சென்னை, ஏப். 13: ஆப்கானிஸ் தானில் கொல்லப்பட்ட தமிழகத் தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தசாமி குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள் ளார். இது குறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த, கிருஷ்ணகிரி மாவட்டம் கே. திப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
இந்தச் செய்தி அறிந்து முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனை அடைந்ததோடு, கோவிந்தசா மியை இழந்து வாடும் குடும்பத் துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment