Wednesday, April 16, 2008

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் வாதம்

சென்னை, ஏப். 15: தமிழக சட் டப் பேரவையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது. மார்ச் 11 - ம் தேதி பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன், "எம்.எல்.ஏ.க்களுக்கு 2 கிரவுண்டு வீட்டுமனை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமியும், இதே கோரிக்கையை வலியு றுத்திப் பேசினார். அப்போது, குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஞானசேக ரன், "எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு கேட்கும்போது கம்யூ னிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ஊதிய உயர்வு அளித்தால் ஏற்றுக் கொள்கிறார் கள்' என்றார்.

இந்தப் பிரச்னையை சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் தலைவர் கோவிந்தசாமி எழுப்பினார். மார்ச் 11-ம் தேதி ஞானசேகரன் கூறிய சில வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப் போது நடைபெற்ற விவாதம்:

ஞானசேகரன் (காங்கிரஸ்):

நான் சொல்லாத தகவலை சொன் னதாக சொல்வது அழகல்ல. ஹைதராபாத், பெங்களூரில் உள்ளது போல சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தனியாக காலனி அமைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுத்தேன்.

ஆர்.எம். பழனிச்சாமி (காங்கிரஸ்):

எம்.எல்.ஏக்களுக்கு 2 கிர வுண்டு வீட்டுமனையை நாங்கள் இலவசமாக கேட்கவில்லை. சலுகை விலையில் வழங்குமாறு தான் கோரிக்கை வைத்தோம். நாங்கள் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு தவறாக பேசக்கூடாது.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

எம்.எல்.ஏக்களுக்கு 2 கிரவுண்டு வீட்டுமனை கொடுக்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரிக்கை வைத்தார். அது அவரது உரிமை. ஆனால் அவர் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக என்று சொன்னதால் எங்கள் கட்சியின் கொள்கையை எடுத்துக் கூறினோம் என்றார்.

"ஞானசேகரன் கூறிய வார்த்தையை பேரவை அவைக் குறிப் பில் இருந்து நீக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி தொடர்ந்து வலியுறுத்தார். பேரவை அவைக் குறிப்பைப் பார்த்து விட்டு நீக்குவதாக பேரவைத் தலைவர் கூறியதும், இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.பின்னர், பேரவை அவைக் குறிப்பில் இருந்து குறிப்பிட்ட வார்த்தையை நீக்குவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

No comments: