Friday, April 11, 2008

அனுமதி பெறாத ஆசிரியர் பள்ளியில் படித்தவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா?

சென்னை, ஏப். 10: அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள் ளிகளில் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் வியாழக் கிழமை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில ளித்து அவர் பேசியதாவது:

அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பற்றி அரசு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகிறது. இந்த விளம்பரத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதையும் மீறி சிலர் இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் சேர்கிறார்கள்.பின்னர் பள்ளி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

இந்த ஒருமுறை மாணவர் களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இனி அனுமதி பெறாத பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேராத நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அங்கீகாரம் இல்லாத பயிற்சிப் பள்ளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கம் தென்னரசு:

இந்த ஒருமுறை தேர்வு எழுத அனும தித்தால் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடி யாது. இது மனிதாபிமான பிரச்னை என்பதால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும்.

No comments: