Friday, April 11, 2008

சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

சென்னை, ஏப். 9: சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ மாலைராஜா பேரவையில் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக உள்ள சைவ வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அது போல யாதவர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற நிலையை மாற்றி, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.குறைந்தபட்சமாக ரூ. ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 2,400-ம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் தனி போக்குவரத்து கோட்டம் உருவாக்க வேண் டும். விபத்துகளை தடுப்பதற்காக டிரைவர், கன்டக்டர்களுக்கு விபத்து விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்.ஏ.சி. பஸ்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே குறைந்தது 50 வால்வோ பஸ்களையாவது அரசு விட வேண்டும்.உத்தரப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் நஷ்டம் காரணமாக போக்கு வரத்துத் தறை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் வெளிநாடுகளில் உள்ளதுபோன்ற தரமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரை யொட்டியுள்ள சுத்தமல்லி பஞ்சாயத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றார் மாலைராஜா.

No comments: