சென்னை, ஏப். 13: ரானு கார்ட்டூன் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட் டளை 6 வயது முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு குறுகிய கால ஓவியம், கார்ட்டூன் பயிற்சி முகாமை நடத்து கிறது.
ஏப்ரல் 18 முதல் 22-ம் தேதி வரை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், ஏப்ரல் 27 முதல் மே 1-ம் தேதி வரை மயிலாப்பூர் கற்பகவள்ளி உயர்நிலைப் பள்ளியிலும், மே 5 முதல் 9-ம் தேதி வரை மேற்கு மாம்பலம் எஸ்.ஆர்.எம். நைட்டிங் கேல் உயர்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறும்.
அடிப்படை ஓவியம், இயற்கை காட்சிகள், மனிதன், பறவை, விலங்கு களின் முகஅமைப்புகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கான ஓவி யம், எண்கள், எழுத்துக்களை பயன்படுத்தி ஓவியம் ஆகியவற்றை எளிமையாக வரைய இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
044 -2464 0487, 94442 48579.
No comments:
Post a Comment