சென்னை, மே 13: விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி கட்டணங்கள் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை செய்யும் மூன்று சட்ட முன் வடிவுகளை அறிமுகம் செய்தார்.
விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி கட்டணங்களில் 75 சதவீதம் அரசின் கணக்கிலும், 25 சதவீதம் சம்பந்தப்பட்ட நகர்ப் புற உள்ளாட்சிகளின் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டு வந்தது.தற்போதைய சட்டத் திருத்தத்தின் படி, இந்தக் கட்டணம் முழுவ தையும் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேயருக்கு அதிக அதிகாரம்:
உள்ளாட்சிகளுக்கு அதிக அதி காரம் வழங்க ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் தலை மையில் அமைக்கப்பட்ட குழு மேயருக்கு அதிக அதிகாரம் வழங்க வும், அதற்கேற்ப சட்டங்களை திருத்தவும் பரிந்துரை செய்துள்ளது.
சிலைகளை அவமதித்தால் குண்டர் சட்டம்:
தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை (மே 12) அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.
வாகனங்களுக்கான ஆயுள்கால வரி உயர்வு:
வாகனங்களுக் கான ஆயுள்கால வரி 6 சதவீத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்ப டும் என்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே.என். நேரு அறிவித்திருந்தார்.அதன்படி, ஆயுள்கால வரியை உயர்த்த வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கே.என். நேரு அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப் புத் திருத்த சட்ட முன் வடிவை சட்டத் துறை அமைச்சர் துரைமுரு கன் அறிமுகம் செய்தார். 2006-ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்ட முன்வடிவை வணிக வரித்துறை அமைச்சர் உபயத்துல்லா தாக்கல் செய்தார்.
அதுபோல, 2008-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேரவையில் அறிமுகம் செய்தார்.
No comments:
Post a Comment