Thursday, May 1, 2008

கார்களில் சிவப்பு விளக்கை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

சென்னை, ஏப். 30: கார்களில் முறைகேடாக சிவப்பு விளக் கைப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் கே.என். நேரு எச்சரிக்கை விடுத் தார்.பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் இது குறித்து பேசியதாவது:

கார்களில் சிவப்பு விளக்கை யார் யார் பயன்படுத்தலாம்? மாவட்ட ஊராட்சித் தலைவர் கள் சிவப்பு விளக்கு பொருத்தப் பட்ட கார்களில் உலா வருகின்ற னர். சில நேரங்களில் சமூக விரோதிகள் காரில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தி செக் போஸ்ட்டில் தப்பிச் செல்வதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு:

கவர் னர், முதல்வர், பேரவைத் தலை வர், மாநகராட்சி மேயர்கள், அமைச்சர்கள், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், டி.ஜி.பி., மாநகர காவல்துறை ஆணையர் கள், ஆம்புலன்ஸ்கள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வாகனங்கள், மாவட்ட ஆட்சி யர்கள், எஸ்.பி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாநில தேர்தல் ஆணையர், டி.என்.பி.எஸ்.சி.சேர்மன், சட்டம், ஒழுங்கு ஐ.ஜி.சென்னை, சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. மதுரை, வாரியத் தலைவர் கள் மற்றும் ஆலோசகர்கள், ஆர்க்காடு நவாப் முகம்மது அலி ஆகியோர் மட்டுமே காரில் சிவப்பு விளக்கைப் பயன் படுத்தலாம்.இவர்களைத் தவிர மற்றவர் கள் காரில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார் கே.என். நேரு.

No comments: