Friday, April 4, 2008

அமைதியாக இருக்க முடியாது

சென்னை, ஏப். 3: பக்கத்து மாநில மான கர்நாடகத்தில் தமிழர்கள் தாக் கப்படும்போது, முதல்வர் என்ற முறையில், அமைதியாக இருக்க முடி யாது என்று தமிழக முதல்வர் கரு ணாநிதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

பக்கத்து மாநிலமான கர்நாடகத் தில் தமிழக பஸ்கள் எரிக்கப்படும் போதும், பெங்களூர் தமிழ்சங்கம் தாக்கப்படும்போதும், தமிழக மக்கள் பயத்துடன் இருக்கும்போதும் முதல் வர் என்ற முறையில் நான் அமைதி யாக இருக்க முடியாது.""கர்நாடகத்தில் எதிரொலித்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு, நாங்கள் மூத்த அரசியல் தலைவராக மதிக்கும் தமிழக முதல்வர் கருணா நிதி தெரிவித்த, சில கடுமையாக வார்த்தைகளே காரணம்'' என்று கர் நாடக முன்னாள் முதல்வரும் எனது நீண்டநாள் நண்பருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக பத்திரிகைக ளில் செய்தி வந்துள்ளது. இது என்னை மிகுந்த வேதனைக்குள் ளாக்கி இருக்கிறது.

கர்நாடகத்திற்கு எதிராக நான் பொது இடங்களிலோ அல்லது ஏப் ரல் 1-ம் தேதி சட்டப் பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசும்போதோ கடுமையான வார்த் தைகள் எதையும் பயன்படுத்த வில்லை.ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா, கூறியபடி, நான் என்ன பேசினேன் என்பதை சுருக்கமாக தருகிறேன்.""நாம் சகோதர மனப்பான்மையுடன் இருப்பவர்கள். நாம் ஒருவருக்கொரு வர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்ற கொள்கை உடைய வன்.சில சமூக விரோதிகள் இதில் ஆதாயம்தேட முயற்சி செய்து வருகி றார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற் காக பொறுமை காத்து வருகிறேன்'' என்று தான், நான் பேசினேன்.

என் னுடைய இந்தப் பேச்சு மார்ச் 31-ம் தேதி நாளிதழ்களில் வெளி வந்துள் ளது. அவற்றின் சுருக்கம்: ஒகேனக்கல் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாக முதல்வர் கூறியுள்ளார். இந்தத் திட் டத்துக்கு கர்நாடக அரசும் அனுமதி அளித்து விட்டது.இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், அரசியல் லாபத்துக்காக இந்தப் பிரச்னையை பெரிதுபடுத்தி சதிச் செயல்களில் ஈடு பட்டுள்ளனர் என்று தமிழக முதல் வர் கூறியுள்ளார்.எனது பேச்சைக் கவனமாகக் கவ னித்தால், என் வார்த்தைகளை யாரும் தவறாக பயன்படுத்த முடி யாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.தமிழகத்தின் உரிமைக்காக, ஜன நாயக முறைப்படி சட்டத்துக்கு உள் பட்டு தமிழக அரசு போராடி வருகி றது என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: