சென்னை, மார்ச் 20: சென்னைக்கு கூடுதலாக1.5 கோடி லிட்டர் குடிநீர், வரும் ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும் என்று நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவித்தார்.இது குறித்த விவரம்:
கடல் நீரை குடிநீராக்கும்நிலையம், சென்னைக்கு அருகில் மீஞ்சூரில் அமைய உள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.ஜூன் மாதத்தில் இருந்து தினமும் ஒன்றரை கோடி லிட்டர்குடிநீரும், செப்டம்பர் மாதத்திலிருந்து 10 கோடி லிட்டர் குடிநீரும் கிடைக்கும்.சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலியில்கடல் நீரிலிருந்து 10 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கும் நிலையம், மேலும் ஒன்று அமைய உள்ளது. ரூ.994கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் உதவியுடன்இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 300 கோடிபெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காகவிரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்தியஅரசு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் ஒப்புதலும், நிதி உதவியும் பெற நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்' என்ற பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ. 300 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
அதிவேக வட்டச் சாலை:
சென்னையில் உள்ள கூவம்,அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், மாம்பலம் கால்வாய்ஆகியவற்றின் கரைகளில்உள்ள உபரி இடங்களில் அதிவேக வட்டச் சாலை அமைக்கப்படும்.120 கி.மீ. நீளமுள்ள இந்தச்சுற்றுச்சாலை, நான்கு முதல்ஆறு வழிப் பாதைகளைக்கொண்டதாக அமையும்.இதில் தேசிய நெடுஞ்சாலைஆணையத்தால் அமைக்கப்பட உள்ள 60 கி.மீ.தவிர, மீதமுள்ள 60 கி.மீ சாலை மாநில அரசால்அமைக்கப்படும்.ரூ. 2,300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளஇந்தத் திட்டத்தால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
கடலுக்கு அடியில் மீன் அருங்காட்சியகம்:
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காட்டில் கடலுக்கு அடியில் உலகத்தரம் வாய்ந்த மீன் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment