Monday, April 14, 2008

டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் முதல்வர் கருணாநிதி

சென்னை, ஏப். 13: சென்னை யில் உள்ள புகழ்பெற்ற டிரைவ்- இன் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அமைந்துள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் கதீட்ரல் சாலை யில் 1962 முதல் டிரைவ்-இன் உட் லண்ட்ஸ் ஹோட்டல் செயல் பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் முதன்முதலாக காரில் அமர்ந்தபடியே உண வருந்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில் இயற்கையான சூழலில் அமைந் துள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான இந்த இடம் தோட்டக்கலை சங் கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தோட்டக்கலை சங்கம் இந்த இடத்தை டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு உள் குத்தகைக்கு விட்டது.தற்போது இந்த இடத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ""உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த இடம் தமிழக அரசு தோட்டக்கலைக்கு சொந்தமானது'' என்ற அறிவிப்பு பலகையை தமி ழக அரசு வைத்தது.

இந்நிலையில் டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments: