சென்னை, ஏப். 30: வெலிங்டன் ஏரியை பழுதுபார்ப்பது சம்பந்த மாக ஆராய காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது அறிக்கையை புதன்கி ழமை அரசுக்கு அளித்துள்ளது.வெலிங்டன் ஏரி கட்டப்பட் டதிலிருந்து செப்பனிடாததால் முழுக் கொள்ளளவும் நீர் தேங்கா மல் இருந்தது. அதனால் வெலிங் டன் ஏரியின் 11,200 ஹெக்டேர் பாசனப் பரப்பு பயன் அடையா மல் இருந்தது.
இதற்கு நிரந்தர தீர்வு காண கடந்த 2007-ம் ஆண்டு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு வெலிங்டன் ஏரியை செப்பனிட தொழில் நுட்ப ஆலோசனைகளை அளித் துள்ளது.குழுவின் அறிக்கையை அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் புதன்கிழமை வழங்கினார்.
இந்த ஏரி செப்பனிடப்பட் டால் திட்டக்குடி மற்றும் விருத் தாச்சலம் பகுதிகளில் உள்ள 11,200 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.உயர்நிலைக் குழுவின் அறிக் கையை பரிசீலித்து உடனடியாக மதிப்பீடு தயாரிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment