சென்னை, ஏப். 6: கர்நாடகத்தைக் கண்டித்து வரும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலா ளர் சொ. ராமு வசந்தன் தெரிவித்துள் ளார்.இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒகேனக்கல் பிரச்னையில், தமிழர் களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத் திய, மாநில அரசுகளைக் கண்டித்து, வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட் டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார்.சென்னையில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் அவைத் தலை வர் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment