பேரவையிலிருந்து மார்க்சிஸ்ட் வெளிநடப்பு சென்னை, ஏப். 30: ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்கள் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசியதாவது:
வியாழக்கிழமை மே தினம். இந்த நேரத்தில் ஸ்ரீபெரும்பு தூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலை வாசலில் நிறுவப்பட் டிருந்த தொழிற்சங்க கொடி மரமும், சி.ஐ.டி.யு. கொடி மர மும் செவ்வாய்க்கிழமை இரவு ஹூண்டாய் ஆலை நிர்வா கத்தால் உடைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழிலாளர்கள் அளித்த புகாரை ஸ்ரீபெ ரும்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் பதிவு செய்ய மறுத் துள்ளனர். இதனை ஏற்காத தொழிலாளர்கள் ஹூண்டாய் ஆலை முன்பு கூடியிருந்தனர். அவர்கள் மீது காவல்துறையி னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் உள் பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண் டும். கொடி மரத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
எந்த முதலாளிக்கும் ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சங்க கொடியை ஏற்றியவர்கள், அது ஹூண்டாய் ஆலைக்கு சொந்தமான நிலம் என்று நினைத்து "சிப்காட்' நிலத்தில் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.இதனால் சிப்காட் நிர்வாகம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற விவரங்கள் அரசுக் குக் கிடைக்கவில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்து அனைவரும் பேரவையை விட்டு வெளியேறினார்கள். பேரவைக்கு வெளியே செய்தியாளர்க ளிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், "ஹூண் டாய் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது காவல்து றையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தோம்' என்றார்.
No comments:
Post a Comment