சென்னை, ஏப். 30: சென்னை மாநகரில் ஓடும் ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் களை சரி செய்யும் பணி இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
டி. செங்குட்டுவன் (திமுக):
சென்னை மாநகரில் ஓடும் ஆட் டோக்களில் மீட்டர் சரிவர வேலை செய்யவில்லை என்று புகார் வருகிறது. இந்தப் பிரச் னையை சரி செய்ய அரசு முன்வ ருமா?
அமைச்சர் கே.என். நேரு:
சென்னை மாநகரில் ஓடும் 40,000 ஆட்டோக்களுக்கும் ஒன்பது நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை 6 பகுதிக ளாகப் பிரித்து மீட்டரை விற் பனை செய்த நிறுவனங்கள் மூலமே அதனை சரி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் இந்தப் பணி தொடங்கும்.
ஜெயபால் (காங்கிரஸ்):
கன்னி யாகுமரி மாவட்ட மீனவர்கள் வேலைக்காக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, எர்ணாகுளம் போன்ற இடங்களுக்குச் செல் கின்றனர். அவர்களுக்கு போது மான பஸ் வசதி இல்லை. எனவே, குளச்சலில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்க அரசு முன்வ ?
அமைச்சர் கே.என். நேரு:
கேரள மாநிலத்தில் தமிழகத்தை விட பஸ் கட்டணம் அதிகம். எனவே தமிழக பஸ்கள் கேரளத் துக்குள் வருவதை அந்த மாநில அரசு விரும்பவில்லை.
No comments:
Post a Comment