சென்னை, ஏப். 3: தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய, ஆன்-லைன் மூலம் தினமும் 11,000 டிக்கெட் டுகள் முன்பதிவு செய்யப்படுவ தாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வியாழக்கி ழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவா தம்:
டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்):
இரண்டு ரூபாய் டோக்கன் மூலம் அரசுப் பேருந்து களில் முன்பதிவு செய்ய, முன்பு வசதி இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீண்டும் இந்த வசதியை ஏற்படுத்த வேண் டும்.
அமைச்சர் கே.என். நேரு:
இப் போது ஆன்-லைன் மூலம் முன்ப திவு செய்யும் வசதி உள்ளது. அர சுப் பேருந்துகளில் பயணம் செய்ய, ஆன்-லைன் மூலம் தின மும் 11,000 டிக்கெட்டுகள் முன்ப திவு செய்யப்படுகின்றன.கோயம்பேடு பேருந்து நிலை யத்தில், டோக்கன் மூலம் முன்ப திவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டு வருவது பற்றி அதிகாரி களுடன் பேசி முடிவு எடுக்கப்ப டும்.
என்.ஆர். ரங்கராஜன் (காங்கி ரஸ்):
பட்டுக்கோட்டையில் இருந்து புதுச்சேரிக்கு புதிதாக பேருந்துகள் இயக்கப்படுமா?
அமைச்சர் கே.என். நேரு:
பட் டுக்கோட்டையில் இருந்து மதுக் கூர், மன்னார்குடி, வடலூர், புதுச் சேரி, கடலூர் வழியாக சென்னை வரும் தடத்தின் நீளம் 205 கி.மீ ஆகும். இரு மாநில அரசின் ஒப்பு தல் பெற்று, இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க அரசு நடவ டிக்கை எடுக்கும்.
தமிழரசு (பாமக):
சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் அர சுப் பேருந்துகள் ஓமலூர் பஸ் நிலையத்துக்கு வருவதில்லை.எனவே ஓமலூரில் இருந்து பெங்க ளூருக்கு பேருந்துகள் இயக்க அரசு முன்வருமா?
அமைச்சர் கே.என். நேரு:
ஓமலூரில் இருந்து சேலம் வந்துச் செல்ல பேருந்துகள் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment