Wednesday, May 14, 2008

'வெட்கப்படுகிறேன்'

சென்னை, மே 14: லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை இது குறித்து அவர் பேசியதாவது:

லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற் றுக்கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.""எனது உறவினர் ஜவஹர் மீது நடை பெற்று வரும் விசாரணையின் போக்கில் குறுக்கிட்டு அமைச்சர் என்ற முறையில் என் செல்வாக்கை, அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. லஞ்ச ஒழிப்பு ஆணையருடன் பேசியபோது ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கச் சொன்னேன். ஆனாலும் அதனை தவறு என்று இப்போது உணர்கிறேன். அதற்கு பரிகாரமாக எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று அமைச்சர் பூங்கோதை எனக்கு எழுதியுள்ளார் என்றார் முதல்வர் கருணாநிதி.

No comments: