Sunday, April 6, 2008

நல்லிணக்க உணர்வு தழைக்க வேண்டும்

சென்னை, ஏப். 6: தெலுங்கு புத் தாண்டான யுகாதியையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர் உள் ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா:

தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன் னட மொழி பேசும் மக்களுக்கு என் இதயங்கனிந்த யுகாதி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண் டில் அமைதி, ஒற்றுமையுடன் நாட் டின் வளர்ச்சிக்கு மக்கள் அனைவ ரும் பாடுபட வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

தமிழகத் தின் பண்பாட்டு உணர்வோடு ஒன் றிக் கலந்து பல ஆண்டுகளாக தமி ழக மக்களோடு இணைந்து வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இத யங்கனிந்த யுகாதி திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மை மொழியாகிய தமிழ் பேசும் மக்கள் "யாதும் ஊரே யாவ ரும் கேளீர்' என்ற கணியன் பூங் குன்றனாரின் நெறிப்படி, மற்றவர்க ளையும் தம்மைப்போல் மதித்து வாழ்ந்து வருகின்றனர்.தொழில், வர்த்தகம் போன்ற பல் வேறு காரணங்களுக்காக, பல் வேறு மாநிலங்களிலிருந்து சென் னையில் குடியேறியவர்கள் இன்று சொத்து சுகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பல்வேறு நோக்கங்க ளுக்காக சிலர் அவ்வப்போது இங்கு வந்து செல்கின்றனர்.அவர்களிடம் தமிழக மக்கள் இதுவரை எந்த பேதமும் காட்டிய தில்லை. மாறாக அவர்கள் அனை வரிடமும் அன்புடன் பழகி, உதவி கள் செய்து வந்துள்ளனர். இதனை நாடு நன்கறியும். இது தமிழக மக்க ளின் பரந்த மனப்பான்மையை, பெருந்தன்மையை உலகுக்கு எடுத் துக் காட்டும் தனிப் பண்பாகும்.மனித நேயத்தின் அடிப்படை யில் இந்த நல்லுறவு பேணும் பாங் கும், மற்றவர்களை மதிக்கும் நல்லி ணக்க உணர்வுகளும், தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாநி லங்களிலும் தழைத்திட வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா:

வசந்த காலத்தின் தொடக்கமாகத் திகழும் யுகாதித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கி றேன்."கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை உலகுக்கு எடுத்துக் காட் டும் வகையில் தமிழகம் விளங்குகி றது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்களது பாரம்பரியத்தை யும், பண்பாட்டையும் பேணிக் காக்கும் வேளையில், தமிழக மக்க ளோடு இணைந்து பல நூற்றாண் டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவுகிற இந்த ஒரு மைப்பாடு அனைத்து மாநிலங்களி லும் தழைத்தோங்க வேண்டும்.இந்த யுகாதித் திருநாள் புதிய வாழ் வையும், வளத்தையும், வெற்றிக ளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்துகி றேன்.

தமிழ்நாடு தெலுங்கு சம்மேள னத்தின் பொதுச் செயலாளர்வ.அனந்தராமன்:

தமிழகத்தின் மண் ணின் மைந்தர்களாக வாழும் இரண்டு கோடி தெலுங்கு மக்க ளுக்கு தமிழ்நாடு தெலுங்கு சம்மே ளனத்தின் சார்பில் சர்வதாரி புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.எல்லா வளமும், நலமும் பெற்று சகோதரத்துவத்தோடு ஒன்றுபட்டு நல்ல இந்தியக் குடிமகனாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கி றேன்.

No comments: