சென்னை, ஏப். 15: தலைமைச் செயலாளரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது அரசு நிர்வாகத்துக்கு விடப்பட்ட சவால் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். பேரவையில் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம்:
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
தலைமைச் செயலாளர் பேசியதை ஒட்டுக்கேட்டது யார்? அரசாங்கத்தைவிட சக்தி படைத்தவர்கள் எங்கே இருக் கிறார்கள்? இது அரசு நிர்வாகத்துக்கு விடப்பட்ட சவால். இதனை முளையிலேயே வெட்டி எறிய வேண்டும்.
ஜி.கே. மணி (பாமக):
பேரவையில் ஏற்கெனவே இதுபோன்ற பிரச்னையை எழுப்பியபோது பத்திரிகையில் வந்த செய்தியை வைத்து பேசக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி மறுப்பு தெரிவித்தார். முதல்வர் சொன்னதில் நியாயம் இருக்கும் என்று நாங்கள் அமைதி காத்தோம். ஆனால் அதே பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, தலைமைச் செயலாளரின் தொலைபேசியை ஒட்டுக்கேட் பது என்பதும் வேதனையைத் தருகிறது. அந்தப் பத்திரிகை தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறியுள் ளது.
டி. சுதர்சனம் (காங்கிரஸ்):
மக்களை திசை திருப்பு வதற்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாதி களை அரசு கண்காணிக்க வேண்டியுள்ளது. நாட் டில் ஏதாவது நடந்துவிட்டால் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறோம். தலைமைச் செயலாளரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டிருந்தால் அது தவறு. எந்த அரசும் இது போன்ற காரியத்தை செய்யாது.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்ததன் மூலம் மிகப்பெரிய ஜனநாயகக் கடமையை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி யுள்ளார்.
கண்ணப்பன் (மதிமுக):
பத்திரிகையில் மட்டுமல்ல தொலைக்காட்சியிலும் கூட தலைமைச் செய லாளரின் உரையாடல் வெளியாகி உள்ளது. இந்த உரையாடல் எப்படி அவர்களுக்கு கிடைத்தது. இதனைக் கண்டித்து மதிமுக வெளிநடப்பு செய்கிறது.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
ஒட்டுக் கேட்டது உண்மை என்றால் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசியல் ஆக்க கூடாது.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
உளவுத்துறையே தலைமைச் செயலாளரின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்யலாமா?
No comments:
Post a Comment