சென்னை, மார்ச் 20: ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 5.5 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.இது குறித்த விவரம்:
ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 5.5 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிட மாணவர்களுக்காக வரும் நிதி ஆண்டில் 25 புதியமாணவர் இல்லங்கள் திறக்கப்படும். தனியார் கட்டடங்களில்செயல்பட்டு வரும் 25 மாணவர் இல்லங்களுக்கு ரூ. 12.5 கோடிசெலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
எட்டு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளிகளும், மூன்று பழங்குடியினர் உறைவிட நடுநிலைப் பள்ளிகளும் ரூ. 3.68 கோடி செலவில்உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment