அனைவரும் தோழமையுடன் வாழ வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல் வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந் ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், அர சுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் தனது பாராட்டுக்க ளைத் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து தோழமைக் கட்சியினர் பேசிய பிறகு முதல்வர் பேசியதாவது:
"நமது ஒற்றுமையில், தோழமை உணர்வில் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.நீங்கள் விரும்புகிறவரை நான் இல்லாமல், இடையில் பிரிந்து விட்டாலும், யாரோ ஒரு பெரியவன் இட்ட கட் டளை என்று நினைக்காமல், ஒரு சிறியவன் விடுத்த கெஞ்ச லாக ஏற்றுக் கொண்டு, தோழமையுடன் வாழ்ந்து காட்டி தமிழகத்தை, தமிழ் இனத்தை வாழ வைக்க வேண்டும்.50 வயதுக்குப் பிறகு எனக்கு நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. நாட் கள் குறைவாக இருந்தால், மக்களுக்கு தொண் டாற்றக் கூடிய நாட்களும் குறைந்து விடும் என்பதால் நீண்ட காலம் வாழ ஆசைப்படுகி றேன்.
ஜம்பம் அடிக்கவில்லை:
என்னுடைய ஒரு நாள் வேலை இப்படி என்று "ஜம்பம்' அடித் துக் கொள்ளவில்லை. இப்படி வேலை செய் தால்தான் நீண்ட காலம் வாழ முடியும் என்ப தற்காக பொதுநலத்தோடு சொல்கிறேன்.மக்களுக்காக தொண்டாற்றுகிற நேரத்தில் எல்லோரோடும் தோழமையோடு பழகி னோம் என்ற திருப்தியோடு மறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
திங்கள்கிழமை (மே 12) காவல்துறை மானியக் கோரிக் கையின்போது எனது பேச்சை கவனித்திருப்பீர்கள்.யாரையும் வசியப்படுத்த வேண்டும், நம் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. எல் லோரும் இணைந்து இந்த நாட்டை, இந்தச் சமுதா யத்தை ஒற்றுமைப்படுத்தி வளம்பெறச் செய்ய வேண் டும்' என்றார் முதல்வர் கருணாநிதி.
No comments:
Post a Comment