Saturday, April 26, 2008

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்

சென்னை, ஏப். 25: சென்னை அரசு பொது மருத்துவம னைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் நினைவாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்.

சோளிங்கர் மற்றும் பள்ளிப்பட்டில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோளிங்கர் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கப்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. அங்கு ரோப் கார் எப்போது அமைக்கப்படும்?

தமிழகத்தில் 4.78 லட்சம் ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலங்கள் உள்ளன. கோயில் நிலங்களை வைத்துள்ள 38,000 குத்தகைதாரர்கள் உரிய குத்தகை தருவதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட குத்தகைதான் இப்போதும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சிவன் சொத்து குல நாசம்:

கோயில் நிலங்களை உள் குத்த கைக்கு விட்டு அதிகம் சம்பாதிக்கிறார்கள். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். கொடியவர்களின் கூடாரமாக உள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க கோயில் நில பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக் கள் குழு அமைக்க வேண்டும் என்றார் அருள் அன்பரசு.

No comments: