Friday, April 4, 2008

அங்கன்வாடி மையங்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுவதில்லை: பாமக புகார்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் சில அங்கன்வாடி மையங்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பாமக எம்.எல்.ஏ. கே.வி. ராமநா தன் குற்றம்சாட்டினார்.பேரவையில் வியாழக்கிழமை, கேள்வி நேரத்தின்போது இதுகு றித்து நடைபெற்ற விவாதம்:

கே.வி. ராமநாதன் (பாமக):

அங்கன்வாடி மையங்களில் குழந் தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்க வேண்டும்.தரமான உணவு வழங்க, தரமான அரிசி வழங்க வேண்டும்.சில மையங்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. சமைப்ப தற்கு எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும். பவானி தொகுதி, அட் டவணைப்புதூர் கிராமம், கோண மூக்கனூரில் அங்கன்வாடி மையம் கட்ட அரசு முன்வருமா?

அமைச்சர் பூங்கோதை:

அட்ட வணைப்புதூர் ஊராட்சியில் அங் கன்வாடி மையத்துக்கு நிலம் ஒதுக்க அந்த ஊராட்சியில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சமூக நலத்துறையின் கீழ் நிலம் பதிவு செய்யப்பட்ட பிறகு சொந் தக் கட்டடம் கட்டப்படும்.தமிழகத்தில் 50,043 அங்கன் வாடி மையங்கள் உள்ளன. அவற் றில் 80 சதவீத மையங்கள் சொந் தக் கட்டடத்தில் இயங்குகின்றன.தற்போது இதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை.சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்துதான் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

எல்லா மையங்களுக் கும் தரமான அரிசியும், பருப்பும் அனுப்பப்படுகிறது.கடந்த அதிமுக ஆட்சியில் மைசூர் பருப்பு என்ற பெயரில் தர மற்ற பருப்பு வழங்கப்பட்டது.திமுக ஆட்சிக்கு வந்ததும் தர மான துவரம் பருப்பு வழங்கப்படு கிறது. இந்தியாவிலேயே அங்கன் வாடி மையங்கள் தமிழகத்தில் தான் சிறப்பாகச் செயல்படுகின் றன.

No comments: