Wednesday, April 30, 2008

எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை

சென்னை, ஏப். 28: முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்றும் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை என்று முதல்வர் கரு ணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.""கொடநாடு எஸ்டேட்டில் எவ்வளவு சம்ப ளம் என்று கேட்கும் கோவை தங்கம், கருணா நிதியின் குடும்பத்தினர் வாங்கியுள்ள எஸ் டேட்டுகள் பற்றி கேட்பாரா?'' என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங் கோட்டையன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கேள்வி-பதில் வடிவில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் சட்டப் பேர வையில் கேள்வி எழுப்பினார். அதற்கு அவையிலோ, அறிக்கையிலோ விளக்கம ளிக்க வேண்டிய செங்கோட்டையன் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத் துள்ளார். அவருக்கு நான் பதிலளிக்க விரும் பவில்லை.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட் டையன் மீது 1996-ம் ஆண்டு ஊழல் வழக்கு கள் குவிந்தன. அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடல் கொள்ளையர் போல்...:

""முன் னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோ டியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல் இருந்திருக்கக் கூடாது. பஸ்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் செங்கோட்டையன் பெருமள வில் ஊழல் செய்திருப்பதாக ஊழல் ஒழிப் புத் துறையினர் கூறியுள்ளனர். அவர் வாங் கிய சொத்துகளுக்காக முத்திரைக் கட்ட ணம் மட்டும் ரூ. 2.5 கோடி கட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. உயர் பதவியில் உள் ளவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்கா மல் போய்விட்டது. இதனால் சமூக முன் னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதி ராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நீதிமன்றங்கள் தடுக்கக் கூடாது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப் பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது'' என்று நீதிபதி சிவப்பா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த வழக்குகள் அதிமுக ஆட் சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப் புகள் வேறுவிதமாக வந்த போதிலும் நீதிபதி சிவப்பாவால் இந்த அளவுக்கு பாராட்டு பெற் றவர்தான் செங்கோட்டையன். அப்படிப்பட் டவர், நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்ப தைப் போல அறிக்கை விடுத்துள் ளார். முதல்வராக வருவதற்கு முன்பு வசித்த வீட்டில் தான் இன்னமும் நான் வசித்து வருகிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்க வில்லை என்று கருணாநிதி கூறி யுள்ளார்.

No comments: