Thursday, May 1, 2008

பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு

சென்னை, ஏப். 30: அதிமுக எம்.எல்.ஏ. செ.ம. வேலுச்சா மியை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டதைக் கண் டித்து தமிழக சட்டப் பேரவையிலிருந்து அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிந டப்பு செய்தனர்.

பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், சட் டப் பேரவை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் வை. சிவ புண்ணியம் கொடுத்த கவன ஈர்ப்பு அறிவிப்பின் மீது அவர் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அதிமுக எம்.எல்.ஏ. செ.ம. வேலுச்சாமி பேரவைத் தலைவரை பார்த்து ஏதோ கூறினார். ""தனது இருக் கையில் அமராமல் வேறு இருக் கையில் அமர்ந்து கொண்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்'' என்று அவரை பேரவைத் தலை வர் இரா. ஆவுடையப்பன் எச்சரித்தார்.

அப்போது செ.ம. வேலுச்சாமி பேரவைத் தலைவரை நோக்கி மீண்டும் ஏதோ கூறி னார். உடனே அவை நடவடிக் கைகளுக்கு இடையூறு செய்வ தாகக் கூறி வேலுச்சாமியை வெளியேற்ற பேரவைக் காவலர் களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். உடனே பத்துக்கும் மேற்பட்ட அவைக் காவலர்கள் செ.ம. வேலுச்சாமியை வெளி யேற்ற அவரது இருக்கையை நோக்கி விரைந்தனர். ஆனால் பேரவைக் காவலர்களை முன் னேற விடாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தடுத்தனர். இதனால் அவையில் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ""பேரவைத் தலைவர் ஓர் உறுப்பி னரை வெளியேற்ற உத்தரவிட்ட பிறகு, பேரவைக் காவலர்கள் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமா கும். எனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றுவது பற்றி பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

ஆனாலும் பேரவைக் காவலர்கள் வேலுச்சாமியை வெளி யேற்ற விடாமல் அதிமுகவினர் தடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் எழுந்து, ""இரண்டு தரப் பிலும் பிரச்னை எழுந்துள்ளது.ஓர் உறுப்பினரை வெளியேற்ற இத்தனை காவலர்களும், பெண் காவலர்களும் அணிவகுத்து வருவது சரியல்ல'' என்று பேச ஆரம்பிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து ஏதோ கூறினார்கள்.

செ.ம. வேலுச்சாமியை வெளி யேற்றுவது என்ற பேரவைத் தலைவரின் முடிவைக் கண் டித்து வெளிநடப்பு செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித் தார். அதனைத் தொடர்ந்து அதி முக எம்.எல்.ஏ.க்கள் அனைவ ரும் அவையை விட்டு வெளியே றினார்கள். அவர்களைத் தொடர்ந்து மதிமுக எம்.எல்.ஏ.க்களும் பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஓர் உறுப்பினரை வெளியேற்ற எத்தனை ஆண் காவலர்களை அனுப்புவது, பெண் காவலர்களை அனுப்பு வது என்பதெல்லாம் பேரவைத் தலைவரின் முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது.' என்றார்.

No comments: