சென்னை, ஏப். 6: சென்னை யில் முதல்வர் கருணாநிதி பய ணம் செய்யும் வழியில், அவ ரது கார் வருவதற்கு முன்பே சாலையின் இருபுறமும் பொதுமக்களை போலீஸôர் கெடுபிடியாக அப்புறப்படுத் துகின்றனர்.
கடந்த மார்ச் 26-ம் தேதி முதல்வர் கருணாநிதி, தலை மைச் செயலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப் போது போர் நினைவுச் சின் னத்துக்கும், தலைமைச் செய லகத்துக்கும் இடையில், வய தான ஒருவர் அரைகுறை ஆடையில் முதல்வரின் பாது காப்பு வாகனத்துக்கு குறுக்கே ஓடினார்.இதனால் பரபரப்படைந்த போலீஸôர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் காரைக்குடியைச் சேர்ந்த நாராயணன் (64) என் பது தெரியவந்தது.
அதுபோல, முதல்வர் கரு ணாநிதி தலைமைச் செயல கத்தில் இருந்து வீடு திரும்பிக் ù க ô ண் டி ரு ந் த ú ப ô து , மெரீனா கடற்கரை அருகே இருவர் முதல்வரின் வாகன அணிவகுப்புக்கு இடையே ஓடினர். அவர்களையும் போலீஸôர் பிடித்தனர்.இந்தச் சம்பவங்களுக்கு பிறகு, முதல்வர் செல்லும் வழிகளில் போலீஸôரின் கெடுபிடி அதிகமாகி வருகி றது. முதல்வர் பயணம் செய் யும் பாதைகளில் பொதுமக் கள் நடமாட்டமே இல்லா மல் செய்யும் அளவுக்கு போலீஸôர் துரத்தி அடிக் கின்றனர்.
பத்து நிமிடங்களுக்கு முன் னதாகவே...
முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்து கிளம்புவதற்கு 10 நிமிடம் முன்னதாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, சாலையின் இருபக்கமும் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களை லத்தியைச் சுழற்றி விரட்டி அடிக்கும் காட்சி மார்ச் 27-க்கு பிறகு தினமும் அரங்கேறி வருகி றது.தலைமைச் செயலகம் எதிரே, சமீபத்தில் உள்ளாட் சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக் கப்பட்ட நவீன பஸ் நிறுத்தத் தில், பஸ்ஸýக்காக காத்திருக் கும் பயணிகளையும் முதல் வர் வரும்போது போலீஸôர் விரட்டி அடிக்கின்றனர்.கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் நிற்கும் பெண்களிடம்கூட போலீ ஸôர் கருணை காட்டுவ தில்லை. (பெண்களை விரட்ட பெண் போலீஸôரை பயன்படுத்துகின்றனர்) முதல் வரின் வாகன அணிவகுப்பு கண்ணைவிட்டு மறைந்து, ஐந்து நிமிடம் சென்ற பிறகு தான் மக்களை பஸ் நிலையத் திற்குள் நிற்கவே அனுமதிக் கின்றனர்.
முதல்வர் பொதுவாக மதி யம் 12.30 மணிக்கு பிறகு உச்சி வெயில் நேரத்தில்தான் தலைமைச் செயலகத்தை விட்டு கிளம்புகிறார். அந்த நேரத்தில் நிழலுக்காக சாலை யோரங்களிலும், பஸ் நிலை யத்திலும் பஸ்ஸýக்காக காத் திருக்கும் மக்கள் போலீஸô ரின் கெடுபிடிகளால் விரக்தி அடைந்து வருகின்றனர்.இந்தப் பிரச்னையை யாரா வது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல மாட்டார் களா என்று பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்.
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment