சென்னை, மே 3: தொழில் வளர்ச்சியைத் தடுத்தது யார்? என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்து கேள்வி -பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பின்தங்கிய மாவட்டமான தூத்துக்குடியில் டைட்டானியம் தொழிற்சாலை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டபோது, ராமதாஸ் அங்கு சென்று, ""ஒரு சென்ட் நிலத்தைக்கூட கொடுக்க விடமாட்டேன்'' என்ற போராட்டம் நடத்தினார். அப்போது பின்தங்கிய மாவட்டம் (தூத்துக்குடி) என்பது நினைவுக்கு வரவில்லையா? டைட்டானியம் தொழிற்சாலை தொடங்கப்படாததால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விட்டதே? ஓசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்தபோதும் ராமதாஸ் அதனை எதிர்த்தார். அதையெல் லாம் அந்த இளைஞர் கள் நினைக்காமலா இருப்பார்கள்? தொழில் தொடங்க முன் வந்தது யார்? அதைத் தடுத்தது யார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
மற்ற மாநிலங்களுக்கு...:
ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முத லீடு செய்கிறவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் தொழில் தொடங்க விரும்புகின்றனர். நாம் சென்னையில் அனுமதி கொடுக்காவிட்டால் ஆந்திரம், கர் நாடக மாநிலங்களுக்குப் போய்விடுவார்கள். அந்த மாநிலங்கள் பல சலுகைகளை அளித்து அவர்களை வர வேற்கத் தயாராக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப மையங்களை கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூரில் தொடங்க திட்டமிட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.
ஹைதராபாத், பெங் களூரில் உள்ளதுபோல கிரீன்பீல்டு விமானதளத்தை சென்னையில் ஏன் அமைக்கவில்லை என்று ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த அரசு முயற்சி செய்தபோது ராமதாஸ் போன்றவர்கள், ""விரிவாக்கம் தேவை என்றாலும் அதற்காக இடத்தை எடுக்கக் கூடாது'' என்று போராட்டம் நடத்தினார்கள். ஏப்ரல் 26-ம் தேதி மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான அடிக் கல் நாட்டப்பட்டது. அப்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி மத்திய அரசுடன் பேசி னேன். வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
விந்தையாக உள்ளது:
சென்னை எண்ணூரில் கப்பல் கட்டும் தளமும், துறைமுகமும் அமைக்க ""எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு பெருமளவில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது விந்தையாக உள்ளது.""எல் அண்ட் டி' நிறுவனமும் வெளி மாநில நிறுவனம்தான். இது போன்ற சிலவற்றை மட்டும் ஆதரிக்கும் ராமதாஸ் மற்றவர்களை மட்டும் எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசு எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொழில் தொடங்க அனுமதி வழங்கி வருகி றது.
பெரிய தொழிற்சாலைகள் வந்தால் அங்கு பணியாற்றுபவர்களுக்கு வசதிகள், குடியிருப்புகள் வரத் தானே செய்யும். மிகப்பெரிய நிறுவ னங்கள் தாங்களாகவே எல்லாவற்றையும் கட்டிக் கொள்வார்கள். நடுத்தரமான தொழிற்சாலைகள் தொடங்கும்போது திட்டமிட்டு கட்டடங்களைக் கட்ட தாமதமாக லாம். அதனால் அவர்களின் தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் டி.எல்.எப். நிறுவனம் அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டடத்தை கட்டித் தருகிறது. அதே போல பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வசிப்பதற்காக வீடுகளையும் அந்த தொழிற்சாலைக்கு அருகில் கட்டித்தரும் பணியிலும் டி.எல்.எப். நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
நல்ல யோசனை:
அரசு நிலங்களைக் கொடுக்கும்போது அமைச்சரவை மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது, சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று ராமதாஸ் ஒரு நல்ல யோசனையை தெரிவித்துள்ளார். 2011-ல் பாமக ஆட்சிக்கு வந்ததும் இது நிறைவேற்றப்பட்டு அந்தப் பெருமை ராமதாஸýக்கே கிடைக்கட்டும். அரசு நிலங்களைத்தான் பட்டாக்கள் என்ற பெயரில் ஏழை விவசாயிகளுக்கும், நிலமற்றவர்களுக்கும் வழங்குகிறோம். அது பற்றியெல்லாம் சட்டப் பேரவையில் விவாதித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment