Friday, April 11, 2008

விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைத்தால் சலுகை

சென்னை, ஏப். 11: விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க தனியார் முன்வந்தால் தமிழக அரசு அறிவித்த சிறு தொழில் கொள்கையில் கூறப்பட் டுள்ளபடி சலுகைகள் வழங்கப்ப டும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச் சாமி தெரிவித்தார்.பேரவையில் வெள்ளிக்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

இரா. மாணிக்கம் (திமுக):

குளித்தலை பகுதியில் நெல் அதிக மாக விளைவதால் அங்கு நவீன அரிசி ஆலை அமைக்க அரசு முன் வருமா?

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

கரூர் மாவட்டத்தில் 50 கூலி அரிசி ஆலைகளும், ஆறு நவீன அரிசி ஆலைகளும் உள் ளன. குளித்தலையில் நவீன அரிசி ஆலை எதுவும் இல்லை.தமிழக அரசு அறி வித்துள்ள சிறு தொழில் கொள்கை யின்படி விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க முன் வருபவர்களுக்கு 15 சதவீத முதலீட்டு மானியம், மூன்று ஆண்டுகளுக்கு மூன்று சத வீத மின் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும்

.எஸ். மணி (திமுக):

பொங்க லூர் தொகுதி கண்டியன்கோயி லில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

பொங்கலூர் தொகுதி கண்டியன்கோயிலில் இந்த ஆண்டு தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

எம்.ஆர். சுந்தரம் (காங்கிரஸ்):

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு சார்பில் நவீன ஜவ்வரிசி ஆலை அமைக்கப்படுமா?

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

ஆத்தூர் பகுதியில் 400-க்கும் அதிகமான ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. அதில் 30 ஆலைகள் நலிவடைந்த நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது.ஜவ்வரிசி ஆலை அமைக்க தனி யார் யாராவது முன்வந்தால் சிறு தொழில் கொள்கையில் அறிவித்த படி மானியம் வழங்கப்படும்.

No comments: