சென்னை, ஏப். 29: பத்திர பதிவுக் கான நிலத்தின் மதிப்பு உயர்ந்துள் ளது சம்பந்தமாக பத்திரப் பதிவு அமைச்சர் அளித்த பதிலை சட் டப் பேரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சி.கோவிந்தசாமி ஆதாரத்துடன் மறுத்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரம் முடிந்ததும் சி. கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு அறிவிப்புக்கு பதில் அளித்து பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசிய தாவது:
பத்திரப் பதிவுத் துறையில் வழி காட்டி மதிப்புகள் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை கிராமப் புறங்க ளுக்கும், ஆண்டுதோறும் நகர்பு றங்களுக்கும் திருத்தி அமைக்கப் பட்டு வந்தன. ஆனால் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு வழிகாட்டி மதிப்புகள் திருத்தி அமைக்கப்படவில்லை.
இதனால் வழிகாட்டி மதிப்பு கள் வெளிச்சந்தையில் நிலவும் மதிப்பினை பிரதிபலிக்காமல், ஒரு சில நிலங்களுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் நிர்ண யம் செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.வெளிச்சந்தையில் நிலவும் மதிப் பிற்கு ஏற்றவாறு அறிவியல் ரீதி யாக வழிகாட்டி மதிப்புகளை திருத்தி அமைக்க, மைய மதிப்பீட் டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழு ஆகியவை 2005-ம் ஆண்டு மே 8-ம் தேதி அமைக்கப்பட்டன.
அதன்படி நிர்ணயம் செய்யப் பட்ட மதிப்புகள் பதிவுத் துறை இணைய தளத்தில் வெளியிடப் பட்டன. சம்பந்தப்பட்ட சார்பதி வாளர் அலுவலகங்களிலும் பார் வைக்கு வைக்கப்பட்டன.2007-ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் நடைமு றைக்கு வந்தன.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மதிப்புகள், கிராமங்களைப் பொறுத்தவரை 1-4-2003 வழி காட்டி மதிப்பிலிருந்து சராசரி யாக 91.68 சதவீதமும், நகர்புறங்க ளைப் பொறுத்தவரை 80.79 சதவீ தம் மட்டுமே உயர்ந்துள்ளன. அந் தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற வாறு சரியான மதிப்புகள் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன.
பொது மக்கள் பாதிப்படையும் வகையில் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்ப டவில்லை.அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் இந்த மதிப்புகளை ஆராய்ந்து அங்கீகா ரம் செய்துள்ள நிலையில் குறை பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.குறைகள் இருப்பதாக பொதுமக்க ளிடம் இருந்து முறையீடுகள் வந் தால் அவை மாவட்ட குழுவில் வைத்து சரிசெய்ய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சுரேஷ் ராஜன்.
சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
திருப்பூர் பத்திரப் பதிவு அலுவலகம் 1-க்குப்பட்ட நெரிபெ ரிச்சல் ஊராட்சியில் பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு 2003-ம் ஆண்டு ரூ. 1,31,000 ஆக இருந்தது.தற்போது திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்புகளின் படி நிலத்தின் மதிப்பு ரூ. 69,32,400 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 5,292 சதவீதம் பத்திரப் பதிவுக் கான நில மதிப்பு உயர்ந்துள்ளது.
திருப்பூர் பத்திரப் பதிவு அலுவ லகம் 2-க்குட்பட்ட 15. வேலம்பா ளையம் மூன்றாம் நிலை நகராட்சி யில் 2003-ம் ஆண்டு பத்திரப் பதி வுக்கான ஒரு ஏக்கர் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு ரூ. 1,84,000 ஆக இருந்தது. திருத்தி அமைக்கப் பட்ட வழிகாட்டி மதிப்பின்படி நிலத்தின் மதிப்பு ரூ. 65 லட்சமாக அதாவது 3,554 சதவீதம் உயர்ந் துள்ளது.
இதனால் ஏழை மக்கள் 4 சென்ட் நிலம் வாங்கினால்கூட ரூ. 70,000 வரை பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் கடன் பெறுவதற்காக நிலத்தின் மதிப்பை அதிகமாக பதிவு செய்கிறார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு பத்திரப் பதிவு கட்டணம் அதிகமாகி உள்ளது. இதனை எதிர்த்து அப் பீல் செய்தாலும் 5 சதவீதம் மட் டுமே குறைக்கப்படுகிறது. சுமார் 5,000 சதவீதம் உயர்ந்துள்ளபோது 5 சதவீதம் குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை. எனவே அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் கோவிந்தசாமி
செந்தில் பாலாஜி (அதிமுக):
கரூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப் படு வதில்லை. இடைப்பட்ட காலத் தில் பதிவு செய்யப்பட்ட கட்ட ணங்களே இப்போதும் நடைமு றையில் உள்ளது.
அமைச்சர் சுரேஷ் ராஜன்:
திருத்தி அமைக்கப்பட்ட வழி காட்டி மதிப்பின்படிதான் பத்தி ரப் பதிவு நடைபெற்று வருகிறது.ஆனாலும் உறுப்பினர் தெரிவித்த தகவல் குறித்து ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment