Monday, April 14, 2008

ஆசிரியர்களுக்கு இலவச சமய பயிற்சி முகாம்

சென்னை, ஏப். 13: ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை மே 5 முதல் 9-ம் தேதி வரை கோடைகால சமயப் பயிற்சி முகாமை நடத்துகிறது. சூர்யநமஸ்காரம், இந்து சமய நெறிகள், சைவ, வைணவ சமயக் கோட்பாடுகள், திருமுறைகள், ஆலய வழிபாடு ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இல வசம். இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களை பற்றிய விவரங்களுடன், சுய விலாசமிட்ட ரூ. 5 ஸ்டாம்ப், கவருடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

அமைப்பாளர், ஆசிரியர் சமய பயிற்சி வகுப்பு, சங்கராலயம், 65, ஸ்பர்டாங்க் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.

No comments: