Friday, April 4, 2008

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?

சென்னை, ஏப். 2: விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு இடையே சட்டப் பேரவையில் மோதல் ஏற்பட்டது.பேரவையில் புதன்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

விலைவாசி உயர்ந்துள்ளது.ஆனால் பற்றாக்குறை இல்லை. பணம் இருந்தால் எவ்வளவு தங்கமும் வாங்கலாம். சிமென்ட்டும் வாங்கலாம்.கடத்தல் பேர்வழிகளாலும், பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலை வாசி உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அமைச் சரவைக் கூட்டத்தை கூட்டி, மத்திய அரசு சில நடவடிக்கைகள் எடுத் துள்ளது. அதன் விளைவாக விலைகள் குறையத் தொடங்கி உள்ளன.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

விலைவாசி உயர்வுக்கு பதுக் கல்காரர்கள் மட்டும் காரணம் அல்ல. ஆன் லைன் வர்த்தகம்தான் விலை உயர்வுக்குக் காரணம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத் திய அரசிடம் சரியான கொள்கை இல்லை.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

நல்லது நடந்தால் அதற்கு கம்யூ னிஸ்ட்டுகள் காரணம். தவறு நடந்தால் அதற்கு காங்கிரஸ்தான் கார ணம் என்ற ஒரு கொள்கையை கம்யூனிஸ்ட்டுகள் கடைப்பிடிக்கின்றனர்.

வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):

பீட்டர் அல்போன்ஸ் சொல்வது சரிதான். காங்கிரஸ் அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம்.தவறு செய்தால் கண்டிப்போம்.நன்மாறன் (மார்க்சிஸ்ட்):விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியது காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் காலம் கடந்து எடுக் கப்பட்ட நடவடிக்கை.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

மேற்கு வங்க முதல்வரே, நேரிடையாக நந்திகிராம் சென்று, மக்கள் அனுமதி இல்லாமல் கையளவு நிலம்கூட எடுக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார். அதன் பிறகும் அரசியல் ஆதாயத்துக்காக இந்தப் பிரச்னையை சிலர் பெரிதுபடுத்தி வருகிறார்கள்.

No comments: