Sunday, April 6, 2008

யுகாதி: சரத்குமார் வாழ்த்து

சென்னை, ஏப். 6: தெலுங்கு புத்தாண் டான யுகாதியை யொட்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்துத் தெரிவித்துள் ளார்.இது குறித்து ஞாயிற் றுக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:

மொழிவாரி மாநிலங்கள் உருவாக் கப்பட்ட பிறகு மொழியால் வேறு பட்டிருந்தாலும், தமிழகம், ஆந்தி ரம், கர்நாடகம், கேரள மக்கள் கலா சாரத்தாலும், பண்பாட்டாலும் ஒரு மித்த உணர்வோடு வாழ்ந்து வருகி றோம்.தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்கள், சொந்த மண்ணில் வசிக்கும் உணர்வோடு, தமிழர்களோடு இரண்ட றக் கலந்து வாழ்ந்து வரு வது அனைவரும் பெரு மைப்படத்தக்க விஷயம்.

இந்த யுகாதி புத்தாண் டில் சமத்துவம், சகோத ரத்துவம் மேலோங்கி, சமாதான மான, சந்தோஷமான வாழ்வு வாழ நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண் டும். அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங் கிட தெலுங்கு, கன்னட மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: