சென்னை, ஏப். 13: மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 8 பணியமைப்புகளில் பணிபுரியும் 8,620 அலுவலர்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் அடங் கிய கையேடு வெளியிடப்பட்டது.சென்னையில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கையேட்டை வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவையின் தலைவரும், ஆலந்தூர் நகராட்சித் தலைவருமான ஆர்.எஸ். பாரதி பெற்றுக் கொண்டார்.
நகராட்சி நிர்வாக ஆணையகத்தின் கீழ் 7 மாநகராட்சிகளும், 150 நகராட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்க ளின் பெயர், வண்ணப் புகைப்படம், முகவரி, பிறந்த நாள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் அடங்கிய கையேடு, 2007-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது.
அதுபோன்று தற்போது வெளியிடப்பட்டுள்ள கையேட்டில், பணியாளர்களின் பெயர், பிறந்த நாள், பணியில் சேர்ந்த நாள், பெறும் ஊதியம், தெரிந்த மொழிகள், வகித்த பதவிகள், தற் போது பணிபுரியும் இடம், ஓய்வு பெறும் நாள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் அவர்களது புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment