சென்னை, மே 13: இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதா னங்களில் அழகிகளின் நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஞா. செந்த மிழன் (படம்) கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனம் - சுற்றுச்சூழல் - இளை ஞர் நலன் - பொது - விளையாட்டு - தமிழ் வளர்ச்சி ஆகிய துறை களின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
20 - 20 கிரிக்கெட் போட்டி நடக் கும் மைதானங்களில் வீரர்களை உற் சாகப்படுத்துகிறோம் என்ற பெயரில் இளம் பெண்களை கவர்ச்சி உடை யில் நடனம் ஆட வைக்கின்றனர்.இதுபோன்ற கலாச்சார சீர்கேடுக ளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.வீடியோ கேம்ஸ் சூதாட்டம் சென் னையில் அதிகமாகி விட்டது. இத னைத் தடுக்க வேண்டும்.சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நடக்கும் பணிகள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சொல்கிற இடத் தில் நடக்க வேண்டும்.
234 எம்.எல்.ஏ. தொகுதிக்கும் விளை யாட்டுக் கருவிகள் வாங்க ரூ. 2.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு தொகுதிக்கு ரூ. 1 லட்சம் மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையில் தேவையான விளை யாட்டுக் கருவிகள் வாங்க முடி யாது. எனவே ரூ. 4 லட்சம் ஒதுக்க வேண்டும்.
மாவட்டம் தோறும் விளை யாட்டு விடுதிகள்:
பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் விளை யாட்டுக்கு நேரம் ஒதுக் குவதில்லை. அப்ப டியே ஒதுக்கினாலும் அந்த நேரத்தில் மற்ற பாடங்களை நடத்துகி றார்கள். பள்ளிகள் கல் லூரிகளில் காலியாக உள்ள உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். மாவட்டம் தோறும் விளையாட் டுப் பள்ளிகள், விளை யாட்டு விடுதிகள் அமைக்க வேண் டும். காவல் துறையில் 14 விளை யாட்டுகள் உள்ளன. 15-வது விளை யாட்டாக கோகோ விளையாட்டை சேர்க்க வேண்டும்.
தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற் கொலை செய்து கொள்வதை தடுப்ப தற்காகவே அதிமுக ஆட்சியில் உட னடித் தேர்வு திட்டம் கொண்டு வரப் பட்டது.தமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகரித்து வருகின்றனர். இளைஞர் களுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் வர வேண்டும் என்பதற்காகவே அதிமுக இளைஞர் பாசறை மற் றும் இளம் பெண்கள் பாசறை திட் டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆப்பிள் கஞ்சா:
தமிழகம் முழு வதும் கஞ்சா விற்பனை அதிகமாகி வருவதாக செய்திகள் வருகின்றன.மதுரையில் இளைஞர்களையும், கல் லூரி மாணவர்களையும் சீரழிக்கிற வகையில் ஆப்பிள் கஞ்சா உலா வரு வதாக தெரிய வருகிறது. இதனை அரசு தடுத்து மாணவர்களின் நல னைக்காக்க வேண்டும் என்றார் செந் தமிழன்.
No comments:
Post a Comment