சென்னை, மே 14: சீனாவில் ஏற்பட்ட பூகம்பம், ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு ஆகியவற்றில் பலியானவர்க ளுக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை காலை பேரவை கூடியதும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பேசியதாவது:
சீனா நாட்டின் தென் மேற்கு மாநிலமான சிஜுவானில் மே 12-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.மே 13-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாகி உள்ளனர். இந்தச் செய்தி கேட்டு பேரவை அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறது. இந்த இரு சம்பவங்களிலும் பலியான அனைவருக்கும் பேரவை சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment