Thursday, May 1, 2008

ஆளுநருடன் கருணாநிதி திடீர் சந்திப்பு

சென்னை, மே 1: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி கிண்டி ஆளுநர் மாளிகை யில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். மாலை 6.50 மணியிலிருந்து 7.10 மணி வரை 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, க. பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

கடந்த மாதம் இதய நோய் சிகிச் சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். ஆளுநர் வீடு திரும்பிய பிறகு முதன்முறையாக அவரை முதல்வர் சந்தித்துள்ளார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: