Wednesday, May 14, 2008

வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம்

சென்னை, மே 14: போலீஸ், தீயணைப்பு துறையினரை திசை திருப்பும் வகையில் வதந்தி பரப்பினால் ரூ. 2,000 அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் புதன்கிழமை நிறைவேறியது. தமிழக காவல் துறைக்கு புதிய காவல் சட் டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கான சட்ட முன் வடிவை நிதி அமைச்சர் க. அன்பழகன் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன்படி போலீஸ், தீயணைப்பு துறையினரின் பணிகளை திசை திருப்ப வதந்தி பரப்பி னாலோ, பொய்யான எச்சரிக்கை விடுத்தாலோ ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். ஒருவர் இரண்டாவது முறையாக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ரூ. 4,000 வரை அபராதம் விதிக்கப்படும். போலீஸôரின் பணி நேரம் 8 மணி நேரத்துக்கும் அதிகமா னால் அவர்களுக்குப் போதுமான வசதிகள் வழங்க வேண்டும். மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற போலீஸôர் செல்ல வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதி நிதிகளின் தகுதியின்மையை விசாரிக்க தமிழ் நாடு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட முன் வடிவை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

3 ஆண்டு உரிமம்:

பழைய இரும்பு வியா பாரிகள், மோட்டார் வண்டி பழுது பார்க்கும் பட்டறைகள், டிங்கர் கடை உரிமையாளர்கள் ஆகியேருக்கு ஓர் ஆண்டு உரிமம் வழங்கப் பட்டு வருகிறது. இதனை மூன்று ஆண்டாக உயர்த்த வகை செய் யும் மசோ தாவை நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்தார்.

தனி அலுவலர் பதவிக்காலம் நீடிப்பு:

கூட்டுறத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் கூட்டு றவுச் சங்கங்கங்களின் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 6 மாதத்துக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தாக்கல் செய்தார்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில் பழகுநர்களின் கால அளவைக் குறைக்க வகை செய்யும் மசோதவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார்.

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கும், தீர்ப்பாயத்துக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார். மேற்கண்ட ஆறு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

No comments: