Thursday, April 24, 2008

நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது

சென்னை, ஏப். 22: மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் பீட் டர் அல்போன்ஸýக்கு சென்றுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

முதல்வர் கருணாநிதி:

மாநில அரசிடம் உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிவதை திமுக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தில்லியில் நடக்கும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றால் ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகளை ஏற்றதாகி விடும். அந்த அவமôனத்துக்கு ஆளாக வேண்டாம் என்றுதான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்தோம். இந்த விஷயத்தில் நம்முடைய மனம் புண்பட்டிருப்பûத உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், புண்ணுக்கு மருந்தாக கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் எழுதிய கடிதம் அரசுக்கு வராமல் நண்பர் பீட்டர் அல்போன்ஸýக்கு வந்துள்ளது.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

கடிதத்தின் நகல் தான் எனக்கு வந்துள்ளது.

முதல்வர் கருணாநிதி:

நகலை அசலாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நமது அரசியல் சட்ட அமைப்பே அப்படி உள்ளது. அதனால்தான் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று கூறினோம். நம்முடைய கருத்தை மதித்து கடிதம் எழுதிய பிரதமர் மன் மோகன் சிங்குக்கு பேரவையின் சார்பிலும், அரசின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை மாற்றப் போவதில்லை என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகள் வெளியில் இருந்து மத்திய அரசை ஆதரிக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சாசனம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் வைக்கப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யாமல் எப்படி தேசிய வளர்ச்சி மன்றத்திலும், பிரதிநிதிகள் மாநாட்டிலும் வைக்க முடியும். இது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை.

ஜி.கே. மணி (பாமக):

மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக மாநில அரசின் நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கிறது. வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசு சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டதா?

அமைச்சர் மு.க. ஸ்டாலின்:

வரைவு சாசனம் தயாரிக்கும்போது தமிழக அரசின் சார்பில் எந்தக் குழுவும் அனுப்பப் படவில்லை.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

மத்திய அரசிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரங்களை தட்டிப் பறிப்பது கடும் கண்டனத்துக்குரியது. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தைப்போல மேற்கு வங்க அரசும் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.

சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசுக்கு மாற்றுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு நேர்மாறாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

No comments: