சென்னை, ஏப். 15: சென்னை கே.கே. நகரில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக் கடைகளை அகற்றக்கோரி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கே.கே. நகர் காமராஜர் சாலையில் இரண்டு பள்ளிகளுக்கு நடுவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனை அகற்றக்கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கையெழுத்து இயக் கத்தை தொடங்கி வைத்து பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் பேசியது:
தமிழகத்தில் 1980-க்கு முன்பு மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் இன்று அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.மதுக்கடைகளை நடத்துவதோடு பார் வசதியையும் அரசே ஏற்படுத்தி தந்துள் ளது. இதனால் குடிப்பவர்க ளின் எண்ணிக்கை அதிக மாகி வருகிறது.
குடிப்பதை தடுக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவதால் பெண்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுக்கடை வருமானத்தை நம்பிதான் தமிழக அரசு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அரசு அகற்ற வேண் டும்.தமிழகத்தில் பூரண மதுவி லக்கை கொண்டு வரவேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என்றார் இல.கணேசன்.
பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் தமிழிசை சௌந்திரராஜன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment