Wednesday, April 16, 2008

சென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சென்னை, ஏப். 14: சென்னை யில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 118-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மு.க. ஸ்டாலின்:

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பரிதி இளம் வழுதி, உ. மதிவாணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக சென்னை துறைமுக வளாகத்திலுள்ள அம்பேத் கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணன் கொண்டுவந்த 118 கிலோ கேக்கை எம். கிருஷ்ணசாமி வெட்டினார்.

பாமக:

சென்னை துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டி ருந்த அம்பேத்கர் படத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி. உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு:

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா, ஆலந்தூர் நகராட்சித் தலைவர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்னை பல்லாவரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மார்க்சிஸ்ட்:

சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரத ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் தே. லட்சுமணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் க. பீமாராவ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட்:

சென்னை துறைமுக வளாகத் தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூ னிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

பாஜக:

பாஜக சார்பில் அக் கட்சியின் தேசியச் செயலாளர் சு. திருநாவுக்கரசர், மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மதிமுக:

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கண்ணப்பன், பட அதிபர் தாணு, துணைப் பொதுச்செய லாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

தேமுதிக:

சென்னை துறை முக வாயிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலையச் செயலாளர் ப. பார்த்தசாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி:

கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராய ணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள்:

கோயம்பேட்டில் உள்ள அம் பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாலை அணி வித்தனர்.

திராவிடர் கழகம்:

சென்னை நேரு உள் விளையாட்டரங்க முகப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பொரு ளாளர் கோ. சாமிதுரை, பொதுச்செயலாளர் கலி. பூங் குன்றன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

எஸ். ஜெகத்ரட்சகன்:

சென்னை அடையாறு கிரீனவேஸ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகன், பொதுச்செயலாளர் விருகை ஜி.ஜெயராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

டாக்டர் சேதுராமன்:

சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் ந. சேதுராமன், பொதுச்செயலாளர் ச. இசக்கி முத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

வை. பாலசுந்தரம்:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம் பேத்கரின் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வை. பாலசுந்தரம், கட் சியின் சட்டத்துறை செயலாளர் வை. ராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

No comments: