சென்னை, ஏப். 29: கோயில்களில் திருப்பணி செய்வதற்குத் தேவை யான நிதி திரட்ட எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பெரியகருப்பன் வேண்டு கோள் விடுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:
டாக்டர் க. நெடுஞ்செழியன் (பாமக):
நாமக்கல் மாவட்டம் பர மத்தி ஊராட்சி ஒன்றியம் குன்ன மலை வல்லீஸ்வரர் ஆலயம் 13-ம் நூற்றாண்டில் வல்வில் ஓரியால் கட்டப்பட்ட பழமையான கோயி லாகும். எனவே அங்கு திருப்பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக் குமா?
அமைச்சர் பெரியகருப்பன்:
பழமையும், தொன் மையும் வாய்ந்த குன்னமலை வல் லீஸ்வரர் கோயில் 300 அடி உயர மலைக் குன்றின் மேல் உள்ளது. இந் தக் கோயிலுக்கு சொந்தமாக நிலங் கள் எதுவும் இல்லை. இந்தக் கோயிலில் உண்டியலும் வைக்கப் படவில்லை. மலையில் படிக்கட்டு கள் கட்டி திருப்பணி செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெரு மளவில் நிதி திரட்ட உறுப்பினர் உதவி செய்தால் விரைவாக திருப் பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.
ராஜேந்திரன் (திமுக):
சேலம் அயோத்தியாபட்டினத்தில் திரு மலை நாயக்கரால் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் உள் ளது. இந்தக் கோயிலில் திருப்பணி செய்ய அரசு முன்வருமா?
அமைச்சர் பெரியகருப்பன்:
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் உரிய காலத்தில் திருப்பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள் ளார். எல்லாக் கோயில்களிலும் ஒரே நேரத்தில் திருப்பணி செய் வது சாத்தியமல்ல.அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். கோயில்களில் திருப்பணி செய்ய அரசு முழுமை யாக நிதி ஒதுக்குவதில்லை. திருப் பணிக்குத் தேவையான நிதியில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தொகையை உபயதாரர்களிடம் இருந்து உறுப்பினர்கள் வசூலித்து தந்தால் உடனடியாக திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும்.
ஆறுமுகம் (பாமக):
விலை யேற்றம் காரணமாக திருத்தேர்கள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வரு வதில்லை. எனவே விலையேற்றத் துக்கு ஏற்ப மதிப்பீடு செய்து கூடு தல் நிதி வழங்க அரசு முன்வருமா?
அமைச்சர் பெரியகருப்பன்:
தமிழகத்தில் 250 திருத்தேர்கள் செய்யும் பணி நடந்து வருகிறது.தேர் செய்யும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவில்தான் இருக் கிறார்கள் என்பதாலும், விலை யேற்றம் காரணமாகவும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நியாயமான தொகை அவர்களுக்கு வழங்கப்ப டும்.
டி.யசோதா (காங்கிரஸ்):
தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் கோயில் கட்ட அரசு ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறது. இது வரை எத்தனைக் கோயில்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள் ளது?
அமைச்சர் பெரியகருப்பன்:
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 16 ஆயிரம் கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயி ரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,000 கோயில்கள் கட்ட தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment