில் ஏன் அமைக்கவில்லை என்று ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த அரசு முயற்சி செய்தபோது ராமதாஸ் போன்றவர்கள், ""விரிவாக்கம் தேவை என்றாலும் அதற்காக இடத்தை எடுக்கக் கூடாது'' என்று போராட்டம் நடத்தினார்கள். ஏப்ரல் 26-ம் தேதி மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான அடிக் கல் நாட்டப்பட்டது. அப்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி மத்திய அரசுடன் பேசி னேன். வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

விந்தையாக உள்ளது:

சென்னை எண்ணூரில் கப்பல் கட்டும் தளமும், துறைமுகமும் அமைக்க ""எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு பெருமளவில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது விந்தையாக உள்ளது.""எல் அண்ட் டி' நிறுவனமும் வெளி மாநில நிறுவனம்தான். இது போன்ற சிலவற்றை மட்டும் ஆதரிக்கும் ராமதாஸ் மற்றவர்களை மட்டும் எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசு எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொழில் தொடங்க அனுமதி வழங்கி வருகி றது.

பெரிய தொழிற்சாலைகள் வந்தால் அங்கு பணியாற்றுபவர்களுக்கு வசதிகள், குடியிருப்புகள் வரத் தானே செய்யும். மிகப்பெரிய நிறுவ னங்கள் தாங்களாகவே எல்லாவற்றையும் கட்டிக் கொள்வார்கள். நடுத்தரமான தொழிற்சாலைகள் தொடங்கும்போது திட்டமிட்டு கட்டடங்களைக் கட்ட தாமதமாக லாம். அதனால் அவர்களின் தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் டி.எல்.எப். நிறுவனம் அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டடத்தை கட்டித் தருகிறது. அதே போல பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வசிப்பதற்காக வீடுகளையும் அந்த தொழிற்சாலைக்கு அருகில் கட்டித்தரும் பணியிலும் டி.எல்.எப். நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நல்ல யோசனை:

அரசு நிலங்களைக் கொடுக்கும்போது அமைச்சரவை மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது, சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று ராமதாஸ் ஒரு நல்ல யோசனையை தெரிவித்துள்ளார். 2011-ல் பாமக ஆட்சிக்கு வந்ததும் இது நிறைவேற்றப்பட்டு அந்தப் பெருமை ராமதாஸýக்கே கிடைக்கட்டும். அரசு நிலங்களைத்தான் பட்டாக்கள் என்ற பெயரில் ஏழை விவசாயிகளுக்கும், நிலமற்றவர்களுக்கும் வழங்குகிறோம். அது பற்றியெல்லாம் சட்டப் பேரவையில் விவாதித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எய்ட்ûஸ தடுப்பதில் ஆட்சியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்

சென்னை, மே 3: எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கான மண்டல மாநாட்டில், எச்.ஐ.வி.எய்ட்ஸ் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:

நாட்டை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்னை எய்ட்ஸ். இந்தியாவில் சுமார் 25 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.எய்ட்ஸ் நோயால் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். எய்ட்ஸ் ஒழிப்புக்கான திட்டங்களை மேம்படுத்துவது மாவட்ட ஆட்சியர்களின் முக்கிய பணியாகும். எய்ட்ஸ் வராமல் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்டங்களில் உள்ள எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் எய்ட்ஸ் நோய் திட்டங்களை செயல்ப டுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்த ஆண்டு, ரூ. 5 கோடி செலவில் அறக்கட்டளை அமைக்கப்படும். மக்களிடம் சுகாதார விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் திரிபாதி.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு: எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக, பொருளாதார உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதிலும், தடுப்பதிலும் தமிழகம் முன்னணி யில் உள்ளது. 760 நம்பிக்கை மையங்கள், 100 பாலியல் நோய் சிகிச்சை நிலை யங்கள், 26 கூட்டு சிகிச்சை மையங்கள் (ஏ.ஆர்.டி.) தமிழகத்தில் உள்ளன. இந்த ஏ.ஆர்.டி.மையங்களில் 70,000 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 40,000 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,800 பேர் குழந்தைகள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவித் தொகை வழங்குதல், வங்கிகளில் கடன் பெற்றுத் தருதல் போன்ற நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் அதிகமான மக்கள் தானாக முன்வந்து எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதுவரை 20 லட்சம் பேர் தாங்களாகவே முன்வந்து எச்.ஐ.வி. பரிசோதனை செய்துள்ளனர் என்றார். இந்த மாநாட்டில் 15 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநர் டாக்டர் தாமோதர் பச்சானி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சந்தேகக் கண்ணோடு பார்க்காதீர்கள்

சென்னை, மே 3: நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும், எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியும், அதில் எத்தனை தமிழர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பது பற்றியும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்து கேள்வி- பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தொழிற்சாலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றால் என்ன செய்வது? நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காமல் போய்விடும்.

தமிழர்களுக்கே முன்னுரிமை:

தொழிற்சாலைக்கு அருகில் வசிக் கும் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைக ளுக்கு கடந்த இரண்டு ஆண்டுக ளில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டடங்கள் கட்டுதல், இயந்திரங்களை நிறுவுதல் என்ற நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன. இது வரை 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுள்ளன.அதில் 6 நிறுவனங்கள் பணியைத் தொடங்கி விட்டன.

மோட்டரோலா, சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் நேர டியாக 11,324 பேருக்கும், மறைமுகமாக 22,000 பேருக்கும் ஒப்பந்தப்படி வேலை கிடைத்துள்ளது. தொழில்துறையில் நேரடியாக வும், மறைமுகமாகவும் 37,499 பேருக்கு வேலை கிடைத்துள் ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 26 ஆயி ரத்து 610 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

நோக்கியா நிறு வனம் தனது ஊழியர்களுக்காக 80 பஸ்களை இயக்குகிறது. இதிலிருந்து வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.