Thursday, May 1, 2008

வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

சென்னை, ஏப். 30: வேளாண் அலுவலர் பணிகளுக்கு வயது வரம்பை தளர்த்துவது பற்றி முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரி வித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பாமக எம்.எல்.ஏ.வேல்முருகன் இது குறித்து பேசியதாவது:

வேளாண் துறையில் காலி யாக உள்ள 1,707 பணியிடங் கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஏப்ரல் 25-ம் தேதி பேர வையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமு கம் அறிவித்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பணியிடங்கள் நிரப்பப் பட இருப்பதால் பல ஆண்டுக ளாக வேலை கிடைக்காமல் இருக்கும் வேளாண் பட்டதாரி கள் பாதிக்கப்படுவார்கள்.எனவே அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வயது வரம்பை தளர்த்த அரசு நடவ டிக்கை எடுக்குமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

பி.எஸ்ஸி (வேளா ண்மை) படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. டிப் ளமோ படித்தவர்களுக்கு வயது வரம்பு உண்டு. தற்போது வேளாண் அலுவலர் பணிக ளுக்கு வயது வரம்பை 10 ஆண் டுகள் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.10 ஆண்டுகள் இல்லாவிட்டா லும் வயது வரம்பை 35 -40 ஆக நிர்ணயிப்பது குறித்து முதல்வரி டம் கலந்து பேசி முடிவு எடுக் கப்படும்.

No comments: