Saturday, April 26, 2008

மாவட்டம் தோறும் முதியோர் இல்லம்

சென்னை, ஏப். 25: மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் கட்டப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சை. சையது கௌஸ் பாஷா (திமுக):

தற்போது குழந்தைக ளால் கைவிடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் முதியோர் இல்லங்களில் எல்லோரையும் சேர்ப்பதில்லை. எனவே மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பூங்கோதை:

தமிழகத்தில் முதியோர் இல்லங்களை அரசு நடத்தவில்லை. முதியோர் இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தனிக்குடித்தனம் அதிகரித்து வருவதால் குழந்தைகளால் கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசின் பெற்றோர், மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிலத்தைத் தேர்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.

No comments: