சென்னை, ஏப். 21: இளம் வயது சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.எஸ்.எஸ். ராமன் கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
16 வயதுக்கு குறைவான இளம் வயதினர் சர்க்கரை நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சுலின் இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. எனவே அவர்களை ஊனமுற்றோர்களாக அறிவித்து சலுகைகள் வழங்க வேண்டும்.
கோயில் நிதியிலிருந்து இலவச திருமணம்:
திருப்பதி தேவஸ் தானம் மூலம் ஒரு ஜோடிக்கு ரூ.50,000 செலவில் இலவச திருமணங்களை ஆந்திர அரசு நடத்தி வருகிறது. அதனைப் பின்பற்றி தமிழகத்தில் பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியைப் பயன்படுத்தி இலவச திருமணங்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
முதியோர்களுக்கு மணியார்டர் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு உதவித் தொகை முழுமையாக கிடைப்பதில்லை. எனவே வங்கி மூலம் நேரிடையாக முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும்.
தனியார் நடத்தும் மறுவாழ்வு மையங்களை கண்காணிக்க அரசு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். சென்னையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அரசே நடத்த வேண்டும் என்றார் இ.எஸ்.எஸ்.ராமன்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment